Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௨௨

Qur'an Surah Al-Furqan Verse 22

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَوْمَ يَرَوْنَ الْمَلٰۤىِٕكَةَ لَا بُشْرٰى يَوْمَىِٕذٍ لِّلْمُجْرِمِيْنَ وَيَقُوْلُوْنَ حِجْرًا مَّحْجُوْرًا (الفرقان : ٢٥)

yawma
يَوْمَ
(The) Day
நாளில்
yarawna
يَرَوْنَ
they see
அவர்கள் பார்ப்பார்கள்
l-malāikata
ٱلْمَلَٰٓئِكَةَ
the Angels
வானவர்களை
لَا
no
அறவே இல்லை
bush'rā
بُشْرَىٰ
glad tidings
நற்செய்தி
yawma-idhin
يَوْمَئِذٍ
(will be) that Day
இந்நாளில்
lil'muj'rimīna
لِّلْمُجْرِمِينَ
for the criminals
குற்றவாளிகளுக்கு
wayaqūlūna
وَيَقُولُونَ
and they will say
இன்னும் கூறுவார்கள்
ḥij'ran
حِجْرًا
"A partition
உங்களுக்கு தடுக்கப்பட்டு விட்டது
maḥjūran
مَّحْجُورًا
forbidden"
முற்றிலும்

Transliteration:

Yawma yarawnal malaaa 'ikata laa bushraa Yawma'izil lilmujrimeena wa yaqooloona hijram mahjooraa (QS. al-Furq̈ān:22)

English Sahih International:

The day they see the angels – no good tidings will there be that day for the criminals, and [the angels] will say, "Prevented and inaccessible." (QS. Al-Furqan, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

(அவர்கள் விரும்பியவாறு) மலக்குகளை அவர்கள் காணும் நாளில், இக்குற்றவாளிகளை நோக்கி "இன்றைய தினம் (உங்களுக்கு அழிவைத் தவிர) யாதொரு நல்ல செய்தியும் இல்லை" என்று (அம்மலக்குகள்) கூறுவார்கள். (அக்குற்றவாளிகளோ தங்களை அழிக்க வரும் அம்மலக்குகளைத்) "தடுத்துக் கொள்ளுங்கள்; தடுத்துக் கொள்ளுங்கள்" என்று சப்தமிடுவார்கள். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௨௨)

Jan Trust Foundation

அவர்கள் மலக்குகளைக் காணும் நாளில், அக்குற்றவாளிகளுக்கு நற்செய்தி எதுவும் அன்றைய தினம் இராது; (நற்பாக்கியம்) முற்றாக (உங்களுக்கு) தடுக்கப்பட்டு விட்டது என்று அந்த மலக்குகள் கூறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் வானவர்களை பார்க்கும் நாளில் (அந்த வானவர்கள் கூறுவார்கள்:) இந்நாளில் குற்றவாளிகளுக்கு நற்செய்தி அறவே இல்லை. இன்னும் (வானவர்கள்) கூறுவார்கள்: நற்செய்தி உங்களுக்கு முற்றிலும் தடுக்கப்பட்டு விட்டது.