Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௫௨

Qur'an Surah Ash-Shu'ara Verse 52

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَاَوْحَيْنَآ اِلٰى مُوْسٰٓى اَنْ اَسْرِ بِعِبَادِيْٓ اِنَّكُمْ مُّتَّبَعُوْنَ (الشعراء : ٢٦)

wa-awḥaynā
وَأَوْحَيْنَآ
And We inspired
நாம் வஹீ அறிவித்தோம்
ilā mūsā
إِلَىٰ مُوسَىٰٓ
to Musa
மூஸாவிற்கு
an asri
أَنْ أَسْرِ
[that] "Travel by night
இரவில் அழைத்துச் செல்லுங்கள்
biʿibādī
بِعِبَادِىٓ
with My slaves
எனது அடியார்களை
innakum
إِنَّكُم
indeed you
நிச்சயமாக நீங்கள்
muttabaʿūna
مُّتَّبَعُونَ
(will be) followed"
பின்தொடரப்படுவீர்கள்

Transliteration:

Wa awhainaaa ilaa Moosaaa an asri bi'ibaadeee innakum muttaba'oon (QS. aš-Šuʿarāʾ:52)

English Sahih International:

And We inspired to Moses, "Travel by night with My servants; indeed, you will be pursued." (QS. Ash-Shu'ara, Ayah ௫௨)

Abdul Hameed Baqavi:

பின்னர், மூஸாவுக்கு நாம் வஹீ அறிவித்ததாவது: "(இஸ்ராயீலின் சந்ததிகளாகிய) என்னுடைய அடியார்களை அழைத்துக்கொண்டு நீங்கள் இரவோடு இரவாக சென்றுவிடுங்கள். எனினும், நிச்சயமாக அவர்கள் உங்களைப் பின்தொடர்ந்தே வருவார்கள்" (என்றோம்). (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௫௨)

Jan Trust Foundation

மேலும், “நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு, இரவோடு இரவாகச் சென்று விடும்; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்” என்று நாம் மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் மூசாவிற்கு வஹ்யி அறிவித்தோம்: “எனது அடியார்களை இரவில் அழைத்துச் செல்லுங்கள். நிச்சயமாக நீங்கள் (உங்கள் எதிரிகளால்) பின்தொடரப்படுவீர்கள்.