Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௭௫

Qur'an Surah Al-Furqan Verse 75

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اُولٰۤىِٕكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوْا وَيُلَقَّوْنَ فِيْهَا تَحِيَّةً وَّسَلٰمًا ۙ (الفرقان : ٢٥)

ulāika
أُو۟لَٰٓئِكَ
Those
இவர்கள்
yuj'zawna
يُجْزَوْنَ
will be awarded
கூலியாக கொடுக்கப்படுவார்கள்
l-ghur'fata
ٱلْغُرْفَةَ
the Chamber
அறையை
bimā ṣabarū
بِمَا صَبَرُوا۟
because they were patient
அவர்கள் பொறுமையாக இருந்ததால்
wayulaqqawna
وَيُلَقَّوْنَ
and they will be met
சந்திக்கப்படுவார்கள்
fīhā
فِيهَا
therein
அதில்
taḥiyyatan
تَحِيَّةً
(with) greetings
முகமனைக்கொண்டும்
wasalāman
وَسَلَٰمًا
and peace
ஸலாமைக் கொண்டும்

Transliteration:

Ulaaa'ika yujzawnal ghurfata bimaa sabaroo wa yulaqqawna feehaa tahiyyatanw wa salaamaa (QS. al-Furq̈ān:75)

English Sahih International:

Those will be awarded the Chamber for what they patiently endured, and they will be received therein with greetings and [words of] peace, (QS. Al-Furqan, Ayah ௭௫)

Abdul Hameed Baqavi:

ஆகிய இத்தகையவருக்கு, அவர்கள் (பல நல்ல காரியங்களைச் செய்திருப்பதுடன் அவைகளைச் செய்யும்போது ஏற்பட்ட) கஷ்டங்களைச் சகித்துக்கொண்டதன் காரணமாக உயர்ந்த மாளிகைகள் (மறுமையில்) கொடுக்கப்படும். "ஈடேற்றம் (உண்டாவதாக)" என்று போற்றி அதில் அவர்கள் வரவேற்கப் படுவார்கள். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௭௫)

Jan Trust Foundation

பொறுமையுடனிருந்த காரணத்தால், இவர்களுக்கு(ச் சுவனபதியில்) உன்னதமான மாளிகை நற்கூலியாக அளிக்கப்படும்; வாழ்த்தும், ஸலாமும் கொண்டு அவர்கள் எதிர்கொண்டழைக்கப் படுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர்கள் பொறுமையாக இருந்ததால் அறையை (சொர்க்கத்தின் உயர்ந்த தகுதியை) கூலியாக கொடுக்கப்படுவார்கள். இன்னும் அதில் அவர்கள் முகமனைக்கொண்டும் இன்னும் ஸலாமைக் கொண்டும் சந்திக்கப்படுவார்கள். (வானவர்கள் சொர்க்கவாசிகளை சந்திக்க வரும்போது ஸலாம் கூறி அல்லாஹ்வுடன் வாழ்த்துக்களை சொல்வார்கள்).