Skip to content

ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா - Page: 7

Ash-Shu'ara

(aš-Šuʿarāʾ)

௬௧

فَلَمَّا تَرَاۤءَ الْجَمْعٰنِ قَالَ اَصْحٰبُ مُوْسٰٓى اِنَّا لَمُدْرَكُوْنَ ۚ ٦١

falammā tarāā
فَلَمَّا تَرَٰٓءَا
ஒருவரை ஒருவர் பார்த்தபோது
l-jamʿāni
ٱلْجَمْعَانِ
இரண்டு படைகளும்
qāla
قَالَ
கூறினர்
aṣḥābu
أَصْحَٰبُ
தோழர்கள்
mūsā
مُوسَىٰٓ
மூஸாவின்
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
lamud'rakūna
لَمُدْرَكُونَ
பிடிக்கப்பட்டோம்
இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்ட பொழுது "நிச்சயமாக நாம் அகப்பட்டுக் கொண்டோம்" என்று மூஸாவுடைய மக்கள் கூறினார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௬௧)
Tafseer
௬௨

قَالَ كَلَّاۗ اِنَّ مَعِيَ رَبِّيْ سَيَهْدِيْنِ ٦٢

qāla
قَالَ
அவர் கூறினார்
kallā
كَلَّآۖ
அவ்வாறல்ல
inna
إِنَّ
நிச்சயமாக
maʿiya
مَعِىَ
என்னுடன் இருக்கின்றான்
rabbī
رَبِّى
என் இறைவன்
sayahdīni
سَيَهْدِينِ
அவன் எனக்கு விரைவில் வழிகாட்டுவான்
அதற்கு (மூஸா) "அவ்வாறன்று. நிச்சயமாக என்னுடைய இறைவன் என்னுடன் இருக்கின்றான். (நாம் தப்பிக்கும்) வழியை நிச்சயமாக அவன் நமக்கு அறிவிப்பான்" என்றார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௬௨)
Tafseer
௬௩

فَاَوْحَيْنَآ اِلٰى مُوْسٰٓى اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْبَحْرَۗ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيْمِ ۚ ٦٣

fa-awḥaynā
فَأَوْحَيْنَآ
நாம் வஹீ அறிவித்தோம்
ilā mūsā
إِلَىٰ مُوسَىٰٓ
மூஸாவிற்கு
ani iḍ'rib
أَنِ ٱضْرِب
அடிப்பீராக! என்று
biʿaṣāka
بِّعَصَاكَ
உமது தடியைக் கொண்டு
l-baḥra
ٱلْبَحْرَۖ
கடலை
fa-infalaqa
فَٱنفَلَقَ
ஆக, அது பிளந்தது
fakāna
فَكَانَ
இருந்தது
kullu
كُلُّ
ஒவ்வொரு
fir'qin
فِرْقٍ
பிளவும்
kal-ṭawdi
كَٱلطَّوْدِ
மலைப் போன்று
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ
பெரிய
ஆகவே, நாம் மூஸாவை நோக்கி "நீங்கள் உங்களுடைய தடியினால் இந்தக் கடலை அடியுங்கள்" என வஹீ அறிவித்தோம். (அவர் அடிக்கவே) அது (பல வழிகளாகப்) பிளந்துவிட்டது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலைகளைப் போல் இருந்தது. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௬௩)
Tafseer
௬௪

وَاَزْلَفْنَا ثَمَّ الْاٰخَرِيْنَ ۚ ٦٤

wa-azlafnā
وَأَزْلَفْنَا
நாம் நெருக்க மாக்கினோம்
thamma
ثَمَّ
பின்
l-ākharīna
ٱلْءَاخَرِينَ
மற்றவர்களை
(பின் சென்ற) மற்ற மக்களையும் அதனை நெருங்கச் செய்தோம். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௬௪)
Tafseer
௬௫

وَاَنْجَيْنَا مُوْسٰى وَمَنْ مَّعَهٗٓ اَجْمَعِيْنَ ۚ ٦٥

wa-anjaynā
وَأَنجَيْنَا
நாம் பாதுகாத்தோம்
mūsā
مُوسَىٰ
மூசாவையும்
waman maʿahu
وَمَن مَّعَهُۥٓ
இன்னும் , அவருடன் இருந்தவர்களை
ajmaʿīna
أَجْمَعِينَ
அனைவரையும்
மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௬௫)
Tafseer
௬௬

ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِيْنَ ۗ ٦٦

thumma
ثُمَّ
பிறகு
aghraqnā
أَغْرَقْنَا
மூழ்கடித்தோம்
l-ākharīna
ٱلْءَاخَرِينَ
மற்றவர்களை
பின்னர் (அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற) மற்ற அனைவரையும் மூழ்கடித்து விட்டோம். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௬௬)
Tafseer
௬௭

اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً ۗوَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ ٦٧

inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில் இருக்கிறது
laāyatan
لَءَايَةًۖ
ஓர் அத்தாட்சி
wamā kāna
وَمَا كَانَ
இல்லை
aktharuhum
أَكْثَرُهُم
அதிகமானவர்கள் அவர்களில்
mu'minīna
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக
நிச்சயமாக இ(ச்சம்பவத்)தில் ஒரு பெரும் படிப்பினை இருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதனை நம்பவில்லை. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௬௭)
Tafseer
௬௮

وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ ࣖ ٦٨

wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
rabbaka lahuwa
رَبَّكَ لَهُوَ
உமது இறைவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
பெரும் கருணையாளன்
(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன்தான் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கிறான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௬௮)
Tafseer
௬௯

وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ اِبْرٰهِيْمَ ۘ ٦٩

wa-ut'lu
وَٱتْلُ
ஓதுவீராக!
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
naba-a
نَبَأَ
செய்தியை
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
இப்ராஹீமுடைய
(நபியே!) அவர்களுக்கு இப்ராஹீமுடைய சரித்திரத்தையும் ஓதிக் காண்பியுங்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௬௯)
Tafseer
௭௦

اِذْ قَالَ لِاَبِيْهِ وَقَوْمِهٖ مَا تَعْبُدُوْنَ ٧٠

idh qāla
إِذْ قَالَ
கூறிய சமயத்தை
li-abīhi
لِأَبِيهِ
தனது தந்தைக்கும்
waqawmihi
وَقَوْمِهِۦ
தனது மக்களுக்கும்
mā taʿbudūna
مَا تَعْبُدُونَ
நீங்கள் யாரை வணங்குகிறீர்கள்?
அவர், தன் தந்தையையும் தன் மக்களையும் நோக்கி "நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?" என்று கேட்டதற்கு, ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௭௦)
Tafseer