Skip to content

ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா - Page: 5

Ash-Shu'ara

(aš-Šuʿarāʾ)

௪௧

فَلَمَّا جَاۤءَ السَّحَرَةُ قَالُوْا لِفِرْعَوْنَ اَىِٕنَّ لَنَا لَاَجْرًا اِنْ كُنَّا نَحْنُ الْغٰلِبِيْنَ ٤١

falammā jāa
فَلَمَّا جَآءَ
வந்த போது
l-saḥaratu
ٱلسَّحَرَةُ
சூனியக்காரர்கள்
qālū
قَالُوا۟
கூறினர்
lifir'ʿawna
لِفِرْعَوْنَ
ஃபிர்அவ்னிடம்
a-inna lanā
أَئِنَّ لَنَا
எங்களுக்கு உண்டா
la-ajran
لَأَجْرًا
திட்டமாக கூலி
in kunnā
إِن كُنَّا
நாங்கள் ஆகிவிட்டால்
naḥnu
نَحْنُ
நாங்கள்
l-ghālibīna
ٱلْغَٰلِبِينَ
வெற்றியாளர்களாக
சூனியக்காரர்கள் அனைவரும் வந்தபொழுது அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி "மெய்யாகவே நாங்கள் வெற்றிபெற்றால் அதற்குரிய கூலி எங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௪௧)
Tafseer
௪௨

قَالَ نَعَمْ وَاِنَّكُمْ اِذًا لَّمِنَ الْمُقَرَّبِيْنَ ٤٢

qāla
قَالَ
அவன் கூறினான்
naʿam
نَعَمْ
ஆம்
wa-innakum
وَإِنَّكُمْ
இன்னும் நிச்சயமாக நீங்கள்
idhan
إِذًا
அப்போது
lamina l-muqarabīna
لَّمِنَ ٱلْمُقَرَّبِينَ
நெருக்கமானவர்களில்
அதற்கவன் "ஆம் (கூலி உண்டு.... கூலி மட்டுமா?) அந்நேரத்தில் நீங்கள் (நம்முடைய சந்நிதியிலும் வீற்றிருக்கக்கூடிய) நமக்கு நெருங்கிய பிரமுகர்களாகவும் ஆகிவிடுவீர்கள்" என்று கூறினான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௪௨)
Tafseer
௪௩

قَالَ لَهُمْ مُّوْسٰٓى اَلْقُوْا مَآ اَنْتُمْ مُّلْقُوْنَ ٤٣

qāla
قَالَ
கூறினார்
lahum
لَهُم
அவர்களுக்கு
mūsā
مُّوسَىٰٓ
மூசா
alqū
أَلْقُوا۟
எறியுங்கள்
مَآ
எதை
antum
أَنتُم
நீங்கள்
mul'qūna
مُّلْقُونَ
எறியப் போகிறீர்களோ
அவர்களை நோக்கி மூஸா "நீங்கள் (சூனியம் செய்ய) எறியக்கூடியதை எறியுங்கள்" எனக் கூறினார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௪௩)
Tafseer
௪௪

فَاَلْقَوْا حِبَالَهُمْ وَعِصِيَّهُمْ وَقَالُوْا بِعِزَّةِ فِرْعَوْنَ اِنَّا لَنَحْنُ الْغٰلِبُوْنَ ٤٤

fa-alqaw
فَأَلْقَوْا۟
ஆகவே, அவர்கள் எறிந்தனர்
ḥibālahum
حِبَالَهُمْ
தங்கள் கயிறுகளை
waʿiṣiyyahum
وَعِصِيَّهُمْ
இன்னும் தங்கள் தடிகளை
waqālū
وَقَالُوا۟
இன்னும் அவர்கள் கூறினர்
biʿizzati
بِعِزَّةِ
கௌரவத்தின் மீது சத்தியமாக!
fir'ʿawna
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுடைய
innā lanaḥnu
إِنَّا لَنَحْنُ
நாங்கள்தான் நிச்சயமாக
l-ghālibūna
ٱلْغَٰلِبُونَ
வெற்றியாளர்கள்
ஆகவே, அவர்கள் தங்களுடைய தடிகளையும், கயிறுகளையும் எறிந்து "ஃபிர்அவ்னுடைய கௌரவத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாய் நாங்களே வென்றுவிட்டோம்" என்று கூறினார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௪௪)
Tafseer
௪௫

فَاَلْقٰى مُوْسٰى عَصَاهُ فَاِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُوْنَ ۚ ٤٥

fa-alqā
فَأَلْقَىٰ
ஆகவே அவர் எறிந்தார்
mūsā
مُوسَىٰ
மூசா
ʿaṣāhu
عَصَاهُ
தனது தடியை
fa-idhā
فَإِذَا
ஆகவே, உடனே
hiya
هِىَ
அது
talqafu
تَلْقَفُ
விழுங்கியது
mā yafikūna
مَا يَأْفِكُونَ
அவர்கள் வித்தைகாட்டிய அனைத்தையும்
பிறகு மூஸாவும் தன் தடியை எறிந்தார். அது (பெரியதொரு பாம்பாகி,) அவர்கள் கற்பனை செய்திருந்த சூனியங்கள் அனைத்தையும் விழுங்க ஆரம்பித்துவிட்டது. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௪௫)
Tafseer
௪௬

