Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௪௫

Qur'an Surah Al-Furqan Verse 45

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَمْ تَرَ اِلٰى رَبِّكَ كَيْفَ مَدَّ الظِّلَّۚ وَلَوْ شَاۤءَ لَجَعَلَهٗ سَاكِنًاۚ ثُمَّ جَعَلْنَا الشَّمْسَ عَلَيْهِ دَلِيْلًا ۙ (الفرقان : ٢٥)

alam tara
أَلَمْ تَرَ
Do you not see
நீர் பார்க்கவில்லையா?
ilā
إِلَىٰ
[to]
பக்கம்
rabbika
رَبِّكَ
your Lord
உமது இறைவன்
kayfa
كَيْفَ
how
எப்படி
madda
مَدَّ
He extends
நீட்டுகிறான்
l-ẓila
ٱلظِّلَّ
the shadow?
நிழலை
walaw shāa
وَلَوْ شَآءَ
And if He willed
அவன் நாடியிருந்தால்
lajaʿalahu
لَجَعَلَهُۥ
surely He (could) have made it
அதை ஆக்கியிருப்பான்
sākinan
سَاكِنًا
stationary
நிரந்தரமாக
thumma
ثُمَّ
Then
பிறகு
jaʿalnā
جَعَلْنَا
We made
நாம் ஆக்கினோம்
l-shamsa
ٱلشَّمْسَ
the sun
சூரியனை
ʿalayhi
عَلَيْهِ
for it
அதன் மீது
dalīlan
دَلِيلًا
an indication
ஆதாரமாக

Transliteration:

Alam tara ilaa Rabbika kaifa maddaz zilla wa law shaaa'a laja'alahoo saakinan summa ja'alnash shamsa 'alaihe daleelaa (QS. al-Furq̈ān:45)

English Sahih International:

Have you not considered your Lord – how He extends the shadow, and if He willed, He could have made it stationary? Then We made the sun for it an indication. (QS. Al-Furqan, Ayah ௪௫)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உங்கள் இறைவன் நிழலை எவ்வாறு (குறைத்து, பின்பு அதை) நீட்டுகின்றான் என்பதை நீங்கள் கவனிக்க வில்லையா? அவன் நாடியிருந்தால், அதனை ஒரே நிலையில் வைத்திருக்க முடியும். சூரியனை நிழலுக்கு வழிகாட்டியாக நாம்தான் ஆக்கினோம். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௪௫)

Jan Trust Foundation

(நபியே!) உம்முடைய இறைவன் நிழலை எப்படி நீட்டுகின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மேலும் அவன் நாடினால் அதனை (ஒரே நிலையில்) அசைவற்றிருக்கச் செய்ய முடியும். (நபியே!) பின்னர் சூரியனை - நாம் தாம் நிழலுக்கு ஆதாரமாக ஆக்கினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே) நீர் பார்க்கவில்லையா? உமது இறைவன் எப்படி நிழலை (அதிகாலையிலிருந்து சூரியன் உதிக்கும் வரை) நீட்டுகிறான். அவன் நாடியிருந்தால் அதை (நிழலை) நிரந்தரமாக ஆக்கியிருப்பான். பிறகு அதன் மீது சூரியனை நாம் ஆதாரமாக ஆக்கினோம். (சூரியன் உதிக்கும் போது இரவின் அந்த நிழல் மறைந்து விடுகிறது. இதன் மூலம் நிழலும் அல்லாஹ்வின் ஒரு படைப்புதான் என்று அறியமுடிகிறது.)