Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௫௯

Qur'an Surah Al-Furqan Verse 59

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا فِيْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِۚ اَلرَّحْمٰنُ فَسْـَٔلْ بِهٖ خَبِيْرًا (الفرقان : ٢٥)

alladhī
ٱلَّذِى
The One Who
அவன்தான்
khalaqa
خَلَقَ
created
படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
the heavens
வானங்களையும்
wal-arḍa
وَٱلْأَرْضَ
and the earth
பூமியையும்
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَا
and whatever (is) between them
அவற்றுக்கு இடையில் உள்ளவற்றையும்
fī sittati ayyāmin
فِى سِتَّةِ أَيَّامٍ
in six periods
ஆறு நாட்களில்
thumma
ثُمَّ
then
பிறகு
is'tawā
ٱسْتَوَىٰ
He established Himself
உயர்ந்து விட்டான்
ʿalā
عَلَى
over
மீது
l-ʿarshi
ٱلْعَرْشِۚ
the Throne -
அர்ஷின்
l-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
the Most Gracious
அவன் பேரருளாளன்
fasal
فَسْـَٔلْ
so ask
கேட்பீராக!
bihi
بِهِۦ
Him
அவனை
khabīran
خَبِيرًا
(as He is) All-Aware
அறிந்தவனிடம்

Transliteration:

Allazee khalaqas samaawaati wal arda wa maa bainahumaa fee sittati aiyaamin summmmastawaa 'alal 'Arsh; ar Rahmaanu fas'al bihee khabeeraa (QS. al-Furq̈ān:59)

English Sahih International:

He who created the heavens and the earth and what is between them in six days and then established Himself above the Throne – the Most Merciful, so ask about Him one well informed [i.e., the Prophet]. (QS. Al-Furqan, Ayah ௫௯)

Abdul Hameed Baqavi:

அவன் எத்தகையவனென்றால் வானங்களையும், பூமியையும், இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளையும் ஆறு நாள்களில் படைத்தான். பின்னர், அவன் "அர்ஷின்" மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்து விட்டான். அவன்தான் ரஹ்மான். (ரஹ்மான் எனப்படுபவனும் அல்லாஹ் எனப்படுபவனும் ஒருவனே.) இதைப் பற்றித் தெரிந்தவர்களைக் கேட்டறிந்து கொள்ளுங்கள். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௫௯)

Jan Trust Foundation

அவனே வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அவன் அர்ஷின் மீது அமைந்தான்; (அவன் தான் அருள் மிக்க) அர்ரஹ்மான்; ஆகவே, அறிந்தவர்களிடம் அவனைப் பற்றிக் கேட்பீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன்தான் வானங்களையும் பூமியையும் அவற்றுக்கு இடையில் உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பிறகு, அர்ஷின் மீது உயர்ந்து விட்டான். அவன் பேரருளாளன். அவனை (-ரஹ்மானை) அறிந்தவனிடம் கேட்பீராக! (நான்தான் அறிந்தவன். நான் அவனை (-ரஹ்மானை)ப் பற்றி அறிவித்தால் அது நான் அறிவித்தது போன்றே.)