Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௨௧

Qur'an Surah Al-Furqan Verse 21

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَقَالَ الَّذِيْنَ لَا يَرْجُوْنَ لِقَاۤءَنَا لَوْلَآ اُنْزِلَ عَلَيْنَا الْمَلٰۤىِٕكَةُ اَوْ نَرٰى رَبَّنَا ۗ لَقَدِ اسْتَكْبَرُوْا فِيْٓ اَنْفُسِهِمْ وَعَتَوْ عُتُوًّا كَبِيْرًا (الفرقان : ٢٥)

waqāla
وَقَالَ
And said
கூறினார்(கள்)
alladhīna lā yarjūna
ٱلَّذِينَ لَا يَرْجُونَ
those who (do) not expect
ஆதரவு வைக்காதவர்கள்
liqāanā
لِقَآءَنَا
(the) meeting with Us
நம் சந்திப்பை
lawlā unzila
لَوْلَآ أُنزِلَ
"Why not are sent down
இறக்கப்பட வேண்டாமா?
ʿalaynā
عَلَيْنَا
to us
எங்கள் மீது
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
the Angels
வானவர்கள்
aw
أَوْ
or
அல்லது
narā
نَرَىٰ
we see
நாங்கள் பார்க்க வேண்டாமா?
rabbanā
رَبَّنَاۗ
our Lord?"
எங்கள் இறைவனை
laqadi
لَقَدِ
Indeed
திட்டவட்டமாக
is'takbarū
ٱسْتَكْبَرُوا۟
they have become arrogant
அவர்கள் பெருமை அடித்தனர்
fī anfusihim
فِىٓ أَنفُسِهِمْ
within themselves
தங்களுக்குள்
waʿataw ʿutuwwan
وَعَتَوْ عُتُوًّا
and (become) insolent (with) insolence
இன்னும் கடுமையாக அழிச்சாட்டியம் செய்தனர்
kabīran
كَبِيرًا
great
மிகப்பெரிய அளவில்

Transliteration:

Wa qaalal lazeena laa yarjoona liqaaa'anaa law laaa unzila 'alainal malaaa'ikatu awnaraa Rabbanaa; laqadistakbaroo feee anfusihim wa 'ataw 'utuwwan kabeeraa (QS. al-Furq̈ān:21)

English Sahih International:

And those who do not expect the meeting with Us say, "Why were not angels sent down to us, or [why] do we [not] see our Lord?" They have certainly become arrogant within themselves and [become] insolent with great insolence. (QS. Al-Furqan, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

(மறுமை நாளில்) நம்மைச் சந்திப்பதை எவர்கள் நம்பவில்லையோ அவர்கள் "எங்கள் மீது (நேரடியாகவே) மலக்குகள் இறக்கப்பட வேண்டாமா? அல்லது (எங்களுடைய கண்களால்) எங்கள் இறைவனைப் பார்க்க வேண்டாமா?" என்று கூறுகின்றனர். இவர்கள் தங்களை மிக மிகப் பெரிதாக எண்ணிக்கொண்டு அளவு கடந்து (பெரும் பாவத்தில் சென்று) விட்டனர். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௨௧)

Jan Trust Foundation

மேலும் (மறுமையில்) நம் சந்திப்பை நம்பாது இருக்கிறார்களே அவர்கள்| “எங்களிடம் ஏன் மலக்குகள் அனுப்பப்படவில்லை? அல்லது ஏன் நாம் நம்முடைய இறைவனைக் காண முடியவில்லை?” என்று கூறுகிறார்கள். திடமாக அவர்கள் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்கள்; மேலும், மிகவும் வரம்பு கடந்து சென்று விட்டனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நமது சந்திப்பை ஆதரவு (நம்பிக்கை) வைக்காதவர்கள் கூறினர்: எங்கள் மீது வானவர்கள் இறக்கப்பட வேண்டாமா? அல்லது நாங்கள் எங்கள் இறைவனை பார்க்க வேண்டாமா? திட்டவட்டமாக அவர்கள் தங்களுக்குள் பெருமை அடித்தனர். இன்னும் மிகப் பெரிய அளவில் கடுமையாக அழிச்சாட்டியம் (சண்டித்தனம், மூர்க்கத்தனம்) செய்தனர்.