فَاُلْقِيَ السَّحَرَةُ سٰجِدِيْنَ ۙ ٤٦

fa-ul'qiya
فَأُلْقِىَ
உடனே, விழுந்தனர்
l-saḥaratu
ٱلسَّحَرَةُ
சூனியக்காரர்கள்
sājidīna
سَٰجِدِينَ
சிரம் பணிந்தவர்களாக
இதனைக் கண்ணுற்ற சூனியக்காரர்கள் அனைவரும் விழுந்து சிரம் பணிந்து, ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௪௬)
Tafseer
௪௭

قَالُوْٓا اٰمَنَّا بِرَبِّ الْعٰلَمِيْنَ ۙ ٤٧

qālū
قَالُوٓا۟
அவர்கள் கூறினர்
āmannā
ءَامَنَّا
நாங்கள் நம்பிக்கை கொண்டோம்
birabbi
بِرَبِّ
இறைவனை
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
"உலகத்தார் அனைவரின் இறைவனையே நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௪௭)
Tafseer
௪௮

رَبِّ مُوْسٰى وَهٰرُوْنَ ٤٨

rabbi
رَبِّ
இறைவனை
mūsā
مُوسَىٰ
மூஸா
wahārūna
وَهَٰرُونَ
இன்னும் ஹாரூனுடைய
அவன்(தான்,) மூஸா, ஹாரூனுடைய இறைவனுமாவான்" என்று கூறினார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௪௮)
Tafseer
௪௯

قَالَ اٰمَنْتُمْ لَهٗ قَبْلَ اَنْ اٰذَنَ لَكُمْۚ اِنَّهٗ لَكَبِيْرُكُمُ الَّذِيْ عَلَّمَكُمُ السِّحْرَۚ فَلَسَوْفَ تَعْلَمُوْنَ ەۗ لَاُقَطِّعَنَّ اَيْدِيَكُمْ وَاَرْجُلَكُمْ مِّنْ خِلَافٍ وَّلَاُصَلِّبَنَّكُمْ اَجْمَعِيْنَۚ ٤٩

qāla
قَالَ
அவன் கூறினான்
āmantum
ءَامَنتُمْ
நீங்கள் நம்பிக்கை கொண்டீர்களா?
lahu
لَهُۥ
அவரை
qabla
قَبْلَ
முன்
an ādhana
أَنْ ءَاذَنَ
நான் அனுமதியளிப்பதற்கு
lakum
لَكُمْۖ
உங்களுக்கு
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
lakabīrukumu
لَكَبِيرُكُمُ
மூத்தவர் உங்கள்
alladhī
ٱلَّذِى
எவர்
ʿallamakumu
عَلَّمَكُمُ
உங்களுக்கு கற்பித்தார்
l-siḥ'ra
ٱلسِّحْرَ
சூனியத்தை
falasawfa taʿlamūna
فَلَسَوْفَ تَعْلَمُونَۚ
ஆகவே, நீங்கள் விரைவில் அறிவீர்கள்
la-uqaṭṭiʿanna
لَأُقَطِّعَنَّ
திட்டமாக நான் வெட்டுவேன்
aydiyakum
أَيْدِيَكُمْ
உங்கள் கைகளை
wa-arjulakum
وَأَرْجُلَكُم
உங்கள் கால்களை
min khilāfin
مِّنْ خِلَٰفٍ
மாறுகை மாறுகால்
wala-uṣallibannakum
وَلَأُصَلِّبَنَّكُمْ
இன்னும் உங்களை கழுவேற்றுவேன்
ajmaʿīna
أَجْمَعِينَ
அனைவரையும்
அதற்கு (ஃபிர்அவ்ன்) "நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக உங்களுக்கு சூனியம் கற்றுக்கொடுத்த உங்களுடைய குரு அவர்தான். (இதன் பலனை) அதிசீக்கிரத்தில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்களுடைய மாறு கை, மாறு காலை வெட்டி உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்து விடுவேன்" என்று கூறினான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௪௯)
Tafseer
௫௦

قَالُوْا لَا ضَيْرَ ۖاِنَّآ اِلٰى رَبِّنَا مُنْقَلِبُوْنَ ۚ ٥٠

qālū
قَالُوا۟
அவர்கள் கூறினர்
lā ḍayra
لَا ضَيْرَۖ
பிரச்சனை இல்லை
innā
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
ilā rabbinā
إِلَىٰ رَبِّنَا
எங்கள் இறைவனிடம்
munqalibūna
مُنقَلِبُونَ
திரும்பக்கூடியவர்கள் ஆவோம்
அதற்கவர்கள் "(அதனால் எங்களுக்கு) யாதொரு பாதகமுமில்லை. (ஏனென்றால்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவன் பக்கமே திரும்பச் சென்று விடுவோம்" என்று கூறினார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௫௦)
Tafseer