௧௨௧
اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً ۗوَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ ١٢١
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- fī dhālika
- فِى ذَٰلِكَ
- இதில் இருக்கிறது
- laāyatan
- لَءَايَةًۖ
- ஓர் அத்தாட்சி
- wamā kāna
- وَمَا كَانَ
- இல்லை
- aktharuhum
- أَكْثَرُهُم
- அதிகமானவர்கள் அவர்களில்
- mu'minīna
- مُّؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களாக
நிச்சயமாக இதிலொரு படிப்பினையிருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லை. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௨௧)Tafseer
௧௨௨
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ ࣖ ١٢٢
- wa-inna
- وَإِنَّ
- நிச்சயமாக
- rabbaka lahuwa
- رَبَّكَ لَهُوَ
- உமது இறைவன்தான்
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- மிகைத்தவன்
- l-raḥīmu
- ٱلرَّحِيمُ
- பெரும் கருணையாளன்
(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன்தான் (அவர்களை) மிகைத்தவனும் பேரன்புடையவனுமாக இருக்கின்றான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௨௨)Tafseer
௧௨௩
كَذَّبَتْ عَادُ ِۨالْمُرْسَلِيْنَ ۖ ١٢٣
- kadhabat
- كَذَّبَتْ
- பொய்ப்பித்தனர்
- ʿādun
- عَادٌ
- ஆது சமுதாய மக்கள்
- l-mur'salīna
- ٱلْمُرْسَلِينَ
- தூதர்களை
"ஆது" உடைய மக்களும் நம்முடைய தூதரைப் பொய்யாக்கினார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௨௩)Tafseer
௧௨௪
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ هُوْدٌ اَلَا تَتَّقُوْنَ ۚ ١٢٤
- idh qāla
- إِذْ قَالَ
- கூறிய சமயத்தை நினைவு கூருவீராக!
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- akhūhum
- أَخُوهُمْ
- சகோதரர் அவர்களது
- hūdun
- هُودٌ
- ஹூது
- alā tattaqūna
- أَلَا تَتَّقُونَ
- நீங்கள் பயந்துகொள்ள மாட்டீர்களா?
அவர்களுடைய சகோதரர் "ஹூத்" அவர்களை நோக்கி "நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்பட வேண்டாமா? ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௨௪)Tafseer
௧௨௫
اِنِّيْ لَكُمْ رَسُوْلٌ اَمِيْنٌ ۙ ١٢٥
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- rasūlun
- رَسُولٌ
- ஒரு தூதர்
- amīnun
- أَمِينٌ
- நம்பிக்கையான
நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையான ஒரு தூதனாவேன்; ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௨௫)Tafseer
௧௨௬
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ ۚ ١٢٦
- fa-ittaqū
- فَٱتَّقُوا۟
- ஆகவே, அஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- wa-aṭīʿūni
- وَأَطِيعُونِ
- எனக்கு கீழ்ப்படியுங்கள்!
ஆதலால், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு வழிப்பட்டு நடங்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௨௬)Tafseer
௧௨௭
وَمَآ اَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍۚ اِنْ اَجْرِيَ اِلَّا عَلٰى رَبِّ الْعٰلَمِيْنَ ۗ ١٢٧
- wamā asalukum
- وَمَآ أَسْـَٔلُكُمْ
- நான் உங்களிடம் கேட்கவில்லை
- ʿalayhi
- عَلَيْهِ
- இதற்காக
- min ajrin
- مِنْ أَجْرٍۖ
- எவ்வித கூலியையும்
- in ajriya
- إِنْ أَجْرِىَ
- என் கூலி இல்லை
- illā
- إِلَّا
- தவிர
- ʿalā rabbi
- عَلَىٰ رَبِّ
- இறைவனிடமே
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- அகிலங்களின்
இதற்காக நான் உங்களிடத்தில் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலியெல்லாம் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்ப்பவனிடமே இருக்கிறது. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௨௭)Tafseer
௧௨௮
اَتَبْنُوْنَ بِكُلِّ رِيْعٍ اٰيَةً تَعْبَثُوْنَ ۙ ١٢٨
- atabnūna
- أَتَبْنُونَ
- கட்டிடத்தை கட்டுகிறீர்களா?
- bikulli rīʿin
- بِكُلِّ رِيعٍ
- ஒவ்வொருஇடத்திலும்
- āyatan
- ءَايَةً
- ஒரு கட்டிடத்தை
- taʿbathūna
- تَعْبَثُونَ
- விளையாடுகிறீர்கள்
நீங்கள் உயர்ந்த இடங்களிலெல்லாம் (தூண்கள் போன்ற) ஞாபகச் சின்னங்களை வீணாகக் கட்டுகிறீர்களே! ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௨௮)Tafseer
௧௨௯
وَتَتَّخِذُوْنَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُوْنَۚ ١٢٩
- watattakhidhūna
- وَتَتَّخِذُونَ
- இன்னும் நீங்கள் எற்படுத்துகிறீர்கள்
- maṣāniʿa
- مَصَانِعَ
- பெரியகோட்டைகளை
- laʿallakum takhludūna
- لَعَلَّكُمْ تَخْلُدُونَ
- நீங்கள் நிரந்தரமாக இருப்பதைப் போன்று
நீங்கள் (அழியாது) என்றென்றும் இருப்பவர்களைப் போல் (உங்கள் மாளிகைகளில் உயர்ந்த) வேலைப்பாடுகளையும் அமைக்கின்றீர்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௨௯)Tafseer
௧௩௦
وَاِذَا بَطَشْتُمْ بَطَشْتُمْ جَبَّارِيْنَۚ ١٣٠
- wa-idhā baṭashtum
- وَإِذَا بَطَشْتُم
- நீங்கள் யாரையும் தாக்கினால்
- baṭashtum
- بَطَشْتُمْ
- தாக்குகிறீர்கள்
- jabbārīna
- جَبَّارِينَ
- அநியாயக்காரர்களாக
நீங்கள் (எவரையும்) பிடித்தால் (ஈவிரக்கமின்றி) மிகக் கொடுமையாக நடத்துகின்றீர்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௩௦)Tafseer