Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௮

Qur'an Surah Ash-Shu'ara Verse 28

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَاۗ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ (الشعراء : ٢٦)

qāla
قَالَ
He said
அவர் கூறினார்
rabbu
رَبُّ
"Lord
இறைவன்
l-mashriqi
ٱلْمَشْرِقِ
(of) the east
கிழக்கு திசை
wal-maghribi
وَٱلْمَغْرِبِ
and the west
இன்னும் மேற்கு திசை
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَآۖ
and whatever (is) between them
இன்னும் அவை இரண்டுக்கும்இடையில்உள்ளவற்றின்
in kuntum
إِن كُنتُمْ
if you were
நீங்கள் இருந்தால்
taʿqilūna
تَعْقِلُونَ
(to) reason"
சிந்தித்துபுரிபவர்களாக

Transliteration:

Qaala Rabbul mashriqi wal maghribi wa maa baina humaa in kuntum ta'qiloon (QS. aš-Šuʿarāʾ:28)

English Sahih International:

[Moses] said, "Lord of the east and the west and that between them, if you were to reason." (QS. Ash-Shu'ara, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

அதற்கு (மூஸா) "கீழ் நாட்டையும் மேல் நாட்டையும் இதற்கு மத்தியிலுள்ள தேசங்களையும் படைத்து காப்பவன் (அவன்தான்). நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (இதனை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்)" என்று கூறினார். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௮)

Jan Trust Foundation

(அதற்கு மூஸா) “நீங்கள் உணர்ந்து கொள்பவர்களாக இருப்பீர்களாயின், அவனே கிழக்கிற்கும், மேற்கிற்கும், இன்னும் இவ்விரண்டிற்குமிடையே இருப்பவற்றிற்கும் இறைவன் ஆவான்” எனக் கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் கூறினார்: (நீங்கள் யாரை வணங்க வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேனோ அவன்தான் சூரியன் உதிக்கும்) கிழக்கு திசை(களில் உள்ள எல்லா நாடுகளுக்கும்) இன்னும் (சூரியன் மறைகின்ற) மேற்கு திசை(களில் உள்ள எல்லா நாடுகளுக்கும்) இன்னும் (நாடுகளில்) அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் ஆவான். நீங்கள் சிந்தித்து புரிபவர்களாக இருந்தால் (இதை புரிவீர்கள். எனவே, சிந்தியுங்கள்!)