Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௩௯

Qur'an Surah Al-Furqan Verse 39

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكُلًّا ضَرَبْنَا لَهُ الْاَمْثَالَۖ وَكُلًّا تَبَّرْنَا تَتْبِيْرًا (الفرقان : ٢٥)

wakullan
وَكُلًّا
And each
எல்லோருக்கும்
ḍarabnā
ضَرَبْنَا
We have set forth
நாம் விவரித்தோம்
lahu l-amthāla
لَهُ ٱلْأَمْثَٰلَۖ
for him the examples
அவர்களுக்கு/பல உதாரணங்களை
wakullan
وَكُلًّا
and each
எல்லோரையும்
tabbarnā
تَبَّرْنَا
We destroyed
நாம் அழித்துவிட்டோம்
tatbīran
تَتْبِيرًا
(with) destruction
அடியோடு

Transliteration:

Wa kullandarabnaa lahul amsaala wa kullan tabbarnaa tatbeera (QS. al-Furq̈ān:39)

English Sahih International:

And for each We presented examples [as warnings], and each We destroyed with [total] destruction. (QS. Al-Furqan, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

(அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு அழிந்துபோன முன்னிருந்தவர்களின் சரித்திரங்களை) அவர்கள் அனைவருக்கும் நாம் பல உதாரணங்களாகக் கூறினோம். (அவர்கள் அவைகளை நிராகரித்து விடவே,) அவர்கள் அனைவரையும் நாம் அடியோடு அழித்துவிட்டோம். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௩௯)

Jan Trust Foundation

அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் தெளிவான சான்றுகளை தெளிவுபடுத்தினோம். மேலும் (அவர்கள் அவைகளை நிராகரித்ததினால்) அவர்கள் அனைவரையும் முற்றாக அழித்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எல்லோருக்கும் நாம் பல உதாரணங்களை விவரித்தோம். (அவர்கள் மறுக்கவே, மறுத்த) எல்லோரையும் நாம் அடியோடு அழித்துவிட்டோம்.