Skip to content

ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா - Page: 16

Ash-Shu'ara

(aš-Šuʿarāʾ)

௧௫௧

وَلَا تُطِيْعُوْٓا اَمْرَ الْمُسْرِفِيْنَ ۙ ١٥١

walā tuṭīʿū
وَلَا تُطِيعُوٓا۟
கீழ்ப்படியாதீர்கள்
amra
أَمْرَ
காரியத்திற்கு
l-mus'rifīna
ٱلْمُسْرِفِينَ
வரம்பு மீறிகளின்
வரம்பு மீறுபவர்களின் கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படியாதீர்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௫௧)
Tafseer
௧௫௨

الَّذِيْنَ يُفْسِدُوْنَ فِى الْاَرْضِ وَلَا يُصْلِحُوْنَ ١٥٢

alladhīna yuf'sidūna
ٱلَّذِينَ يُفْسِدُونَ
எவர்கள்/ குழப்பம்செய்கின்றனர்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
walā yuṣ'liḥūna
وَلَا يُصْلِحُونَ
அவர்கள் சீர்திருத்துவதில்லை
அவர்கள், பூமியில் விஷமம் செய்வார்களேயன்றி நன்மை செய்ய மாட்டார்கள்" என்று கூறினார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௫௨)
Tafseer
௧௫௩

قَالُوْٓا اِنَّمَآ اَنْتَ مِنَ الْمُسَحَّرِيْنَ ۙ ١٥٣

qālū
قَالُوٓا۟
அவர்கள் கூறினர்
innamā anta
إِنَّمَآ أَنتَ
நீரெல்லாம்
mina l-musaḥarīna
مِنَ ٱلْمُسَحَّرِينَ
சூனியம் செய்யப்பட்ட ஒருவர்தான்
அதற்கவர்கள் (ஸாலிஹ் நபியை நோக்கி) "உங்கள்மீது எவரோ சூனியம் செய்து விட்டார்கள். (ஆதலால், உங்களுடைய புத்தி தடுமாறிவிட்டது.) ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௫௩)
Tafseer
௧௫௪

مَآ اَنْتَ اِلَّا بَشَرٌ مِّثْلُنَاۙ فَأْتِ بِاٰيَةٍ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ ١٥٤

mā anta
مَآ أَنتَ
நீர் இல்லை
illā
إِلَّا
தவிர
basharun
بَشَرٌ
மனிதராகவே
mith'lunā
مِّثْلُنَا
எங்களைப் போன்ற
fati
فَأْتِ
ஆகவே கொண்டு வாரீர்
biāyatin
بِـَٔايَةٍ
அத்தாட்சியை
in kunta
إِن كُنتَ
நீர் இருந்தால்
mina l-ṣādiqīna
مِنَ ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்களில்
நீங்கள் நம்மைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை. நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் (நாம் விரும்பியவாறு) யாதொரு அத்தாட்சியைக் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௫௪)
Tafseer
௧௫௫

قَالَ هٰذِهٖ نَاقَةٌ لَّهَا شِرْبٌ وَّلَكُمْ شِرْبُ يَوْمٍ مَّعْلُوْمٍ ۚ ١٥٥

qāla
قَالَ
அவர் கூறினார்
hādhihi
هَٰذِهِۦ
இது ஒரு
nāqatun
نَاقَةٌ
பெண் ஒட்டகை
lahā
لَّهَا
இதற்கு
shir'bun
شِرْبٌ
நீர் அருந்துவதற்குரிய ஒரு பங்கு
walakum
وَلَكُمْ
இன்னும் உங்களுக்கும்
shir'bu
شِرْبُ
நீர் அருந்துவதற்குரிய பங்கு உள்ளது
yawmin
يَوْمٍ
நாளில்
maʿlūmin
مَّعْلُومٍ
குறிப்பிட்ட
அதற்கவர் "(உங்களுக்கு அத்தாட்சியாக) இதோ ஒரு பெண் ஒட்டகம் (வந்து) இருக்கின்றது. (நீங்கள் தண்ணீரருந்தும் இத்துரவில்) அது குடிப்பதற்கு ஒரு நாளும், நீங்கள் குடிப்பதற்கு ஒரு நாளும் குறிப்பிடப்படுகின்றது. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௫௫)
Tafseer
௧௫௬

