குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௫
Qur'an Surah Ash-Shu'ara Verse 15
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ كَلَّاۚ فَاذْهَبَا بِاٰيٰتِنَآ اِنَّا مَعَكُمْ مُّسْتَمِعُوْنَ ۙ (الشعراء : ٢٦)
- qāla
- قَالَ
- He said
- அவன் கூறினான்
- kallā
- كَلَّاۖ
- "Nay
- அவ்வாறல்ல!
- fa-idh'habā
- فَٱذْهَبَا
- go both of you
- நீங்கள் இருவரும் செல்லுங்கள்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَآۖ
- with Our Signs
- எனது அத்தாட்சிகளை கொண்டு
- innā maʿakum
- إِنَّا مَعَكُم
- Indeed We (are) with you
- நிச்சயமாக நாம் உங்களுடன்
- mus'tamiʿūna
- مُّسْتَمِعُونَ
- listening
- செவியேற்பவர்களாக
Transliteration:
Qaala kallaa fazhabaa bi Aayaatinaaa innaa ma'akum mustami'oon(QS. aš-Šuʿarāʾ:15)
English Sahih International:
[Allah] said, "No. Go both of you with Our signs; indeed, We are with you, listening. (QS. Ash-Shu'ara, Ayah ௧௫)
Abdul Hameed Baqavi:
அதற்கு (இறைவன்) கூறியதாவது: "அவ்வாறன்று (பயப்படாதீர்கள்; ஹாரூனையும் அழைத்துக் கொண்டு) நீங்கள் இருவரும் என்னுடைய அத்தாட்சிகளை (எடுத்து)க் கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் இருந்து (அனைத்தையும்) கேட்டுக் கொண்டிருப்பேன். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௫)
Jan Trust Foundation
(அதற்கு இறைவன்) அவ்வாறல்ல! நீங்கள் இருவரும் நம் அத்தாட்சிகளுடன் செல்லுங்கள் - நிச்சயமாக நாம் உங்களுடன் (யாவற்றையும்) செவியேற்போராக இருக்கின்றோம்” எனக் கூறினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் (-அல்லாஹ்) கூறினான்: அவ்வாறல்ல! நீங்கள் இருவரும் எனது அத்தாட்சிகளைக் கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக நாம் உங்களுடன் (அனைத்தையும்) செவியேற்பவர்களாக (இன்னும் பார்ப்பவர்களாக) இருக்கிறோம்.