குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௩௧
Qur'an Surah Al-Furqan Verse 31
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَكَذٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِّنَ الْمُجْرِمِيْنَۗ وَكَفٰى بِرَبِّكَ هَادِيًا وَّنَصِيْرًا (الفرقان : ٢٥)
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- And thus
- இவ்வாறுதான்
- jaʿalnā
- جَعَلْنَا
- We have made
- நாம் ஆக்கினோம்
- likulli
- لِكُلِّ
- for every
- ஒவ்வொரு
- nabiyyin
- نَبِىٍّ
- Prophet
- நபிக்கும்
- ʿaduwwan
- عَدُوًّا
- an enemy
- எதிரிகளை
- mina l-muj'rimīna
- مِّنَ ٱلْمُجْرِمِينَۗ
- among the criminals
- குற்றவாளிகளில்
- wakafā
- وَكَفَىٰ
- But sufficient is
- போதுமானவன்
- birabbika
- بِرَبِّكَ
- your Lord
- உமது இறைவன்
- hādiyan
- هَادِيًا
- (as) a Guide
- நேர்வழி காட்டுபவனாக
- wanaṣīran
- وَنَصِيرًا
- and a Helper
- இன்னும் உதவுபவனாக
Transliteration:
Wa kazaalika ja'alnaa likulli Nabiyyin 'aduwwam minal mujrimeen; wa kafaa bi Rabbika haadiyanw wa naseeraa(QS. al-Furq̈ān:31)
English Sahih International:
And thus have We made for every prophet an enemy from among the criminals. But sufficient is your Lord as a guide and a helper. (QS. Al-Furqan, Ayah ௩௧)
Abdul Hameed Baqavi:
இவ்வாறே ஒவ்வொரு நபிமாருக்கும் குற்றவாளிகளை நாம் எதிரிகளாக ஏற்படுத்தி இருந்தோம். (நபியே!) உங்களுக்கு நேரான வழியை அறிவித்து, உதவி செய்ய உங்கள் இறைவனே போதுமானவன். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௩௧)
Jan Trust Foundation
மேலும், இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் குற்றவாளிகளிலிருந்து பகைவரை உண்டாக்கினோம்; இன்னும், உம்முடைய இறைவன் (உமக்கு) நேர்வழி காட்டியாகவும் உதவிபுரிபவனாகவும் இருக்கப் போதுமானவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவ்வாறுதான் ஒவ்வொரு நபிக்கும் குற்றவாளிகளில் இருந்து எதிரிகளை நாம் ஆக்கினோம். உமது இறைவன் (உமக்கு) நேர்வழி காட்டுபவனாக இன்னும் உதவுபவனாக போதுமானவன்.