Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௪௪

Qur'an Surah Al-Furqan Verse 44

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ تَحْسَبُ اَنَّ اَكْثَرَهُمْ يَسْمَعُوْنَ اَوْ يَعْقِلُوْنَۗ اِنْ هُمْ اِلَّا كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ سَبِيْلًا ࣖ (الفرقان : ٢٥)

am
أَمْ
Or
அல்லது
taḥsabu
تَحْسَبُ
do you think
நீர் எண்ணுகிறீரா?
anna
أَنَّ
that
என்று
aktharahum
أَكْثَرَهُمْ
most of them
அதிகமானவர்கள் அவர்களில்
yasmaʿūna
يَسْمَعُونَ
hear
செவிமடுப்பார்கள்
aw
أَوْ
or
அல்லது
yaʿqilūna
يَعْقِلُونَۚ
understand?
சிந்தித்து புரிவார்கள்
in hum
إِنْ هُمْ
Not they
அவர்கள் இல்லை
illā
إِلَّا
(are) except
தவிர
kal-anʿāmi
كَٱلْأَنْعَٰمِۖ
like cattle
கால்நடைகளைப் போன்றே
bal
بَلْ
Nay
மாறாக
hum
هُمْ
they
அவர்கள்
aḍallu
أَضَلُّ
(are) more astray
வழிகெட்டவர்கள்
sabīlan
سَبِيلًا
(from the) way
பாதையால்

Transliteration:

Am tahsabu annna aksarahum yasma'oona aw ya''qiloon; in hum illaa kal an'aami bal hum adallu sabeelan (QS. al-Furq̈ān:44)

English Sahih International:

Or do you think that most of them hear or reason? They are not except like livestock. Rather, they are [even] more astray in [their] way. (QS. Al-Furqan, Ayah ௪௪)

Abdul Hameed Baqavi:

அவர்களில் பெரும்பாலானவர்கள் (உங்களுடைய வார்த்தைகளைக் காதால்) கேட்கிறார்கள் என்றோ அல்லது அதனை(த் தங்கள் மனதால்) உணர்ந்து பார்க்கின்றார்களென்றோ நீங்கள் எண்ணிக் கொண்டீர்களா? அன்று! அவர்கள் மிருகங்களைப் போன்றவர்களே அன்றி வேறில்லை. பின்னும், (மிருகங்களை விட) மிகவும் வழிகெட்டவர்களாகவும் இருக்கின்றனர். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௪௪)

Jan Trust Foundation

அல்லது, நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் (உம் உபதேசத்தைக்) கேட்கிறார்கள்; அல்லது அறிந்துணர்கிறார்கள் என்று நீர் நினைக்கின்றீரா? அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்களேயன்றி வேறில்லை-அல்ல; (அவற்றை விடவும்) அவர்கள், மிகவும் வழி கெட்டவர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களில் அதிகமானவர்கள் செவிமடுப்பார்கள் அல்லது சிந்தித்துப் புரிவார்கள் என்று நீர் எண்ணுகிறீரா? அவர்கள் இல்லை கால்நடைகளைப் போன்றே தவிர. மாறாக, அவர்கள் (அவற்றைவிட) பாதையால் வழி கெட்டவர்கள்.