Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௬௮

Qur'an Surah Al-Furqan Verse 68

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ لَا يَدْعُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ وَلَا يَقْتُلُوْنَ النَّفْسَ الَّتِيْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُوْنَۚ وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ يَلْقَ اَثَامًا ۙ (الفرقان : ٢٥)

wa-alladhīna lā yadʿūna
وَٱلَّذِينَ لَا يَدْعُونَ
And those who (do) not invoke
அவர்கள் அழைக்க மாட்டார்கள்
maʿa l-lahi
مَعَ ٱللَّهِ
with Allah
அல்லாஹ்வுடன்
ilāhan
إِلَٰهًا
god
ஒரு கடவுளை
ākhara
ءَاخَرَ
another
வேறு
walā yaqtulūna
وَلَا يَقْتُلُونَ
and (do) not [they] kill
இன்னும் கொல்ல மாட்டார்கள்
l-nafsa
ٱلنَّفْسَ
the soul
உயிரை
allatī ḥarrama
ٱلَّتِى حَرَّمَ
which Allah has forbidden
எது/தடுத்தான்
l-lahu
ٱللَّهُ
Allah has forbidden
அல்லாஹ்
illā
إِلَّا
except
தவிர
bil-ḥaqi
بِٱلْحَقِّ
by right
உரிமையைக் கொண்டே
walā yaznūna
وَلَا يَزْنُونَۚ
and (do) not commit adultery
இன்னும் விபசாரம் செய்யமாட்டார்கள்
waman yafʿal
وَمَن يَفْعَلْ
And whoever does
யார் செய்வாரோ
dhālika
ذَٰلِكَ
that
இவற்றை
yalqa
يَلْقَ
will meet
அவர் சந்திப்பார்
athāman
أَثَامًا
a penalty
தண்டனையை

Transliteration:

Wallazeena laa yad'oona ma'al laahi ilaahan aakhara wa laa yaqtuloonan nafsal latee harramal laahu illaa bilhaqqi wa laa yaznoon; wa mai yaf'al zaalika yalqa asaamaa (QS. al-Furq̈ān:68)

English Sahih International:

And those who do not invoke with Allah another deity or kill the soul which Allah has forbidden [to be killed], except by right, and do not commit unlawful sexual intercourse. And whoever should do that will meet a penalty. (QS. Al-Furqan, Ayah ௬௮)

Abdul Hameed Baqavi:

தவிர, அவர்கள் அல்லாஹ்வுடன் வேறொருவரையும் வணக்கத்திற்குரியவனாக அழைக்க மாட்டார்கள். (கொலை செய்யக் கூடாதென்று) அல்லாஹ் தடுத்திருக்கும் எம்மனிதனையும் அவர்கள் நியாயமின்றிக் கொலை செய்ய மாட்டார்கள்; விபசாரமும் செய்ய மாட்டார்கள். ஆகவே, எவனேனும் இத்தகைய தீய காரியங்களைச் செய்ய முற்பட்டால், அவன் (அதற்குரிய) தண்டனையை அடைய வேண்டியதுதான். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௬௮)

Jan Trust Foundation

அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை அழைக்க மாட்டார்கள் (வணங்க மாட்டார்கள்), அல்லாஹ் (கொல்லக்கூடாது என்று) தடுத்த உயிரை கொல்ல மாட்டார்கள் (அதற்குரிய) உரிமையைக் கொண்டே தவிர. விபசாரம் செய்யமாட்டார்கள். யார் இவற்றை செய்வாரோ அவர் தண்டனையை சந்திப்பார்.