Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௩௬

Qur'an Surah Al-Furqan Verse 36

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَقُلْنَا اذْهَبَآ اِلَى الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَاۗ فَدَمَّرْنٰهُمْ تَدْمِيْرًا ۗ (الفرقان : ٢٥)

faqul'nā
فَقُلْنَا
Then We said
நாம் கூறினோம்
idh'habā
ٱذْهَبَآ
"Go both of you
நீங்கள் இருவரும் செல்லுங்கள்
ilā l-qawmi
إِلَى ٱلْقَوْمِ
to the people
மக்களிடம்
alladhīna kadhabū
ٱلَّذِينَ كَذَّبُوا۟
those who have denied
பொய்ப்பித்தவர்கள்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
Our Signs"
நமது அத்தாட்சிகளை
fadammarnāhum
فَدَمَّرْنَٰهُمْ
Then We destroyed them
ஆகவே நாம் அவர்களை அழித்து விட்டோம்
tadmīran
تَدْمِيرًا
(with) destruction
முற்றிலும் தரை மட்டமாக

Transliteration:

Faqulnaz habaaa ilal qawmil lazeena kazzaboo bi Aayaatinaa fadammarnaahum tadmeeraa (QS. al-Furq̈ān:36)

English Sahih International:

And We said, "Go both of you to the people who have denied Our signs." Then We destroyed them with [complete] destruction. (QS. Al-Furqan, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

அவ்விருவரையும் நோக்கி, "எவர்கள் நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்யாக்கினார்களோ அவர்களிடம் நீங்கள் இருவரும் செல்லுங்கள்" எனக் கூறினோம். (அவ்வாறு அவர்கள் சென்று அவர்களுக்குக் கூறியதை அந்த மக்கள் நிராகரித்து விட்டதனால்) நாம் அவர்களை அடியோடு அழித்துவிட்டோம். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௩௬)

Jan Trust Foundation

ஆகவே நாம், “நீங்கள் இருவரும் நம் அத்தாட்சிகளைப் பொய்ப்பித்தார்களே அக்கூட்டத்தாரிடம் செல்லுங்கள்” என்று கூறினோம். பின்னர், அ(வ்வாறு பொய்ப்பித்த)வர்களை முற்றும் அழித்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் கூறினோம்:“நீங்கள் இருவரும் நமது அத்தாட்சிகளை பொய்ப்பித்த மக்களிடம் செல்லுங்கள்.” (அம்மக்கள் அவ்விருவரையும் நிராகரித்துவிட்டனர்.) ஆகவே, நாம் அவர்களை முற்றிலும் தரை மட்டமாக அழித்து விட்டோம்.