Skip to content

ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா - Page: 4

Ash-Shu'ara

(aš-Šuʿarāʾ)

௩௧

قَالَ فَأْتِ بِهٖٓ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ ٣١

qāla
قَالَ
அவன் கூறினான்
fati bihi
فَأْتِ بِهِۦٓ
அதைக் கொண்டுவாரீர்
in kunta
إِن كُنتَ
நீர் இருந்தால்
mina l-ṣādiqīna
مِنَ ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்களில்
அதற்கவன் "நீங்கள் சொல்வது உண்மையானால், அதனைக் கொண்டு வாருங்கள்" என்று கூறினான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௩௧)
Tafseer
௩௨

فَاَلْقٰى عَصَاهُ فَاِذَا هِيَ ثُعْبَانٌ مُّبِيْنٌ ۚ ٣٢

fa-alqā
فَأَلْقَىٰ
ஆகவே அவர் எறிந்தார்
ʿaṣāhu
عَصَاهُ
தனது கைத்தடியை
fa-idhā
فَإِذَا
உடனே
hiya
هِىَ
அது
thuʿ'bānun
ثُعْبَانٌ
மலைப் பாம்பாக
mubīnun
مُّبِينٌ
தெளிவான
ஆகவே, மூஸா தன் தடியை எறிந்தார். உடனே அது பெரியதொரு பாம்பாகி விட்டது. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௩௨)
Tafseer
௩௩

وَنَزَعَ يَدَهٗ فَاِذَا هِيَ بَيْضَاۤءُ لِلنّٰظِرِيْنَ ࣖ ٣٣

wanazaʿa
وَنَزَعَ
அவர் வெளியே எடுத்தார்
yadahu
يَدَهُۥ
தனது கையை
fa-idhā
فَإِذَا
உடனே
hiya
هِىَ
அது ஆகிவிட்டது
bayḍāu
بَيْضَآءُ
வெண்மையாக
lilnnāẓirīna
لِلنَّٰظِرِينَ
பார்ப்பவர்களுக்கு
அன்றி, அவர் தன்னுடைய கையை(ச் சட்டைப் பையில்) இட்டு வெளியில் எடுத்தார். உடனே அது பார்ப்பவர்களுக்கு(க் கண்ணைக் கூசச்செய்யும் பிரகாசமுடைய) வெண்மையாகத் தோன்றியது. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௩௩)
Tafseer
௩௪

قَالَ لِلْمَلَاِ حَوْلَهٗٓ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِيْمٌ ۙ ٣٤

qāla
قَالَ
அவன் கூறினான்
lil'mala-i
لِلْمَلَإِ
பிரமுகர்களிடம்
ḥawlahu
حَوْلَهُۥٓ
தன்னை சுற்றியுள்ள
inna
إِنَّ
நிச்சயமாக
hādhā
هَٰذَا
இவர்
lasāḥirun
لَسَٰحِرٌ
ஒரு சூனியக்காரர்தான்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்த
(இதனைக் கண்ணுற்ற ஃபிர்அவ்ன்) தன்னைச் சூழ இருந்தவர்களை நோக்கி, "நிச்சயமாக இவர் மிகவும் நன்கு அறிந்த சூனியக்காரராக இருக்கிறார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௩௪)
Tafseer
௩௫

يُّرِيْدُ اَنْ يُّخْرِجَكُمْ مِّنْ اَرْضِكُمْ بِسِحْرِهٖۖ فَمَاذَا تَأْمُرُوْنَ ٣٥

yurīdu
يُرِيدُ
அவர் நாடுகிறார்
an yukh'rijakum
أَن يُخْرِجَكُم
உங்களை வெளியேற்ற
min arḍikum
مِّنْ أَرْضِكُم
உங்கள் பூமியிலிருந்து
bisiḥ'rihi
بِسِحْرِهِۦ
தனது சூனியத்தால்
famādhā
فَمَاذَا
ஆகவே, என்ன?
tamurūna
تَأْمُرُونَ
நீங்கள் கருதுகிறீர்கள்
இவர் தன் சூனியத்தால் உங்கள் ஊரை விட்டும் உங்களைத் துரத்திவிட எண்ணுகிறார். ஆகவே, இதைப்பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்" என்று கேட்டான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௩௫)
Tafseer
௩௬

