குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௭௨
Qur'an Surah Al-Furqan Verse 72
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَاِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا (الفرقان : ٢٥)
- wa-alladhīna lā yashhadūna
- وَٱلَّذِينَ لَا يَشْهَدُونَ
- And those who (do) not bear witness
- இன்னும் அவர்கள் ஆஜராக மாட்டார்கள்
- l-zūra
- ٱلزُّورَ
- (to) the falsehood
- பொய்யான செயலுக்கு
- wa-idhā marrū
- وَإِذَا مَرُّوا۟
- and when they pass
- இன்னும் இவர்கள் கடந்து சென்றால்
- bil-laghwi
- بِٱللَّغْوِ
- by futility
- வீணான செயலுக்கு
- marrū
- مَرُّوا۟
- they pass
- கடந்து சென்று விடுவார்கள்
- kirāman
- كِرَامًا
- (as) dignified ones
- கண்ணியவான்களாக
Transliteration:
Wallazeena laa yash hadoonaz zoora wa izaa marroo billaghwi marroo kiraamaa(QS. al-Furq̈ān:72)
English Sahih International:
And [they are] those who do not testify to falsehood, and when they pass near ill speech, they pass by with dignity. (QS. Al-Furqan, Ayah ௭௨)
Abdul Hameed Baqavi:
அன்றி, எவர்கள் பொய் சாட்சி சொல்லாமலும் (வீணான காரியம் நடைபெறும் இடத்திற்குச் செல்லாமலும்) ஒருக்கால் (அத்தகைய இடத்திற்குச்) செல்லும்படி ஏற்பட்டு விட்டபோதிலும் (அதில் சம்பந்தப்படாது) கண்ணியமான முறையில் (அதனைக் கடந்து) சென்று விடுகின்றார்களோ அவர்களும், (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௭௨)
Jan Trust Foundation
அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் பொய்யான செயலுக்கு (இணைவைத்தல், இசைக் கேட்டல், உண்மைக்கு மாற்றமாக நடத்தல், இப்படிப்பட்ட செயல்களுக்கு) ஆஜராக மாட்டார்கள். வீணான செயலுக்கு அருகில் இவர்கள் கடந்து சென்றால் கண்ணியவான்களாக கடந்து சென்று விடுவார்கள்.