Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௬

Qur'an Surah Al-Furqan Verse 6

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اَنْزَلَهُ الَّذِيْ يَعْلَمُ السِّرَّ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ اِنَّهٗ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا (الفرقان : ٢٥)

qul
قُلْ
Say
கூறுவீராக
anzalahu
أَنزَلَهُ
"Has sent it down
இதை இறக்கினான்
alladhī yaʿlamu
ٱلَّذِى يَعْلَمُ
the One Who knows
எவன்/அறிகின்றான்
l-sira
ٱلسِّرَّ
the secret
இரகசியத்தை
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
in the heavens
வானங்களிலும்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
and the earth
பூமியிலும்
innahu
إِنَّهُۥ
Indeed He
நிச்சயமாக அவன்
kāna
كَانَ
is
இருக்கிறான்
ghafūran
غَفُورًا
Oft-Forgiving
மகாமன்னிப்பாளனாக
raḥīman
رَّحِيمًا
Most Merciful"
பெரும் கருணையாளனாக

Transliteration:

Qul anzalhul lazee ya'lamus sirra fis samaawaati wal-ard; innahoo kaana Ghafoorar Raheemaa (QS. al-Furq̈ān:6)

English Sahih International:

Say, [O Muhammad], "It has been revealed by He who knows [every] secret within the heavens and the earth. Indeed, He is ever Forgiving and Merciful." (QS. Al-Furqan, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

(அதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(அவ்வாறன்று.) வானங்களிலும், பூமியிலுள்ள ரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே இதனை இறக்கி வைத்தான். (நீங்கள் மனம் வருந்தி அவனளவில் திரும்பினால்) நிச்சயமாக அவன் (உங்களுடைய இக்குற்றங்களை) மன்னிப்பவனும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்." (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௬)

Jan Trust Foundation

(நபியே!) “வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்” என்று கூறுவீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! வானங்களிலும் பூமியிலும் ரகசியத்தை அறிபவன்தான் இதை இறக்கினான். நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான்.