Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௪௨

Qur'an Surah Al-Furqan Verse 42

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنْ كَادَ لَيُضِلُّنَا عَنْ اٰلِهَتِنَا لَوْلَآ اَنْ صَبَرْنَا عَلَيْهَاۗ وَسَوْفَ يَعْلَمُوْنَ حِيْنَ يَرَوْنَ الْعَذَابَ مَنْ اَضَلُّ سَبِيْلًا (الفرقان : ٢٥)

in kāda layuḍillunā
إِن كَادَ لَيُضِلُّنَا
He would have almost He would have almost [surely] misled us
இவர் நம்மை நிச்சயமாக வழி கெடுத்திருப்பார்
ʿan ālihatinā
عَنْ ءَالِهَتِنَا
from our gods
நமது தெய்வங்களை விட்டு
lawlā an ṣabarnā
لَوْلَآ أَن صَبَرْنَا
if not that we had been steadfast
நாம் உறுதியாக இருந்திருக்க வில்லையென்றால்
ʿalayhā
عَلَيْهَاۚ
to them"
அவற்றின் மீது
wasawfa yaʿlamūna
وَسَوْفَ يَعْلَمُونَ
And soon will know
அவர்கள் அறிந்து கொள்வார்கள்
ḥīna
حِينَ
when
போது
yarawna
يَرَوْنَ
they will see
அவர்கள் பார்க்கும்
l-ʿadhāba
ٱلْعَذَابَ
the punishment
தண்டனையை
man
مَنْ
who
யார்
aḍallu
أَضَلُّ
(is) more astray
மிக வழிகெட்டவர்
sabīlan
سَبِيلًا
(from the) way
பாதையால்

Transliteration:

In kaada la yudillunaa 'an aalihatinaa law laaa an sabarnaa 'alaihaa; wa sawfa ya'lamoona heena yarawnal 'azaaba man adallu sabeela (QS. al-Furq̈ān:42)

English Sahih International:

He almost would have misled us from our gods had we not been steadfast in [worship of] them." But they are going to know, when they see the punishment, who is farthest astray in [his] way. (QS. Al-Furqan, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

(அன்றி) "நாம் உறுதியாக இல்லையென்றால், நம்முடைய தெய்வங்களை விட்டும் நம்மை இவர் வழிகெடுத்தே இருப்பார்" (என்றும் கூறுகின்றனர். மறுமையில்) அவர்கள் வேதனையைத் தங்கள் கண்ணால் காணும் நேரத்தில் வழி கெட்டவர்கள் யார் என்பதை நன்கறிந்து கொள்வார்கள். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௪௨)

Jan Trust Foundation

“நாம் (நம் தெய்வங்களின் மீது) உறுதியாக இல்லாதிருந்தால், நம்முடைய தெய்வங்களை விட்டும் திருப்பி நம்மை இவர் வழி கெடுத்தேயிருப்பார்” (என்றும் அவர்கள் கூறுகின்றனர்; (மறுமையின்) வேதனையை அவர்கள் காணும்பொழுது, பாதையால் மிக வழிகெட்டவர்கள் யார் என்பதை நன்கறிந்து கொள்வார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர் நமது தெய்வங்களை விட்டு நம்மை நிச்சயமாக வழி கெடுத்திருப்பார், நாம் அவற்றின் மீது உறுதியாக இருந்திருக்கவில்லையென்றால். அவர்கள் தண்டனையை பார்க்கும் போது “யார் பாதையால் மிக வழிகெட்டவர்”(வழிகெட்ட பாதையில் சென்றவர்) என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள்.