Skip to content

ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா - Page: 19

Ash-Shu'ara

(aš-Šuʿarāʾ)

௧௮௧

۞ اَوْفُوا الْكَيْلَ وَلَا تَكُوْنُوْا مِنَ الْمُخْسِرِيْنَ ۚ ١٨١

awfū
أَوْفُوا۟
முழுமைப்படுத்துங்கள்
l-kayla
ٱلْكَيْلَ
அளவையை
walā takūnū
وَلَا تَكُونُوا۟
ஆகிவிடாதீர்கள்
mina l-mukh'sirīna
مِنَ ٱلْمُخْسِرِينَ
நஷ்டம் ஏற்படுத்துபவர்களில்
அளவை முழுமையாக அளங்கள். (மக்களுக்கு) நஷ்டமிழைப்பவர்களாக இருக்க வேண்டாம். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௮௧)
Tafseer
௧௮௨

وَزِنُوْا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيْمِ ۚ ١٨٢

wazinū
وَزِنُوا۟
நிறுங்கள்!
bil-qis'ṭāsi
بِٱلْقِسْطَاسِ
தராசைக் கொண்டு
l-mus'taqīmi
ٱلْمُسْتَقِيمِ
நேரான
சரியான தராசு கொண்டு நிறுங்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௮௨)
Tafseer
௧௮௩

وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْيَاۤءَهُمْ وَلَا تَعْثَوْا فِى الْاَرْضِ مُفْسِدِيْنَ ۚ ١٨٣

walā tabkhasū
وَلَا تَبْخَسُوا۟
குறைக்காதீர்கள்
l-nāsa
ٱلنَّاسَ
மக்களுக்கு
ashyāahum
أَشْيَآءَهُمْ
பொருள்களை அவர்களுடைய
walā taʿthaw
وَلَا تَعْثَوْا۟
இன்னும் கடும் குழப்பம் செய்யாதீர்கள்!
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
muf'sidīna
مُفْسِدِينَ
கலகம்செய்தவர்களாக
மனிதர்களுக்கு நிறுத்துக் கொடுக்க வேண்டிய பொருளை நீங்கள் குறைத்து விடாதீர்கள். நீங்கள் பூமியில் விஷமம் செய்து கொண்டு அலையாதீர்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௮௩)
Tafseer
௧௮௪

وَاتَّقُوا الَّذِيْ خَلَقَكُمْ وَالْجِبِلَّةَ الْاَوَّلِيْنَ ۗ ١٨٤

wa-ittaqū
وَٱتَّقُوا۟
அஞ்சிக் கொள்ளுங்கள்!
alladhī khalaqakum
ٱلَّذِى خَلَقَكُمْ
உங்களைப் படைத்தவனை
wal-jibilata
وَٱلْجِبِلَّةَ
படைப்பினங்களையும்
l-awalīna
ٱلْأَوَّلِينَ
முன்னோர்களான
உங்களையும் உங்களுக்கு முன்னுள்ளோரையும் எவன் படைத்தானோ அவனுக்கு நீங்கள் பயப்படுங்கள்" என்றும் கூறினார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௮௪)
Tafseer
௧௮௫

قَالُوْٓا اِنَّمَآ اَنْتَ مِنَ الْمُسَحَّرِيْنَ ۙ ١٨٥

qālū
قَالُوٓا۟
அவர்கள் கூறினர்
innamā anta
إِنَّمَآ أَنتَ
நீரெல்லாம்
mina l-musaḥarīna
مِنَ ٱلْمُسَحَّرِينَ
சூனியம் செய்யப்பட்ட படைப்புகளில் ஒருவர்தான்
அதற்கவர்கள் "நீங்கள் (எவராலோ) பெரும் சூனியம் செய்யப்பட்டு விட்டீர். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௮௫)
Tafseer
௧௮௬

