Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௯

Qur'an Surah Al-Furqan Verse 9

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اُنْظُرْ كَيْفَ ضَرَبُوْا لَكَ الْاَمْثَالَ فَضَلُّوْا فَلَا يَسْتَطِيْعُوْنَ سَبِيْلًا ࣖ (الفرقان : ٢٥)

unẓur
ٱنظُرْ
See
பார்ப்பீராக!
kayfa
كَيْفَ
how
எப்படி
ḍarabū
ضَرَبُوا۟
they set forth
அவர்கள் விவரிக்கின்றனர்
laka
لَكَ
for you
உமக்கு
l-amthāla
ٱلْأَمْثَٰلَ
the similitudes
தன்மைகளை
faḍallū
فَضَلُّوا۟
but they have gone astray
ஆகவே, அவர்கள் வழிகெட்டனர்
falā yastaṭīʿūna
فَلَا يَسْتَطِيعُونَ
so not they are able (to find)
அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்
sabīlan
سَبِيلًا
a way
ஒரு பாதைக்கு

Transliteration:

Unzur kaifa daraboo lakal amsaala fadalloo falaa yastatee'oona sabeelaa (QS. al-Furq̈ān:9)

English Sahih International:

Look how they strike for you comparisons; but they have strayed, so they cannot [find] a way. (QS. Al-Furqan, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (நபியே!) உங்களைப் பற்றி இவ்வக்கிரமக்காரர்கள் என்னென்ன வர்ணிப்புகள் கூறுகின்றார்கள் என்பதை கவனித்துப் பாருங்கள். ஆகவே, இவர்கள் (முற்றிலும்) வழிகெட்டு விட்டார்கள்; நேரான வழியை அடைய இவர்களால் முடியாது. (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௯)

Jan Trust Foundation

(நபியே! உமக்காக அவர்கள் எத்தகைய உவமானங்களை எடுத்துக் கூறுகிறார்கள் என்பதை நீர் பாரும்! அவர்கள் வழி கெட்டுப் போய்விட்டார்கள் - ஆகவே அவர்கள் (நேரான) மார்க்கத்தைக் காண சக்தி பெறமாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) பார்ப்பீராக! அவர்கள் எப்படி உமக்கு தன்மைகளை விவரிக்கின்றனர். ஆகவே, அவர்கள் வழிகெட்டனர். (சத்தியத்தின் பக்கம் வர) ஒரு பாதைக்கும் அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்.