Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௮

Qur'an Surah Ash-Shu'ara Verse 18

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ اَلَمْ نُرَبِّكَ فِيْنَا وَلِيْدًا وَّلَبِثْتَ فِيْنَا مِنْ عُمُرِكَ سِنِيْنَ ۗ (الشعراء : ٢٦)

qāla
قَالَ
He said
அவன் கூறினான்
alam nurabbika
أَلَمْ نُرَبِّكَ
"Did not we bring you up
நாம் உம்மை வளர்க்கவில்லையா?
fīnā
فِينَا
among us
எங்களில்
walīdan
وَلِيدًا
(as) a child
குழந்தையாக
walabith'ta
وَلَبِثْتَ
and you remained
இன்னும் தங்கியிருந்தாய்
fīnā
فِينَا
among us
எங்களுடன்
min ʿumurika
مِنْ عُمُرِكَ
of your life
உமது வாழ்க்கையில்
sinīna
سِنِينَ
years?
ஆண்டுகள்

Transliteration:

Qaala alam nurabbika feenaa waleedanw wa labista feenaa min 'umurika sineen (QS. aš-Šuʿarāʾ:18)

English Sahih International:

[Pharaoh] said, "Did we not raise you among us as a child, and you remained among us for years of your life? (QS. Ash-Shu'ara, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

(அவ்வாறே அவர்கள் ஃபிர்அவ்னிடம் சென்று கூறவே) அதற்கவன் (மூஸாவை நோக்கி) "நாங்கள் உங்களைக் குழந்தையாக எடுத்துக் கொண்டு வளர்க்கவில்லையா? நீங்கள் (உங்கள் வாலிபத்தை அடையும் வரையில்) பல வருடங்கள் நம்மிடம் வாழ்ந்திருந்தீர்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௮)

Jan Trust Foundation

(ஃபிர்அவ்ன்) கூறினான்| நீர் குழந்தையாக இருந்தபோது நாம் உம்மை எங்களிடம் வைத்து வளர்க்கவில்லையா? இன்னும், உம் வயதில் பல ஆண்டுகள் எங்களிடத்தில் நீர் தங்கியிருக்கவில்லையா? (எனக் கூறினான்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் (-ஃபிர்அவ்ன்) கூறினான்: “நாம் உம்மை எங்களில் குழந்தையாக வளர்க்கவில்லையா? எங்களுடன் உமது வாழ்க்கையில் (பல) ஆண்டுகள் தங்கியிருந்தாய் (அல்லவா!)