وَمَآ اَنْتَ اِلَّا بَشَرٌ مِّثْلُنَا وَاِنْ نَّظُنُّكَ لَمِنَ الْكٰذِبِيْنَ ۚ ١٨٦

wamā anta
وَمَآ أَنتَ
நீர் இல்லை
illā
إِلَّا
தவிர
basharun
بَشَرٌ
மனிதராகவே
mith'lunā
مِّثْلُنَا
எங்களைப் போன்ற
wa-in naẓunnuka
وَإِن نَّظُنُّكَ
நிச்சயமாக உம்மை நாங்கள் கருதுகிறோம்
lamina l-kādhibīna
لَمِنَ ٱلْكَٰذِبِينَ
பொய்யர்களை சேர்ந்தவராகவே
நீங்கள் நம்மைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை. நிச்சயமாக நாம் உங்களைப் பொய்யர்களில் ஒருவராகவே மதிக்கின்றோம். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௮௬)
Tafseer
௧௮௭

فَاَسْقِطْ عَلَيْنَا كِسَفًا مِّنَ السَّمَاۤءِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ ۗ ١٨٧

fa-asqiṭ
فَأَسْقِطْ
விழ வைப்பீராக
ʿalaynā
عَلَيْنَا
எங்கள் மீது
kisafan
كِسَفًا
சில துண்டுகளை
mina
مِّنَ
இருந்து
l-samāi
ٱلسَّمَآءِ
வானத்தில்
in kunta
إِن كُنتَ
நீர் இருந்தால்
mina l-ṣādiqīna
مِنَ ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்களில்
நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் வானத்(தைப் பல துண்டாக்கி, அ)திலிருந்து ஒரு சில துண்டுகளை நம்மீது எறியுங்கள்" என்று கூறினார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௮௭)
Tafseer
௧௮௮

قَالَ رَبِّيْٓ اَعْلَمُ بِمَا تَعْمَلُوْنَ ١٨٨

qāla
قَالَ
அவர் கூறினார்
rabbī
رَبِّىٓ
என் இறைவன்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை
அதற்கவர் "நீங்கள் செய்து கொண்டிருக்கும் (மோச) காரியத்தை என் இறைவன் நன்கறிவான்; (இதற்குரிய தண்டனையை உங்களுக்கு அவசியம் தருவான்)" என்று கூறினார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௮௮)
Tafseer
௧௮௯

فَكَذَّبُوْهُ فَاَخَذَهُمْ عَذَابُ يَوْمِ الظُّلَّةِ ۗاِنَّهٗ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ ١٨٩

fakadhabūhu
فَكَذَّبُوهُ
ஆக, அவர்கள் அவரை பொய்ப்பித்தனர்
fa-akhadhahum
فَأَخَذَهُمْ
ஆகவே, பிடித்தது அவர்களை
ʿadhābu
عَذَابُ
தண்டனை
yawmi
يَوْمِ
நாளின்
l-ẓulati
ٱلظُّلَّةِۚ
மேகம்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அது
kāna
كَانَ
இருக்கிறது
ʿadhāba
عَذَابَ
தண்டனையாக
yawmin
يَوْمٍ
ஒரு நாளின்
ʿaẓīmin
عَظِيمٍ
பெரிய
(எனினும்) பின்னரும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆகவே, ஒரு நாள் அவர்களை (அடர்ந்த) நிழலையுடைய மேகத்தின் வேதனை பிடித்துக் கொண்டது. நிச்சயமாக அது வேதனையுடைய மகத்தான நாளாகவே இருந்தது. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௮௯)
Tafseer
௧௯௦

اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً ۗوَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ ١٩٠

inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில் இருக்கிறது
laāyatan
لَءَايَةًۖ
ஓர் அத்தாட்சி
wamā kāna
وَمَا كَانَ
இல்லை
aktharuhum
أَكْثَرُهُم
அதிகமானவர்கள் அவர்களில்
mu'minīna
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக
நிச்சயமாக இதிலோர் அத்தாட்சி இருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௯௦)
Tafseer