Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௧௬

Qur'an Surah Ash-Shu'ara Verse 116

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا لَىِٕنْ لَّمْ تَنْتَهِ يٰنُوْحُ لَتَكُوْنَنَّ مِنَ الْمَرْجُوْمِيْنَۗ (الشعراء : ٢٦)

qālū
قَالُوا۟
They said
அவர்கள் கூறினர்
la-in lam tantahi
لَئِن لَّمْ تَنتَهِ
"If not you desist
நீர் விலகவில்லை என்றால்
yānūḥu
يَٰنُوحُ
O Nuh!
நூஹே!
latakūnanna
لَتَكُونَنَّ
Surely you will be
நிச்சயமாக நீர் ஆகிவிடுவீர்
mina l-marjūmīna
مِنَ ٱلْمَرْجُومِينَ
of those who are stoned
ஏசப்படுபவர்களில்

Transliteration:

Qaaloo la'il lam tantahi yaa Noohu latakoonanna minal marjoomeen (QS. aš-Šuʿarāʾ:116)

English Sahih International:

They said, "If you do not desist, O Noah, you will surely be of those who are stoned." (QS. Ash-Shu'ara, Ayah ௧௧௬)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "நூஹே! நீங்கள் இதனை விட்டும் விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நீங்கள் கல்லெறிந்து கொல்லப் படுவீர்கள்" என்று கூறினார்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௧௬)

Jan Trust Foundation

அதற்கவர்கள் கூறினார்கள்| “நூஹே! நீர் (உம் பிரச்சாரத்தை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் கல்லாலெறிந்து கொல்லப்படுவீர்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறினர்: “நூஹே! நீர் விலகவில்லை என்றால் நிச்சயமாக நீர் ஏசப்படுபவர்களில் (அல்லது கொல்லப்படுபவர்களில்) ஆகிவிடுவீர்.”