Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௭௪

Qur'an Surah Al-Furqan Verse 74

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا (الفرقان : ٢٥)

wa-alladhīna yaqūlūna
وَٱلَّذِينَ يَقُولُونَ
And those who say
அவர்கள் கூறுவார்கள்
rabbanā
رَبَّنَا
"Our Lord!
எங்கள் இறைவா!
hab
هَبْ
Grant
தருவாயாக!
lanā
لَنَا
to us
எங்களுக்கு
min azwājinā
مِنْ أَزْوَٰجِنَا
from our spouses
எங்கள் மனைவிகள் மூலமும்
wadhurriyyātinā
وَذُرِّيَّٰتِنَا
and our offspring
எங்கள் சந்ததிகள் மூலமும்
qurrata
قُرَّةَ
comfort
குளிர்ச்சியை
aʿyunin
أَعْيُنٍ
(to) our eyes
கண்களுக்கு
wa-ij'ʿalnā
وَٱجْعَلْنَا
and make us
எங்களை ஆக்குவாயாக!
lil'muttaqīna
لِلْمُتَّقِينَ
for the righteous
இறையச்சமுள்ளவர்களுக்கு
imāman
إِمَامًا
a leader"
இமாம்களாக

Transliteration:

Wallazeena yaqooloona Rabbanaa hab lanaa min azwaajinaa wa zurriyaatinaa qurrata a'yuninw waj 'alnaa lilmuttaqeena Imaamaa (QS. al-Furq̈ān:74)

English Sahih International:

And those who say, "Our Lord, grant us from among our wives and offspring comfort to our eyes and make us a leader [i.e., example] for the righteous." (QS. Al-Furqan, Ayah ௭௪)

Abdul Hameed Baqavi:

மேலும், எவர்கள் "எங்கள் இறைவனே! எங்கள் மனைவியையும், எங்கள் மக்களையும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! அன்றி, பரிசுத்தவான்களுக்கு வழிகாட்டியாகவும் எங்களை நீ ஆக்குவாயாக!" என்று பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களும்; (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௭௪)

Jan Trust Foundation

மேலும் அவர்கள்| “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறுவார்கள்: எங்கள் இறைவா! எங்களுக்கு எங்கள் மனைவிகள் மூலமும், எங்கள் சந்ததிகள் மூலமும் (எங்கள்) கண்களுக்கு குளிர்ச்சியை தருவாயாக! எங்களை இறையச்சமுள்ளவர்களுக்கு இமாம்களாக (-வழிகாட்டிகளாக, முன்னோடிகளாக) ஆக்குவாயாக!