Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௨௦

Qur'an Surah Al-Furqan Verse 20

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَآ اَرْسَلْنَا قَبْلَكَ مِنَ الْمُرْسَلِيْنَ اِلَّآ اِنَّهُمْ لَيَأْكُلُوْنَ الطَّعَامَ وَيَمْشُوْنَ فِى الْاَسْوَاقِۗ وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً ۗ اَتَصْبِرُوْنَۚ وَكَانَ رَبُّكَ بَصِيْرًا ࣖ ۔ (الفرقان : ٢٥)

wamā arsalnā
وَمَآ أَرْسَلْنَا
And not We sent
நாம் அனுப்பவில்லை
qablaka
قَبْلَكَ
before you
உமக்கு முன்னர்
mina l-mur'salīna
مِنَ ٱلْمُرْسَلِينَ
any Messengers
தூதர்களில் எவரையும்
illā
إِلَّآ
but
தவிர
innahum
إِنَّهُمْ
indeed they
நிச்சயமாக அவர்கள்
layakulūna
لَيَأْكُلُونَ
[surely] ate
உண்பவர்களாக
l-ṭaʿāma
ٱلطَّعَامَ
food
உணவு
wayamshūna
وَيَمْشُونَ
and walked
இன்னும் நடந்து செல்பவர்களாக
fī l-aswāqi
فِى ٱلْأَسْوَاقِۗ
in the markets
கடைத் தெருக்களில்
wajaʿalnā
وَجَعَلْنَا
And We have made
ஆக்கினோம்
baʿḍakum
بَعْضَكُمْ
some of you
உங்களில் சிலரை
libaʿḍin
لِبَعْضٍ
for others
சிலருக்கு
fit'natan
فِتْنَةً
a trial
சோதனையாக
ataṣbirūna
أَتَصْبِرُونَۗ
will you have patience?
நீங்கள் பொறுப்பீர்களா?
wakāna
وَكَانَ
And is
இருக்கிறான்
rabbuka
رَبُّكَ
your Lord
உமது இறைவன்
baṣīran
بَصِيرًا
All-Seer
உற்று நோக்குபவனாக

Transliteration:

Wa maaa arsalnaa qablaka minal mursaleena illaaa innahum la yaakuloonat ta'aama wa yamshoona fil aswaaq; wa ja'alnaa ba'dakum liba'din fitnatan atasbiroon; wa kaana Rabbuka Baseera (QS. al-Furq̈ān:20)

English Sahih International:

And We did not send before you, [O Muhammad], any of the messengers except that they ate food and walked in the markets. And We have made some of you [people] as trial for others – will you have patience? And ever is your Lord, Seeing. (QS. Al-Furqan, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த நம்முடைய தூதர்களெல்லாம் நிச்சயமாக (உங்களைப் போல்) உணவு உண்பவர்களாகவும், கடைகளுக்குச் செல்பவர்களாகவும் இருந்தார்கள். எனினும், உங்களில் சிலரை சிலருக்குச் சோதனையாக ஆக்கி வைத்தோம். ஆகவே, (நம்பிக்கையாளர்களே! இந்நிராகரிப்பவர்கள் துன்புறுத்துவதை) நீங்களும் சகித்துக் கொண்டிருங்கள். (நபியே!) உங்களது இறைவன் (அனைத்தையும்) உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௨௦)

Jan Trust Foundation

(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களெல்லாம் நிச்சயமாக உணவருந்துபவர்களாகவும், கடை வீதிகளில் நடமாடுபவர்களாகவும் தாம் இருந்தார்கள்; மேலும், நாம் உங்களில் சிலரை மற்றும் சிலருக்குச் சோதனையாக்கி இருக்கிறோம் - ஆகவே நீங்கள் பொறுமையுடன் இருப்பீர்களா? உம்முடைய இறைவன் (யாவற்றையும்) உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உமக்கு முன்னர் தூதர்களில் எவரையும் நாம் அனுப்பவில்லை. நிச்சயமாக அவர்கள் உணவு உண்பவர்களாக, கடை வீதிகளில் நடந்து செல்பவர்களாக இருந்தே தவிர. உங்களில் சிலரை சிலருக்கு சோதனையாக ஆக்கினோம். நீங்கள் பொறு(மையாக இரு)ப்பீர்களா? உமது இறைவன் உற்று நோக்குபவனாக (அனைத்தையும் பார்ப்பவனாக) இருக்கிறான்.