௧௩௧
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِۚ ١٣١
- fa-ittaqū
- فَٱتَّقُوا۟
- ஆக, அஞ்சிக் கொள்ளுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- wa-aṭīʿūni
- وَأَطِيعُونِ
- இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கட்டுப்பட்டு நடங்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௩௧)Tafseer
௧௩௨
وَاتَّقُوا الَّذِيْٓ اَمَدَّكُمْ بِمَا تَعْلَمُوْنَ ۚ ١٣٢
- wa-ittaqū
- وَٱتَّقُوا۟
- அஞ்சிக் கொள்ளுங்கள்!
- alladhī
- ٱلَّذِىٓ
- உதவியவனை
- amaddakum
- أَمَدَّكُم
- உங்களுக்கு
- bimā taʿlamūna
- بِمَا تَعْلَمُونَ
- நீங்கள் அறிந்தவற்றைக் கொண்டு
உங்களுக்குத் தெரிந்திருக்கும் பல பொருள்களையும், எவன் உங்களுக்குக் கொடுத்து உதவி புரிந்தானோ அவனுக்கு நீங்கள் பயப்படுங்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௩௨)Tafseer
௧௩௩
اَمَدَّكُمْ بِاَنْعَامٍ وَّبَنِيْنَۙ ١٣٣
- amaddakum
- أَمَدَّكُم
- உதவினான் உங்களுக்கு
- bi-anʿāmin
- بِأَنْعَٰمٍ
- கால்நடைகளைக் கொண்டு
- wabanīna
- وَبَنِينَ
- இன்னும் ஆண் பிள்ளைகளை
சந்ததிகளையும், ஆடு, மாடு, ஒட்டகங்களையும் (கொடுத்து) அவனே உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௩௩)Tafseer
௧௩௪
وَجَنّٰتٍ وَّعُيُوْنٍۚ ١٣٤
- wajannātin
- وَجَنَّٰتٍ
- இன்னும் தோட்டங்களை
- waʿuyūnin
- وَعُيُونٍ
- இன்னும் ஊற்றுகளை
தோட்டந்துரவுகளையும் (அவனே உங்களுக்கு அளித்திருக்கிறான்) ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௩௪)Tafseer
௧௩௫
اِنِّيْٓ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ ۗ ١٣٥
- innī
- إِنِّىٓ
- நிச்சயமாக நான்
- akhāfu
- أَخَافُ
- பயப்படுகிறேன்
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- ʿadhāba
- عَذَابَ
- தண்டனையை
- yawmin
- يَوْمٍ
- நாளின்
- ʿaẓīmin
- عَظِيمٍ
- பெரிய
(அவனுக்கு மாறு செய்தால்) மகத்தானதொரு நாளின் வேதனை உங்களுக்கு நிச்சயமாக வருவதை(ப் பற்றி) நான் பயப்படுகின்றேன்" என்று கூறினார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௩௫)Tafseer
௧௩௬
قَالُوْا سَوَاۤءٌ عَلَيْنَآ اَوَعَظْتَ اَمْ لَمْ تَكُنْ مِّنَ الْوَاعِظِيْنَ ۙ ١٣٦
- qālū
- قَالُوا۟
- அவர்கள் கூறினர்
- sawāon
- سَوَآءٌ
- சமம்தான்
- ʿalaynā
- عَلَيْنَآ
- எங்களுக்கு
- awaʿaẓta
- أَوَعَظْتَ
- நீர் உபதேசிப்பதும்
- am
- أَمْ
- அல்லது
- lam takun
- لَمْ تَكُن
- இல்லாததும்
- mina l-wāʿiẓīna
- مِّنَ ٱلْوَٰعِظِينَ
- உபதேசிப்பவர்களில்
அதற்கவர்கள் "(ஹூதே!) நீங்கள் எங்களுக்கு நல்லுபதேசம் செய்வதும் நல்லுபதேசம் செய்யாதிருப்பதும் சமமே! ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௩௬)Tafseer
௧௩௭
اِنْ هٰذَآ اِلَّا خُلُقُ الْاَوَّلِيْنَ ۙ ١٣٧
- in hādhā
- إِنْ هَٰذَآ
- இது இல்லை
- illā
- إِلَّا
- தவிர
- khuluqu
- خُلُقُ
- வழக்கமே
- l-awalīna
- ٱلْأَوَّلِينَ
- முன்னோரின்
(பயமுறுத்த) இ(வ்வாறு கூறுவ)து முன்னுள்ளோரின் வழக்கமேயன்றி வேறில்லை. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௩௭)Tafseer
௧௩௮
وَمَا نَحْنُ بِمُعَذَّبِيْنَ ۚ ١٣٨
- wamā naḥnu
- وَمَا نَحْنُ
- நாங்கள் இல்லை
- bimuʿadhabīna
- بِمُعَذَّبِينَ
- தண்டிக்கப்படுபவர்களாக
(நீங்கள் கூறுவதைப் போல) நாங்கள் யாதொரு வேதனைக்குள்ளாக மாட்டோம்" (என்று கூறினார்கள்) ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௩௮)Tafseer
௧௩௯
فَكَذَّبُوْهُ فَاَهْلَكْنٰهُمْۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً ۗوَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ ١٣٩
- fakadhabūhu
- فَكَذَّبُوهُ
- ஆக, அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்
- fa-ahlaknāhum
- فَأَهْلَكْنَٰهُمْۗ
- ஆகவே, அவர்களை நாம் அழித்தோம்.
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- fī dhālika
- فِى ذَٰلِكَ
- இதில் இருக்கிறது
- laāyatan
- لَءَايَةًۖ
- ஓர் அத்தாட்சி
- wamā kāna
- وَمَا كَانَ
- இல்லை
- aktharuhum
- أَكْثَرُهُم
- அதிகமானவர்கள் அவர்களில்
- mu'minīna
- مُّؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களாக
மேலும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், நாம் அவர்களை அழித்துவிட்டோம். நிச்சயமாக இதில் நல்லதோர் அத்தாட்சியிருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௩௯)Tafseer
௧௪௦
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ ࣖ ١٤٠
- wa-inna
- وَإِنَّ
- நிச்சயமாக
- rabbaka lahuwa
- رَبَّكَ لَهُوَ
- உமது இறைவன்தான்
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- மிகைத்தவன்
- l-raḥīmu
- ٱلرَّحِيمُ
- பெரும் கருணையாளன்
(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன்தான் (அவர்களை) மிகைத்தவனும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௪௦)Tafseer