Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௩௨

Qur'an Surah Ash-Shu'ara Verse 132

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاتَّقُوا الَّذِيْٓ اَمَدَّكُمْ بِمَا تَعْلَمُوْنَ ۚ (الشعراء : ٢٦)

wa-ittaqū
وَٱتَّقُوا۟
And fear
அஞ்சிக் கொள்ளுங்கள்!
alladhī
ٱلَّذِىٓ
One Who
உதவியவனை
amaddakum
أَمَدَّكُم
has aided you
உங்களுக்கு
bimā taʿlamūna
بِمَا تَعْلَمُونَ
with what you know
நீங்கள் அறிந்தவற்றைக் கொண்டு

Transliteration:

Wattaqul lazeee amad dakum bimaa ta'lamoon (QS. aš-Šuʿarāʾ:132)

English Sahih International:

And fear He who provided you with that which you know, (QS. Ash-Shu'ara, Ayah ௧௩௨)

Abdul Hameed Baqavi:

உங்களுக்குத் தெரிந்திருக்கும் பல பொருள்களையும், எவன் உங்களுக்குக் கொடுத்து உதவி புரிந்தானோ அவனுக்கு நீங்கள் பயப்படுங்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௩௨)

Jan Trust Foundation

“மேலும், நீங்கள் அறிந்திருக்கும் (பாக்கியமான பொருள்களையெல்லாம் கொண்டு) உங்களுக்கு உதவியளித்தவனை அஞ்சுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் அறிந்தவற்றைக் கொண்டு உங்களுக்கு உதவிய (உங்கள் இறை)வனை அஞ்சிக் கொள்ளுங்கள்! (அவன் செய்த உதவிகளை நீங்கள் அறிவீர்கள்.)