Skip to content

ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா - Page: 18

Ash-Shu'ara

(aš-Šuʿarāʾ)

௧௭௧

اِلَّا عَجُوْزًا فِى الْغٰبِرِيْنَ ۚ ١٧١

illā
إِلَّا
தவிர
ʿajūzan
عَجُوزًا
ஒரு மூதாட்டியை
fī l-ghābirīna
فِى ٱلْغَٰبِرِينَ
மிஞ்சியவர்களில்
எனினும், அவருடைய ஒரு கிழ (மனை)வியைத் தவிர அவள் (லூத்துடன்) வராது பின் தங்கியவர்களுடன் தங்கி (அழிந்து) விட்டாள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௭௧)
Tafseer
௧௭௨

ثُمَّ دَمَّرْنَا الْاٰخَرِيْنَ ۚ ١٧٢

thumma
ثُمَّ
பிறகு
dammarnā
دَمَّرْنَا
நாம் அழித்தோம்
l-ākharīna
ٱلْءَاخَرِينَ
மற்றவர்களை
பின்னர், நாம் மற்ற அனைவரையும் அழித்துவிட்டோம். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௭௨)
Tafseer
௧௭௩

وَاَمْطَرْنَا عَلَيْهِمْ مَّطَرًاۚ فَسَاۤءَ مَطَرُ الْمُنْذَرِيْنَ ١٧٣

wa-amṭarnā
وَأَمْطَرْنَا
இன்னும் பொழிவித்தோம்
ʿalayhim
عَلَيْهِم
அவர்கள் மீது
maṭaran
مَّطَرًاۖ
ஒரு மழையை
fasāa maṭaru
فَسَآءَ مَطَرُ
அது மிக கெட்ட மழையாகும்
l-mundharīna
ٱلْمُنذَرِينَ
எச்சரிக்கப்பட்டவர்களுடைய மழைகளில்
அவர்கள் மீது நாம் (கல்) மழையை பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட அவர்களின் (மீது பொழிந்த கல்) மழை மகா கெட்டது. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௭௩)
Tafseer
௧௭௪

اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً ۗوَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ ١٧٤

inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில் இருக்கிறது
laāyatan
لَءَايَةًۖ
ஓர் அத்தாட்சி
wamā kāna
وَمَا كَانَ
இல்லை
aktharuhum
أَكْثَرُهُم
அதிகமானவர்கள் அவர்களில்
mu'minīna
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக
நிச்சயமாக இதிலோர் நல்ல அத்தாட்சியிருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௭௪)
Tafseer
௧௭௫

وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ ࣖ ١٧٥

wa-inna rabbaka lahuwa
وَإِنَّ رَبَّكَ لَهُوَ
நிச்சயமாக உமது இறைவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
பெரும் கருணையாளன்
(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன்தான் மிகைத்தவனும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௭௫)
Tafseer
௧௭௬

كَذَّبَ اَصْحٰبُ لْـَٔيْكَةِ الْمُرْسَلِيْنَ ۖ ١٧٦

kadhaba
كَذَّبَ
பொய்ப்பித்தனர்
aṣḥābu al'aykati
أَصْحَٰبُ لْـَٔيْكَةِ
தோட்டக்காரர்கள்
l-mur'salīna
ٱلْمُرْسَلِينَ
தூதர்களை
("மத்யன்" என்னும் ஊரில்) சோலையில் வசித்திருந்தவர்களும் நம்முடைய தூதர்களைப் பொய்யாக்கினார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௭௬)
Tafseer
௧௭௭

اِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ اَلَا تَتَّقُوْنَ ۚ ١٧٧

idh qāla
إِذْ قَالَ
கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
shuʿaybun
شُعَيْبٌ
ஷுஐபு
alā tattaqūna
أَلَا تَتَّقُونَ
நீங்கள் அஞ்ச வேண்டாமா?
ஷுஐப் (நபி) அவர்களை நோக்கி "நீங்கள் (அல்லாஹ்வுக்கு அஞ்சி பாவத்திலிருந்து) விலகிக்கொள்ள வேண்டாமா? ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௭௭)
Tafseer
௧௭௮

اِنِّيْ لَكُمْ رَسُوْلٌ اَمِيْنٌ ۙ ١٧٨

innī
إِنِّى
நிச்சயமாக நான்
lakum
لَكُمْ
உங்களுக்கு
rasūlun
رَسُولٌ
தூதர் ஆவேன்
amīnun
أَمِينٌ
நம்பிக்கையான
நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையுள்ள ஒரு தூதனாக இருக்கிறேன். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௭௮)
Tafseer
௧௭௯

فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ ۚ ١٧٩

fa-ittaqū
فَٱتَّقُوا۟
ஆகவே, அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wa-aṭīʿūni
وَأَطِيعُونِ
இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
அல்லாஹ்வை அஞ்சி எனக்கு கட்டுப்படுங்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௭௯)
Tafseer
௧௮௦

وَمَآ اَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ اِنْ اَجْرِيَ اِلَّا عَلٰى رَبِّ الْعٰلَمِيْنَ ۗ ١٨٠

wamā asalukum
وَمَآ أَسْـَٔلُكُمْ
நான் உங்களிடம் கேட்கவில்லை
ʿalayhi
عَلَيْهِ
இதற்காக
min ajrin
مِنْ أَجْرٍۖ
எவ்வித கூலியையும்
in ajriya
إِنْ أَجْرِىَ
என் கூலி இல்லை
illā
إِلَّا
தவிர
ʿalā rabbi
عَلَىٰ رَبِّ
இறைவனிடமே
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை. என்னுடைய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௮௦)
Tafseer