Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௧௯

Qur'an Surah Al-Furqan Verse 19

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَقَدْ كَذَّبُوْكُمْ بِمَا تَقُوْلُوْنَۙ فَمَا تَسْتَطِيْعُوْنَ صَرْفًا وَّلَا نَصْرًاۚ وَمَنْ يَّظْلِمْ مِّنْكُمْ نُذِقْهُ عَذَابًا كَبِيْرًا (الفرقان : ٢٥)

faqad
فَقَدْ
"So verily
ஆகவே, திட்டமாக
kadhabūkum
كَذَّبُوكُم
they deny you
பொய்ப்பித்துவிட்டனர் உங்களை
bimā taqūlūna
بِمَا تَقُولُونَ
in what you say
நீங்கள் கூறியதில்
famā tastaṭīʿūna
فَمَا تَسْتَطِيعُونَ
so not you are able
ஆகவே, நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்
ṣarfan
صَرْفًا
(to) avert
திருப்பி விடுவதற்கோ
walā naṣran
وَلَا نَصْرًاۚ
and not (to) help"
உதவுவதற்கோ
waman
وَمَن
And whoever
யார்
yaẓlim
يَظْلِم
does wrong
அநீதி இழைத்துக் கொண்டாரோ
minkum
مِّنكُمْ
among you
உங்களில்
nudhiq'hu
نُذِقْهُ
We will make him taste
அவருக்கு சுவைக்க வைப்போம்
ʿadhāban
عَذَابًا
a punishment
தண்டனையை
kabīran
كَبِيرًا
great
பெரிய

Transliteration:

Faqad kazzabookum bimaa taqooloona famaa tastatee'oona sarfanw wa laa nasraa; wa mai yazlim minkum nuziqhu 'azaaban kabeeraa (QS. al-Furq̈ān:19)

English Sahih International:

So they will deny you, [disbelievers], in what you say, and you cannot avert [punishment] or [find] help. And whoever commits injustice among you – We will make him taste a great punishment. (QS. Al-Furqan, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

(ஆகவே, அந்த நிராகரிப்பவர்களை நோக்கி "உங்களை வழி கெடுத்தவை இவைதான் என்று) நீங்கள் கூறியதை இவைகளே பொய்யாக்கி விட்டன. ஆதலால், (நம்முடைய வேதனையைத்) தட்டிக் கழிக்கவும் உங்களால் முடியாது. (இவைகளின்) உதவியைப் பெற்றுக் கொள்ளவும் உங்களால் முடியாது.. ஆகவே, உங்களில் எவன் அநியாயம் செய்து கொண்டிருந்தானோ அவன் பெரும் வேதனையைச் சுவைக்கும்படி நிச்சயமாக நாம் செய்வோம்" (என்று கூறுவோம்). (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௧௯)

Jan Trust Foundation

நீங்கள் சொல்லியதையெல்லாம் திடனாக இவர்கள் பொய்யாக்கிவிட்டனர்; ஆகவே (இப்போது வேதனையைத்) தடுத்துக் கொள்ளவோ, உதவி பெற்றுக் கொள்ளவோ நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்; மேலும் உங்களில் எவன் அநியாயம் செய்து கொண்டிருந்தானோ, அவனை நாம் பெரியதொரு வேதனையைச் சுவைக்கச்செய்வோம்” (என்று இறைவன் கூறுவான்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, திட்டமாக இவர்கள் (-வானவர்கள், நபிமார்கள் மற்றும் நல்லவர்கள்) நீங்கள் கூறியதில் உங்களை பொய்ப்பித்து விட்டனர். ஆகவே, நீங்கள் (அல்லாஹ்வின் தண்டனையை தங்களை விட்டு) திருப்பி விடுவதற்கோ (தங்களுக்கு) உதவுவதற்கோ சக்தி பெறமாட்டீர்கள். உங்களில் யார் (இணைவைத்து தனக்குத்தானே) அநீதி இழைத்துக் கொண்டாரோ அவருக்கு பெரிய தண்டனையை சுவைக்க வைப்போம்.