Skip to content

ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா - Page: 12

Ash-Shu'ara

(aš-Šuʿarāʾ)

௧௧௧

۞ قَالُوْٓا اَنُؤْمِنُ لَكَ وَاتَّبَعَكَ الْاَرْذَلُوْنَ ۗ ١١١

qālū
قَالُوٓا۟
அவர்கள் கூறினர்
anu'minu
أَنُؤْمِنُ
நாம் நம்பிக்கை கொள்வோமா
laka
لَكَ
உம்மை
wa-ittabaʿaka
وَٱتَّبَعَكَ
உம்மை பின்பற்றி இருக்க
l-ardhalūna
ٱلْأَرْذَلُونَ
சாதாரணமானவர்கள்
அதற்கவர்கள் "உங்களை நாங்கள் நம்பிக்கை கொள்வதா? (எங்களுக்குக் கூலி வேலை செய்யும்) ஈனர்கள்தாம் உங்களைப் பின்பற்றியிருக்கின்றனர்" என்று கூறினார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௧௧)
Tafseer
௧௧௨

قَالَ وَمَا عِلْمِيْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ ۚ ١١٢

qāla
قَالَ
அவர் கூறினார்
wamā ʿil'mī
وَمَا عِلْمِى
எனக்கு ஞானம் இல்லை
bimā
بِمَا
எதைப் பற்றி
kānū
كَانُوا۟
இருந்தனர்
yaʿmalūna
يَعْمَلُونَ
செய்கின்றனர்
அதற்கு அவர், "நான் அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை இன்னதென அறிய மாட்டேன். (அதனை விசாரிப்பதும் என் வேலையல்ல) என்றும், ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௧௨)
Tafseer
௧௧௩

اِنْ حِسَابُهُمْ اِلَّا عَلٰى رَبِّيْ لَوْ تَشْعُرُوْنَ ۚ ١١٣

in ḥisābuhum
إِنْ حِسَابُهُمْ
அவர்களது விசாரணை இல்லை
illā
إِلَّا
தவிர
ʿalā
عَلَىٰ
மீதே
rabbī
رَبِّىۖ
என் இறைவன்
law tashʿurūna
لَوْ تَشْعُرُونَ
நீங்கள் உணரவேண்டுமே!
(இவைகளைப் பற்றி) அவர்களிடம் கணக்குக் கேட்பது என் இறைவன் மீதே கடமை. (என் மீதல்ல.) இவ்வளவு கூட அறிந்துகொள்ள வேண்டாமா? ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௧௩)
Tafseer
௧௧௪

وَمَآ اَنَا۠ بِطَارِدِ الْمُؤْمِنِيْنَ ۚ ١١٤

wamā anā
وَمَآ أَنَا۠
நான் இல்லை
biṭāridi
بِطَارِدِ
விரட்டக்கூடியவன்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களை
நம்பிக்கை கொண்டவர்களை (அவர்கள் ஏழைகள் என்பதற்காக) நான் விரட்டிவிட முடியாது. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௧௪)
Tafseer
௧௧௫

اِنْ اَنَا۠ اِلَّا نَذِيْرٌ مُّبِيْنٌ ۗ ١١٥

in anā
إِنْ أَنَا۠
நான் இல்லை
illā
إِلَّا
தவிர
nadhīrun
نَذِيرٌ
எச்சரிப்பாளராகவே
mubīnun
مُّبِينٌ
தெளிவான
பகிரங்கமாக நான் அனைவருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனேயன்றி வேறில்லை" என்று கூறினார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௧௫)
Tafseer
௧௧௬

