Skip to content

ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா - Page: 21

Ash-Shu'ara

(aš-Šuʿarāʾ)

௨௦௧

لَا يُؤْمِنُوْنَ بِهٖ حَتّٰى يَرَوُا الْعَذَابَ الْاَلِيْمَ ٢٠١

lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்
bihi
بِهِۦ
இதை
ḥattā
حَتَّىٰ
வரை
yarawū
يَرَوُا۟
அவர்கள் பார்க்கின்ற
l-ʿadhāba
ٱلْعَذَابَ
தண்டனையை
l-alīma
ٱلْأَلِيمَ
வலி தரும்
ஆகவே, துன்புறுத்தும் வேதனையை இவர்கள் (தங்கள் கண்ணால்) காணும் வரையில் இதனை நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௦௧)
Tafseer
௨௦௨

فَيَأْتِيَهُمْ بَغْتَةً وَّهُمْ لَا يَشْعُرُوْنَ ۙ ٢٠٢

fayatiyahum
فَيَأْتِيَهُم
ஆக, அது அவர்களிடம் வரும்
baghtatan
بَغْتَةً
திடீரென
wahum
وَهُمْ
அவர்களோ
lā yashʿurūna
لَا يَشْعُرُونَ
உணராதவர்களாக இருக்க
அவர்கள் உணர்ந்து கொள்ளாதவாறு திடுகூறாகவே (அந்நாள்) அவர்களை வந்தடையும். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௦௨)
Tafseer
௨௦௩

فَيَقُوْلُوْا هَلْ نَحْنُ مُنْظَرُوْنَ ۗ ٢٠٣

fayaqūlū
فَيَقُولُوا۟
அப்போது அவர்கள் கூறுவார்கள்
hal naḥnu munẓarūna
هَلْ نَحْنُ مُنظَرُونَ
நாங்கள் அவகாசம் அளிக்கப்படுவோமா?
அச்சமயம் அவர்கள் "எங்களுக்கு (ச் சிறிது) அவகாசம் கொடுக்கப்படுமா? ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௦௩)
Tafseer
௨௦௪

اَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُوْنَ ٢٠٤

afabiʿadhābinā
أَفَبِعَذَابِنَا
?/ஆகவே, நமது தண்டனையை
yastaʿjilūna
يَسْتَعْجِلُونَ
அவர்கள் அவசரப்படுகிறார்கள்
"எங்களை வேதனை செய்யவா இவர்கள் அவசரப் படுகின்றனர்?" என்று கூறுவார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௦௪)
Tafseer
௨௦௫

اَفَرَءَيْتَ اِنْ مَّتَّعْنٰهُمْ سِنِيْنَ ۙ ٢٠٥

afara-ayta
أَفَرَءَيْتَ
நீர் கவனித்தீரா!
in mattaʿnāhum
إِن مَّتَّعْنَٰهُمْ
நாம் அவர்களுக்கு சுகமளித்தால்
sinīna
سِنِينَ
பல ஆண்டுகள்
(நபியே!) நீங்கள் கவனித்தீர்களா? நாம் இவர்களை (இவர்கள் விரும்புகிறவாறு) பல வருடங்கள் சுகமனுபவிக்கவிட்டு வைத்திருந்தபோதிலும், ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௦௫)
Tafseer
௨௦௬

ثُمَّ جَاۤءَهُمْ مَّا كَانُوْا يُوْعَدُوْنَ ۙ ٢٠٦

thumma
ثُمَّ
பிறகு
jāahum
جَآءَهُم
வந்தால் அவர்களிடம்
mā kānū
مَّا كَانُوا۟
எதை/இருந்தனர்
yūʿadūna
يُوعَدُونَ
எச்சரிக்கப்படுவார்கள்
பின்னர், அவர்களைப் பயமுறுத்தும் வேதனை வந்தடையுமானால் ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௦௬)
Tafseer
௨௦௭

مَآ اَغْنٰى عَنْهُمْ مَّا كَانُوْا يُمَتَّعُوْنَ ۗ ٢٠٧

mā aghnā
مَآ أَغْنَىٰ
தடுக்காது
ʿanhum
عَنْهُم
அவர்களை விட்டும்
mā kānū yumattaʿūna
مَّا كَانُوا۟ يُمَتَّعُونَ
அவர்கள் சுகமளிக்கப்பட்டுக் கொண்டு இருந்தது
அவர்கள் அனுபவித்த சுகபோகங்கள் ஒன்றுமே அவர்களுக்கு யாதொரு பயனுமளிக்காதே! ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௦௭)
Tafseer
௨௦௮

وَمَآ اَهْلَكْنَا مِنْ قَرْيَةٍ اِلَّا لَهَا مُنْذِرُوْنَ ۖ ٢٠٨

wamā ahlaknā
وَمَآ أَهْلَكْنَا
நாம் அழிக்கவில்லை
min qaryatin
مِن قَرْيَةٍ
எந்த ஊரையும்
illā lahā
إِلَّا لَهَا
தவிர/அதற்கு
mundhirūna
مُنذِرُونَ
எச்சரிப்பாளர்கள்
(உபதேசம் செய்து) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களை அனுப்பாத வரையில் எவ்வூராரையும் நாம் அழித்துவிடவில்லை. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௦௮)
Tafseer
௨௦௯

ذِكْرٰىۚ وَمَا كُنَّا ظٰلِمِيْنَ ٢٠٩

dhik'rā
ذِكْرَىٰ
அறிவுரையாகும்
wamā kunnā
وَمَا كُنَّا
நாம் இல்லை
ẓālimīna
ظَٰلِمِينَ
அநியாயக்காரர்களாக
(ஒரு தூதரை அனுப்பி, வேதனைப் பற்றி) ஞாபகமூட்டாது நாம் (எவரையும் அழித்து) அநியாயம் செய்தவனாக இருக்கவில்லை. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௦௯)
Tafseer
௨௧௦

وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيٰطِيْنُ ٢١٠

wamā tanazzalat
وَمَا تَنَزَّلَتْ
இறக்கவில்லை
bihi
بِهِ
இதை
l-shayāṭīnu
ٱلشَّيَٰطِينُ
ஷைத்தான்கள்
(இவர்கள் கூறுகின்றவாறு) இவ்வேதத்தை ஷைத்தான் இறக்கவுமில்லை. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௧௦)
Tafseer