Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௬௩

Qur'an Surah Al-Furqan Verse 63

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِيْنَ يَمْشُوْنَ عَلَى الْاَرْضِ هَوْنًا وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا (الفرقان : ٢٥)

waʿibādu
وَعِبَادُ
And (the) slaves
அடியார்கள்
l-raḥmāni
ٱلرَّحْمَٰنِ
(of) the Most Gracious
பேரருளாளனுடைய
alladhīna
ٱلَّذِينَ
(are) those who
எவர்கள்
yamshūna
يَمْشُونَ
walk
நடப்பார்கள்
ʿalā l-arḍi
عَلَى ٱلْأَرْضِ
on the earth
பூமியில்
hawnan
هَوْنًا
(in) humbleness
மென்மையாக
wa-idhā khāṭabahumu
وَإِذَا خَاطَبَهُمُ
and when address them
இன்னும் அவர்களிடம் பேசினால்
l-jāhilūna
ٱلْجَٰهِلُونَ
the ignorant ones
அறிவீனர்கள்
qālū
قَالُوا۟
they say
கூறி விடுவார்கள்
salāman
سَلَٰمًا
"Peace"
ஸலாம்

Transliteration:

Wa 'ibaadur Rahmaanil lazeena yamshoona 'alal ardi hawnanw wa izaa khaata bahumul jaahiloona qaaloo salaamaa (QS. al-Furq̈ān:63)

English Sahih International:

And the servants of the Most Merciful are those who walk upon the earth easily, and when the ignorant address them [harshly], they say [words of] peace, (QS. Al-Furqan, Ayah ௬௩)

Abdul Hameed Baqavi:

இவர்கள்தாம், ரஹ்மானுடைய அடியார்கள்: பூமியில் (அடக்கமாகவும்) பணிவாகவும் நடப்பார்கள். மூடர்கள் அவர்களுடன் தர்க்கிக்க முற்பட்டால் "ஸலாமுன்" என்று கூறி (அவர்களை விட்டு விலகி) விடுவார்கள். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௬௩)

Jan Trust Foundation

இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ரஹ்மான் (பேரருளான் அல்லாஹ்) உடைய அடியார்கள் பூமியில் மென்மையாக (அடக்கமாக, பணிவாக, பெருமையின்றி, அக்கிரமம் செய்யாமல்) நடப்பார்கள். அவர்களிடம் அறிவீனர்கள் பேசினால் சலாம் கூறி(விலகி)விடுவார்கள்.