قَالُوْا لَىِٕنْ لَّمْ تَنْتَهِ يٰنُوْحُ لَتَكُوْنَنَّ مِنَ الْمَرْجُوْمِيْنَۗ ١١٦

qālū
قَالُوا۟
அவர்கள் கூறினர்
la-in lam tantahi
لَئِن لَّمْ تَنتَهِ
நீர் விலகவில்லை என்றால்
yānūḥu
يَٰنُوحُ
நூஹே!
latakūnanna
لَتَكُونَنَّ
நிச்சயமாக நீர் ஆகிவிடுவீர்
mina l-marjūmīna
مِنَ ٱلْمَرْجُومِينَ
ஏசப்படுபவர்களில்
அதற்கவர்கள் "நூஹே! நீங்கள் இதனை விட்டும் விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நீங்கள் கல்லெறிந்து கொல்லப் படுவீர்கள்" என்று கூறினார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௧௬)
Tafseer
௧௧௭

قَالَ رَبِّ اِنَّ قَوْمِيْ كَذَّبُوْنِۖ ١١٧

qāla
قَالَ
அவர் கூறினார்
rabbi
رَبِّ
என் இறைவா!
inna
إِنَّ
நிச்சயமாக
qawmī
قَوْمِى
என் மக்கள்
kadhabūni
كَذَّبُونِ
என்னை பொய்ப்பித்து விட்டனர்
அதற்கவர், "என் இறைவனே! என்னுடைய (இந்த) மக்கள் நிச்சயமாக என்னைப் பொய்யாக்கி விட்டார்கள்." ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௧௭)
Tafseer
௧௧௮

فَافْتَحْ بَيْنِيْ وَبَيْنَهُمْ فَتْحًا وَّنَجِّنِيْ وَمَنْ مَّعِيَ مِنَ الْمُؤْمِنِيْنَ ١١٨

fa-if'taḥ
فَٱفْتَحْ
ஆகவே, நீ தீர்ப்பளி!
baynī
بَيْنِى
எனக்கும் இடையில்
wabaynahum
وَبَيْنَهُمْ
இன்னும் அவர்களுக்கும் இடையில்
fatḥan
فَتْحًا
தெளிவான
wanajjinī
وَنَجِّنِى
என்னை(யும்) பாதுகாத்துக்கொள்
waman maʿiya
وَمَن مَّعِىَ
என்னுடன் உள்ளவர்களையும்
mina l-mu'minīna
مِنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களில்
ஆதலால், எனக்கும் அவர்களுக்குமிடையில் நீ ஒரு தீர்ப்பு செய்து என்னையும் என்னுடனுள்ள நம்பிக்கை கொண்டவர் களையும் பாதுகாத்துக் கொள்வாயாக! என்று பிரார்த்தித்தார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௧௮)
Tafseer
௧௧௯

فَاَنْجَيْنٰهُ وَمَنْ مَّعَهٗ فِى الْفُلْكِ الْمَشْحُوْنِ ١١٩

fa-anjaynāhu
فَأَنجَيْنَٰهُ
ஆகவே, அவரையும் பாதுகாத்தோம்
waman maʿahu
وَمَن مَّعَهُۥ
அவருடன் உள்ளவர்களையும்
fī l-ful'ki
فِى ٱلْفُلْكِ
கப்பலில்
l-mashḥūni
ٱلْمَشْحُونِ
நிரம்பிய
ஆகவே, நாம் அவரையும் (நம்பிக்கை கொண்டு) அவருடன் இருந்தவர்களையும் (மற்ற உயிர்ப் பிராணிகளால்) நிறைந்திருந்த கப்பலில் ஏற்றி பாதுகாத்துக் கொண்டோம். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௧௯)
Tafseer
௧௨௦

ثُمَّ اَغْرَقْنَا بَعْدُ الْبٰقِيْنَ ١٢٠

thumma
ثُمَّ
பிறகு
aghraqnā
أَغْرَقْنَا
நாம் அழித்தோம்
baʿdu
بَعْدُ
பின்னர்
l-bāqīna
ٱلْبَاقِينَ
மீதம் இருந்தவர்களை
இதன் பின்னர் (கப்பலில் ஏறாது) மீதமிருந்தவர்களை நாம் மூழ்கடித்து விட்டோம். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௨௦)
Tafseer