௧
௨
تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ الْمُبِيْنِ ٢
- til'ka āyātu
- تِلْكَ ءَايَٰتُ
- இவை/வசனங்கள்
- l-kitābi
- ٱلْكِتَٰبِ
- வேதத்தின்
- l-mubīni
- ٱلْمُبِينِ
- தெளிவான
(நபியே!) இது தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨)Tafseer
௩
لَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ اَلَّا يَكُوْنُوْا مُؤْمِنِيْنَ ٣
- laʿallaka bākhiʿun
- لَعَلَّكَ بَٰخِعٌ
- நீர் அழித்துக் கொள்வீரோ!
- nafsaka
- نَّفْسَكَ
- உம்மையே
- allā yakūnū
- أَلَّا يَكُونُوا۟
- அவர்கள் மாறாததால்
- mu'minīna
- مُؤْمِنِينَ
- நம்பிக்கை கொள்பவர்களாக
(நபியே!) அவர்கள் (உங்களை) நம்பிக்கை கொள்ளாததன் காரணமாக (துக்கத்தால்) நீங்கள் தற்கொலை செய்து கொள்வீர்கள் போலும்! ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௩)Tafseer
௪
اِنْ نَّشَأْ نُنَزِّلْ عَلَيْهِمْ مِّنَ السَّمَاۤءِ اٰيَةً فَظَلَّتْ اَعْنَاقُهُمْ لَهَا خَاضِعِيْنَ ٤
- in nasha
- إِن نَّشَأْ
- நாம் நாடினால்
- nunazzil
- نُنَزِّلْ
- நாம் இறக்குவோம்
- ʿalayhim
- عَلَيْهِم
- அவர்கள் மீது
- mina l-samāi
- مِّنَ ٱلسَّمَآءِ
- வானத்திலிருந்து
- āyatan
- ءَايَةً
- ஒரு அத்தாட்சியை
- faẓallat
- فَظَلَّتْ
- ஆகிவிடும்
- aʿnāquhum
- أَعْنَٰقُهُمْ
- அவர்களது கழுத்துகள்
- lahā
- لَهَا
- அதற்கு
- khāḍiʿīna
- خَٰضِعِينَ
- பணிந்தவையாக
நாம் விரும்பினால் அவர்களுடைய கழுத்துக்கள் பணிந்து குனிந்து வரும்படி (வேதனை) செய்யக்கூடிய அத்தாட்சிகளை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௪)Tafseer
௫
وَمَا يَأْتِيْهِمْ مِّنْ ذِكْرٍ مِّنَ الرَّحْمٰنِ مُحْدَثٍ اِلَّا كَانُوْا عَنْهُ مُعْرِضِيْنَ ٥
- wamā yatīhim
- وَمَا يَأْتِيهِم
- அவர்களிடம் வருவதில்லை
- min dhik'rin
- مِّن ذِكْرٍ
- அறிவுரை எதுவும்
- mina l-raḥmāni
- مِّنَ ٱلرَّحْمَٰنِ
- ரஹ்மானிடமிருந்து
- muḥ'dathin
- مُحْدَثٍ
- புதிதாக
- illā kānū
- إِلَّا كَانُوا۟
- அவர்கள் இருந்தே தவிர
- ʿanhu
- عَنْهُ
- அதை
- muʿ'riḍīna
- مُعْرِضِينَ
- புறக்கணிப்பவர்களாக
ரஹ்மானிடமிருந்து புதிதான யாதொரு நல்லுபதேசம் வரும் போதெல்லாம் அதனை அவர்கள் (நிராகரித்து) புறக்கணிக்காமல் இருப்பதில்லை. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௫)Tafseer
௬
فَقَدْ كَذَّبُوْا فَسَيَأْتِيْهِمْ اَنْۢبـٰۤؤُا مَا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ ٦
- faqad
- فَقَدْ
- திட்டமாக
- kadhabū
- كَذَّبُوا۟
- இவர்கள் பொய்ப்பித்தனர்
- fasayatīhim
- فَسَيَأْتِيهِمْ
- ஆகவே, அவர்களிடம் விரைவில் வரும்
- anbāu
- أَنۢبَٰٓؤُا۟
- செய்திகள்
- mā kānū bihi
- مَا كَانُوا۟ بِهِۦ
- எது/இருந்தனர்/அதை
- yastahziūna
- يَسْتَهْزِءُونَ
- பரிகாசம் செய்பவர்களாக
(ஆகவே, இதனையும்) நிச்சயமாக அவர்கள் பொய்யாக்குகின்றனர். எனினும், அவர்கள் எதனை(ப் பொய்யாக்கிப்) பரிகசித்துக் கொண்டிருக்கின்றார்களோ அதன் (உண்மை) செய்திகள் நிச்சயமாக அவர்களிடம் வந்தே தீரும். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௬)Tafseer
௭
اَوَلَمْ يَرَوْا اِلَى الْاَرْضِ كَمْ اَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيْمٍ ٧
- awalam yaraw
- أَوَلَمْ يَرَوْا۟
- அவர்கள் பார்க்க வேண்டாமா?
