Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௩

Qur'an Surah Al-Furqan Verse 3

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاتَّخَذُوْا مِنْ دُوْنِهٖٓ اٰلِهَةً لَّا يَخْلُقُوْنَ شَيْـًٔا وَّهُمْ يُخْلَقُوْنَ وَلَا يَمْلِكُوْنَ لِاَنْفُسِهِمْ ضَرًّا وَّلَا نَفْعًا وَّلَا يَمْلِكُوْنَ مَوْتًا وَّلَا حَيٰوةً وَّلَا نُشُوْرًا (الفرقان : ٢٥)

wa-ittakhadhū
وَٱتَّخَذُوا۟
Yet they have taken
அவர்கள் எடுத்துக் கொண்டனர்
min dūnihi
مِن دُونِهِۦٓ
besides Him besides Him
அவனையன்றி
ālihatan
ءَالِهَةً
gods
கடவுள்களை
lā yakhluqūna
لَّا يَخْلُقُونَ
not they create
படைக்க மாட்டார்கள்
shayan
شَيْـًٔا
anything
எதையும்
wahum
وَهُمْ
while they
அவர்கள்
yukh'laqūna
يُخْلَقُونَ
are created
படைக்கப்படுகிறார்கள்
walā yamlikūna
وَلَا يَمْلِكُونَ
and not they possess
இன்னும் உரிமை பெற மாட்டார்கள்
li-anfusihim
لِأَنفُسِهِمْ
for themselves
தங்களுக்குத் தாமே
ḍarran
ضَرًّا
any harm
தீமை செய்வதற்கும்
walā nafʿan
وَلَا نَفْعًا
and not any benefit
நன்மை செய்வதற்கும்
walā yamlikūna
وَلَا يَمْلِكُونَ
and not they control
இன்னும் உரிமை பெற மாட்டார்கள்
mawtan
مَوْتًا
death
இறப்பிற்கும்
walā ḥayatan
وَلَا حَيَوٰةً
and not life
வாழ்விற்கும்
walā nushūran
وَلَا نُشُورًا
and not resurrection
மீண்டும் உயிர்த்தெழ செய்வதற்கும்

Transliteration:

Wattakhazoo min dooniheee aahihatal laa yakhluqoona shai'anw wa hum yukhlaqoona wa laa yamlikoona li anfusihim darranw wa laa naf'anw wa laa yamlikoona mawtanw wa laa hayaatanw wa laa nushooraa (QS. al-Furq̈ān:3)

English Sahih International:

But they have taken besides Him gods which create nothing, while they are created, and possess not for themselves any harm or benefit and possess not [power to cause] death or life or resurrection. (QS. Al-Furqan, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறெல்லாமிருந்தும் இணைவைத்து வணங்குபவர்கள்) அல்லாஹ் அல்லாதவற்றை இறைவனாக எடுத்துக் கொண்டிருக் கிறார்கள். அவைகளோ (அல்லாஹ்வினால்) படைக்கப்பட்டவை. ஒன்றையும் அவை படைக்கவில்லை. யாதொரு நன்மையும் தீமையையும் தங்களுக்கே செய்துகொள்ளவும் அவை சக்தியற்றவை. அன்றி, உயிர்ப்பிக்கவோ, மரணிக்கச் செய்யவோ, உயிர் கொடுத்து எழுப்பவோ சக்தியற்றவைகளாகவும் இருக்கின்றன. (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௩)

Jan Trust Foundation

(எனினும் முஷ்ரிக்குகள்) அவனையன்றி (வேறு) தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் - அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; (ஏனெனில்) அவர்களே படைக்கப்பட்டவர்கள். இன்னும் அவர்கள்; தங்களுக்கு நன்மை செய்து கொள்ளவோ தீமையை தடுத்துக் கொள்ளவோ சக்திபெற மாட்டார்கள்; மேலும் அவர்கள் உயிர்ப்பிக்கவோ, மறிக்கச் செய்யவோ, மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பவோ, இயலாதவர்களாகவும் இருக்கின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் அவனை அன்றி (பல) கடவுள்களை எடுத்துக் கொண்டனர். அவர்கள் (-அந்த கடவுள்கள்) எதையும் படைக்க மாட்டார்கள். அவர்கள் படைக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்களுக்குத் தாமே தீமை செய்வதற்கும் நன்மை செய்வதற்கும் உரிமைபெற மாட்டார்கள். இன்னும் (பிறரின்) இறப்பிற்கும் வாழ்விற்கும் (அவரை) மீண்டும் உயிர்த்தெழச் செய்வதற்கும் அவர்கள் உரிமை பெற மாட்டார்கள்.