௧௬௧
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ لُوْطٌ اَلَا تَتَّقُوْنَ ۚ ١٦١
- idh qāla
- إِذْ قَالَ
- கூறிய சமயத்தை
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- akhūhum
- أَخُوهُمْ
- சகோதரர் அவர்களது
- lūṭun
- لُوطٌ
- லூத்து
- alā tattaqūna
- أَلَا تَتَّقُونَ
- நீங்கள் அஞ்ச வேண்டாமா?
அவர்களுடைய சகோதரர் லூத் அவர்களை நோக்கி "நீங்கள் (செய்யும் கொடிய பாவத்திலிருந்து) விலகிக் கொள்ள வேண்டாமா? ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௬௧)Tafseer
௧௬௨
اِنِّيْ لَكُمْ رَسُوْلٌ اَمِيْنٌ ۙ ١٦٢
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- rasūlun
- رَسُولٌ
- ஒரு தூதர்
- amīnun
- أَمِينٌ
- நம்பிக்கையான
நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையான ஒரு தூதனாக இருக்கிறேன். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௬௨)Tafseer
௧௬௩
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ ۚ ١٦٣
- fa-ittaqū
- فَٱتَّقُوا۟
- ஆகவே, அஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- wa-aṭīʿūni
- وَأَطِيعُونِ
- இன்னும் , எனக்கு கீழ்ப்படியுங்கள்!
(ஆகவே) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு வழிப்படுங்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௬௩)Tafseer
௧௬௪
وَمَآ اَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ اِنْ اَجْرِيَ اِلَّا عَلٰى رَبِّ الْعٰلَمِيْنَ ۗ ١٦٤
- wamā asalukum
- وَمَآ أَسْـَٔلُكُمْ
- நான் உங்களிடம் கேட்கவில்லை
- ʿalayhi
- عَلَيْهِ
- இதற்காக
- min ajrin
- مِنْ أَجْرٍۖ
- எவ்வித கூலியையும்
- in ajriya
- إِنْ أَجْرِىَ
- என் கூலி இல்லை
- illā
- إِلَّا
- தவிர
- ʿalā rabbi
- عَلَىٰ رَبِّ
- இறைவனிடமே
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- அகிலங்களின்
இதற்காக நான் உங்களிடத்தில் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலி அனைத்தும் உலகத்தாரின் இறைவனிடமேயன்றி (வேறு யாரிடமும்) இல்லை. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௬௪)Tafseer
௧௬௫
اَتَأْتُوْنَ الذُّكْرَانَ مِنَ الْعٰلَمِيْنَ ۙ ١٦٥
- atatūna
- أَتَأْتُونَ
- நீங்கள் வருகிறீர்களா?
- l-dhuk'rāna
- ٱلذُّكْرَانَ
- ஆண்களிடம்
- mina l-ʿālamīna
- مِنَ ٱلْعَٰلَمِينَ
- படைப்பினங்களில்
(உங்களுக்குப் படைக்கப்பட்ட பெண்களை விட்டுவிட்டு) எல்லா படைப்புகளுக்குமே மாறாக நீங்கள் (உங்கள் காம இச்சையைத் தணித்துக்கொள்ள) ஆண்களிடமே செல்கின்றீர்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௬௫)Tafseer
௧௬௬
وَتَذَرُوْنَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُمْ مِّنْ اَزْوَاجِكُمْۗ بَلْ اَنْتُمْ قَوْمٌ عٰدُوْنَ ١٦٦
- watadharūna
- وَتَذَرُونَ
- இன்னும் விட்டு விடுகிறீர்கள்
- mā khalaqa
- مَا خَلَقَ
- எதை/படைத்தான்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- rabbukum
- رَبُّكُم
- உங்கள் இறைவன்
- min azwājikum
- مِّنْ أَزْوَٰجِكُمۚ
- உங்கள் மனைவிகளை
- bal
- بَلْ
- மாறாக
- antum
- أَنتُمْ
- நீங்கள்
- qawmun
- قَوْمٌ
- மக்கள்
- ʿādūna
- عَادُونَ
- வரம்பு மீறிய
உங்கள் இறைவன் உங்களுக்காக படைத்த உங்கள் மனைவிகளை நீங்கள் புறக்கணித்து விட்டீர்களே! நீங்கள் (அல்லாஹ்வின் இந்த இயற்கை முறையை) மீறிய மக்கள்" என்று கூறினார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௬௬)Tafseer
௧௬௭
قَالُوْا لَىِٕنْ لَّمْ تَنْتَهِ يٰلُوْطُ لَتَكُوْنَنَّ مِنَ الْمُخْرَجِيْنَ ١٦٧
- qālū
- قَالُوا۟
- அவர்கள் கூறினர்
- la-in lam tantahi
- لَئِن لَّمْ تَنتَهِ
- நீர் விலகவில்லை என்றால்
- yālūṭu
- يَٰلُوطُ
- லூத்தே!
- latakūnanna
- لَتَكُونَنَّ
- நிச்சயமாக நீர் ஆகிவிடுவீர்
- mina l-mukh'rajīna
- مِنَ ٱلْمُخْرَجِينَ
- வெளியேற்றப்பட்டவர்களில்
அதற்கவர்கள் "லூத்தே! (இவ்வாறு கூறுவதை விட்டு) நீங்கள் விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நீங்கள் (நம் ஊரைவிட்டுத்) துரத்தப்படுவீர்கள்" என்று கூறினார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௬௭)Tafseer
௧௬௮
قَالَ ِانِّيْ لِعَمَلِكُمْ مِّنَ الْقَالِيْنَ ۗ ١٦٨
- qāla
- قَالَ
- அவர் கூறினார்
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- liʿamalikum
- لِعَمَلِكُم
- உங்கள் செயலை
- mina l-qālīna
- مِّنَ ٱلْقَالِينَ
- வெறுப்பவர்களில்
அதற்கவர் "நிச்சயமாக நான் உங்களுடைய (இத்தீய) செயலை வெறுக்கின்றேன்" என்று கூறி, ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௬௮)Tafseer
௧௬௯
رَبِّ نَجِّنِيْ وَاَهْلِيْ مِمَّا يَعْمَلُوْنَ ١٦٩
- rabbi
- رَبِّ
- என் இறைவா!
- najjinī
- نَجِّنِى
- என்னையும் பாதுகாத்துக்கொள்!
- wa-ahlī
- وَأَهْلِى
- இன்னும் என் குடும்பத்தாரை(யும்)
- mimmā yaʿmalūna
- مِمَّا يَعْمَلُونَ
- அவர்கள் செய்வதிலிருந்து
"என் இறைவனே! இவர்களின் (தீய) செயலிலிருந்து என்னையும், என் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வாயாக" என்று பிரார்த்தித்தார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௬௯)Tafseer
௧௭௦
فَنَجَّيْنٰهُ وَاَهْلَهٗٓ اَجْمَعِيْنَ ۙ ١٧٠
- fanajjaynāhu
- فَنَجَّيْنَٰهُ
- ஆக, அவரை(யும்) பாதுகாத்தோம்
- wa-ahlahu
- وَأَهْلَهُۥٓ
- இன்னும் அவருடைய குடும்பத்தாரை(யும்)
- ajmaʿīna
- أَجْمَعِينَ
- அனைவரையும்
ஆகவே, அவரையும் அவர் குடும்பத்தினர் அனைவரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௭௦)Tafseer