قَالُوْٓا اَرْجِهْ وَاَخَاهُ وَابْعَثْ فِى الْمَدَاۤىِٕنِ حٰشِرِيْنَ ۙ ٣٦

qālū
قَالُوٓا۟
அவர்கள் கூறினர்
arjih
أَرْجِهْ
அவருக்கும் அவகாசம் அளி!
wa-akhāhu
وَأَخَاهُ
அவரது சகோதரருக்கும்
wa-ib'ʿath
وَٱبْعَثْ
இன்னும் அனுப்பு
fī l-madāini
فِى ٱلْمَدَآئِنِ
நகரங்களில்
ḥāshirīna
حَٰشِرِينَ
அழைத்து வருபவர்கள்
அதற்கவர்கள், "அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் ஒரு தவணை அளித்து, துப்பறிபவர்களைப் பல ஊர்களுக்கும் அனுப்பிவை. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௩௬)
Tafseer
௩௭

يَأْتُوْكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيْمٍ ٣٧

yatūka
يَأْتُوكَ
அவர்கள் உன்னிடம் கொண்டு வருவார்கள்
bikulli
بِكُلِّ
எல்லோரையும்
saḥḥārin
سَحَّارٍ
பெரிய சூனியக்காரர்கள்
ʿalīmin
عَلِيمٍ
கற்றறிந்தவர்(கள்)
அவர்கள் நன்கறிந்த சூனியக்காரர்கள் அனைவரையும் (தேடிப்பிடித்து) உங்களிடம் அழைத்து வருவார்கள்" என்று கூறினார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௩௭)
Tafseer
௩௮

فَجُمِعَ السَّحَرَةُ لِمِيْقَاتِ يَوْمٍ مَّعْلُوْمٍ ۙ ٣٨

fajumiʿa
فَجُمِعَ
ஆகவே, ஒன்று சேர்க்கப்பட்டனர்
l-saḥaratu
ٱلسَّحَرَةُ
சூனியக்காரர்கள்
limīqāti
لِمِيقَٰتِ
குறிப்பிட்ட தவணையில்
yawmin
يَوْمٍ
ஒரு நாளின்
maʿlūmin
مَّعْلُومٍ
அறியப்பட்ட
(அவ்வாறே துப்பறிபவர்கள் பல ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு) குறித்த நாளில், குறித்த நேரத்தில் (குறித்த இடத்தில்) சூனியக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்பட்டார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௩௮)
Tafseer
௩௯

وَّقِيْلَ لِلنَّاسِ هَلْ اَنْتُمْ مُّجْتَمِعُوْنَ ۙ ٣٩

waqīla
وَقِيلَ
கூறப்பட்டது
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்கு
hal antum muj'tamiʿūna
هَلْ أَنتُم مُّجْتَمِعُونَ
நீங்கள் ஒன்று சேருவீர்களா?
எல்லா மனிதர்களுக்கும் "(குறித்த காலத்தில்) நீங்கள் வந்து சேருவீர்களா?" என்று பறை சாற்றப்பட்டது.. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௩௯)
Tafseer
௪௦

لَعَلَّنَا نَتَّبِعُ السَّحَرَةَ اِنْ كَانُوْا هُمُ الْغٰلِبِيْنَ ٤٠

laʿallanā nattabiʿu
لَعَلَّنَا نَتَّبِعُ
நாம் பின்பற்றலாம்
l-saḥarata
ٱلسَّحَرَةَ
சூனியக்காரர்களை
in kānū humu
إِن كَانُوا۟ هُمُ
அவர்கள் ஆகிவிட்டால்
l-ghālibīna
ٱلْغَٰلِبِينَ
வெற்றியாளர்களாக
(இவ்வாறு அங்கு கூடும்) சூனியக்காரர்கள் வெற்றி கொண்டால் (அவர்களுடைய மார்க்கத்தையே) நாங்கள் பின்பற்றவும் கூடும் (என்றும் பறை சாற்றப்பட்டது). ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௪௦)
Tafseer