Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௪௧

Qur'an Surah Al-Furqan Verse 41

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا رَاَوْكَ اِنْ يَّتَّخِذُوْنَكَ اِلَّا هُزُوًاۗ اَهٰذَا الَّذِيْ بَعَثَ اللّٰهُ رَسُوْلًا (الفرقان : ٢٥)

wa-idhā ra-awka
وَإِذَا رَأَوْكَ
And when they see you
அவர்கள் உம்மைப் பார்த்தால்
in yattakhidhūnaka
إِن يَتَّخِذُونَكَ
not they take you
உம்மை எடுத்துக் கொள்ளமாட்டார்கள்
illā
إِلَّا
except
தவிர
huzuwan
هُزُوًا
(in) mockery
கேலியாகவே
ahādhā
أَهَٰذَا
"Is this
இவரையா?
alladhī
ٱلَّذِى
the one whom
எவர்
baʿatha
بَعَثَ
Allah has sent
அனுப்பினான்
l-lahu
ٱللَّهُ
Allah has sent
அல்லாஹ்
rasūlan
رَسُولًا
(as) a Messenger?
தூதராக

Transliteration:

Wa izaa ra awka iny yattakhizoonaka illaa huzuwan ahaazal lazee ba'asal laahu Rasoolaa (QS. al-Furq̈ān:41)

English Sahih International:

And when they see you, [O Muhammad], they take you not except in ridicule, [saying], "Is this the one whom Allah has sent as a messenger? (QS. Al-Furqan, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இவர்கள் உங்களைக் கண்டால் உங்களைப் பற்றி "இவரையா அல்லாஹ் (தன்னுடைய) தூதராக அனுப்பி வைத்தான்?" என்று பரிகாசமாகக் கூறுகின்றனர். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௪௧)

Jan Trust Foundation

“இவரைத்தானா அல்லாஹ் தூதராக அனுப்பியிருக்கிறான்” (என்று கூறி) உம்மை அவர்கள் காணும் பொழுது உம்மைக் கேலிக்குரியவராக அவர்கள் கருதுகின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் உம்மைப் பார்த்தால் “இவரையா அல்லாஹ் தூதராக அனுப்பினான்?” என்று உம்மை கேலியாகவே தவிர எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.