وَلَا تَمَسُّوْهَا بِسُوْۤءٍ فَيَأْخُذَكُمْ عَذَابُ يَوْمٍ عَظِيْمٍ ١٥٦

walā tamassūhā
وَلَا تَمَسُّوهَا
அதை தொட்டு விடாதீர்கள்!
bisūin
بِسُوٓءٍ
தீங்கைக் கொண்டு
fayakhudhakum
فَيَأْخُذَكُمْ
பிடித்துக்கொள்ளும் உங்களை
ʿadhābu
عَذَابُ
தண்டனை
yawmin
يَوْمٍ
நாளின்
ʿaẓīmin
عَظِيمٍ
பெரிய
அன்றி, நீங்கள் அதற்கு யாதொரு தீங்கும் செய்யாதீர்கள். அவ்வாறாயின் ஒரு நாளின் கடினமான வேதனை உங்களைப் பிடித்துக்கொள்ளும்" என்று கூறினார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௫௬)
Tafseer
௧௫௭

فَعَقَرُوْهَا فَاَصْبَحُوْا نٰدِمِيْنَ ۙ ١٥٧

faʿaqarūhā
فَعَقَرُوهَا
ஆக, அவர்கள் அதை அறுத்து விட்டார்கள்
fa-aṣbaḥū
فَأَصْبَحُوا۟
ஆகவே ஆகிவிட்டனர்
nādimīna
نَٰدِمِينَ
கைசேதப்பட்டவர்களாக
(இவ்வாறு கூறியிருந்தும்) அவர்கள் அதன் கால் நரம்பைத் தறித்து விட்டார்கள். (அதனால் வேதனை வருவதன் அறிகுறியைக் கண்டபொழுது) அவர்கள் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௫௭)
Tafseer
௧௫௮

فَاَخَذَهُمُ الْعَذَابُۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً ۗوَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ ١٥٨

fa-akhadhahumu
فَأَخَذَهُمُ
பிடித்தது அவர்களை
l-ʿadhābu
ٱلْعَذَابُۗ
தண்டனை
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில் இருக்கிறது
laāyatan
لَءَايَةًۖ
ஓர் அத்தாட்சி
wamā kāna
وَمَا كَانَ
இல்லை
aktharuhum
أَكْثَرُهُم
அதிகமானவர்கள் அவர்களில்
mu'minīna
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக
ஆகவே, அவர்களை வேதனை பிடித்துக்கொண்டது. நிச்சயமாக (அவர்களுக்கு) இதிலோர் அத்தாட்சி இருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவேயில்லை. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௫௮)
Tafseer
௧௫௯

وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ ࣖ ١٥٩

wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
rabbaka lahuwa
رَبَّكَ لَهُوَ
உமது இறைவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
பெரும் கருணையாளன்
(நபியே!) நிச்சயமாக உங்களுடைய இறைவனே (அனைவரையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௫௯)
Tafseer
௧௬௦

كَذَّبَتْ قَوْمُ لُوْطِ ِۨالْمُرْسَلِيْنَ ۖ ١٦٠

kadhabat
كَذَّبَتْ
பொய்ப்பித்தனர்
qawmu
قَوْمُ
மக்கள்
lūṭin
لُوطٍ
லூத்துடைய
l-mur'salīna
ٱلْمُرْسَلِينَ
தூதர்களை
லூத்துடைய மக்களும் நம்முடைய தூதர்களைப் பொய்யாக்கினார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௬௦)
Tafseer