குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௩௭
Qur'an Surah Al-Furqan Verse 37
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَوْمَ نُوْحٍ لَّمَّا كَذَّبُوا الرُّسُلَ اَغْرَقْنٰهُمْ وَجَعَلْنٰهُمْ لِلنَّاسِ اٰيَةًۗ وَاَعْتَدْنَا لِلظّٰلِمِيْنَ عَذَابًا اَلِيْمًا ۚ (الفرقان : ٢٥)
- waqawma
- وَقَوْمَ
- And (the) people
- இன்னும் மக்களையும்
- nūḥin
- نُوحٍ
- (of) Nuh
- நூஹூடைய
- lammā
- لَّمَّا
- when
- போது
- kadhabū
- كَذَّبُوا۟
- they denied
- அவர்கள் பொய்ப்பித்தனர்
- l-rusula
- ٱلرُّسُلَ
- the Messengers
- தூதர்களை
- aghraqnāhum
- أَغْرَقْنَٰهُمْ
- We drowned them
- அவர்களை மூழ்கடித்தோம்
- wajaʿalnāhum
- وَجَعَلْنَٰهُمْ
- and We made them
- அவர்களை ஆக்கினோம்
- lilnnāsi
- لِلنَّاسِ
- for mankind
- மக்களுக்கு
- āyatan
- ءَايَةًۖ
- a sign
- ஓர் அத்தாட்சியாக
- wa-aʿtadnā
- وَأَعْتَدْنَا
- And We have prepared
- இன்னும் நாம் தயார் படுத்தியுள்ளோம்
- lilẓẓālimīna
- لِلظَّٰلِمِينَ
- for the wrongdoers
- அநியாயக்காரர்களுக்கு
- ʿadhāban
- عَذَابًا
- a punishment
- தண்டனையை
- alīman
- أَلِيمًا
- painful
- வலி தரும்
Transliteration:
Wa qawma Noohil lammaa kazzabur Rusula aghraqnaahum wa ja'alnaahum linnaasi Aayatanw wa a'tadnaa lizzaalimeena 'azaaban aleemaa(QS. al-Furq̈ān:37)
English Sahih International:
And the people of Noah – when they denied the messengers, We drowned them, and We made them for mankind a sign. And We have prepared for the wrongdoers a painful punishment. (QS. Al-Furqan, Ayah ௩௭)
Abdul Hameed Baqavi:
நூஹ்வுடைய மக்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய சமயத்தில் அவர்களையும் மூழ்கடித்து, அவர்களை மனிதர்கள் அனைவருக்கும் ஓர் அத்தாட்சியாக ஆக்கினோம். இத்தகைய அநியாயக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௩௭)
Jan Trust Foundation
இன்னும்| நூஹின் சமூகத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது, நாம் அவர்களை மூழ்கடித்தோம்; அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம்; மேலும் அநியாயக் காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை நாம் சித்தப்படுத்தி இருக்கிறோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் நூஹ் உடைய மக்களையும் அவர்கள் தூதர்களை பொய்ப்பித்த போது அவர்களை மூழ்கடித்தோம். அவர்களை மக்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்கினோம். இன்னும் அநியாயக்காரர்களுக்கு வலி தரும் தண்டனையை நாம் தயார்படுத்தியுள்ளோம்.