- ilā
- إِلَى
- பக்கம்
- l-arḍi
- ٱلْأَرْضِ
- பூமியின்
- kam
- كَمْ
- எத்தனை
- anbatnā
- أَنۢبَتْنَا
- நாம் முளைக்க வைத்தோம்
- fīhā
- فِيهَا
- அதில்
- min kulli
- مِن كُلِّ
- எல்லாவற்றிலிருந்தும்
- zawjin
- زَوْجٍ
- ஜோடிகள்
- karīmin
- كَرِيمٍ
- அழகிய
அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? அதில் ஒவ்வொரு வகையிலும் (பயனளிக்கக் கூடிய) மேலான புற்பூண்டுகளை ஜோடி ஜோடியாகவே நாம் முளைப்பித்து இருக்கின்றோம். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௭)Tafseer
௮
اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةًۗ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ ٨
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- fī dhālika
- فِى ذَٰلِكَ
- இதில் இருக்கிறது
- laāyatan
- لَءَايَةًۖ
- ஓர் அத்தாட்சி
- wamā kāna
- وَمَا كَانَ
- இல்லை
- aktharuhum
- أَكْثَرُهُم
- அதிகமானவர்கள் அவர்களில்
- mu'minīna
- مُّؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களாக
நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௮)Tafseer
௯
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ ࣖ ٩
- wa-inna
- وَإِنَّ
- நிச்சயமாக
- rabbaka lahuwa
- رَبَّكَ لَهُوَ
- உமது இறைவன்தான்
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- மிகைத்தவன்
- l-raḥīmu
- ٱلرَّحِيمُ
- பெரும் கருணையாளன்
(நபியே!) உங்களுடைய இறைவன் நிச்சயமாக (அனைவரையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௯)Tafseer
௧௦
وَاِذْ نَادٰى رَبُّكَ مُوْسٰٓى اَنِ ائْتِ الْقَوْمَ الظّٰلِمِيْنَ ۙ ١٠
- wa-idh nādā
- وَإِذْ نَادَىٰ
- அந்நேரத்தை நினைவு கூருங்கள்!/அழைத்தான்
- rabbuka
- رَبُّكَ
- உமது இறைவன்
- mūsā
- مُوسَىٰٓ
- மூசாவை
- ani i'ti
- أَنِ ٱئْتِ
- நீர் வருவீராக!
- l-qawma
- ٱلْقَوْمَ
- மக்களிடம்
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்கள்
(நபியே!) உங்களுடைய இறைவன் மூஸாவை அழைத்து "நீங்கள் அநியாயக்கார (ஃபிர்அவ்னுடைய) மக்களிடம் செல்லுங்கள்" எனக் கூறியதை நீங்கள் கவனித்துப் பாருங்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௦)Tafseer