குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௧௮
Qur'an Surah Al-Furqan Verse 18
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالُوْا سُبْحٰنَكَ مَا كَانَ يَنْۢبَغِيْ لَنَآ اَنْ نَّتَّخِذَ مِنْ دُوْنِكَ مِنْ اَوْلِيَاۤءَ وَلٰكِنْ مَّتَّعْتَهُمْ وَاٰبَاۤءَهُمْ حَتّٰى نَسُوا الذِّكْرَۚ وَكَانُوْا قَوْمًاۢ بُوْرًا (الفرقان : ٢٥)
- qālū
- قَالُوا۟
- They say
- அவர்கள் கூறுவர்
- sub'ḥānaka
- سُبْحَٰنَكَ
- "Glory be to You
- நீ மிகப் பரிசுத்தமானவன்
- mā kāna
- مَا كَانَ
- Not it was proper
- இல்லை
- yanbaghī
- يَنۢبَغِى
- it was proper
- தகுதியானதாக
- lanā
- لَنَآ
- for us
- எங்களுக்கு
- an nattakhidha
- أَن نَّتَّخِذَ
- that we take
- எடுத்துக் கொள்வது
- min dūnika
- مِن دُونِكَ
- besides You besides You
- உன்னை அன்றி
- min awliyāa
- مِنْ أَوْلِيَآءَ
- any protectors
- பாதுகாவலர்களை
- walākin
- وَلَٰكِن
- But
- எனினும்
- mattaʿtahum
- مَّتَّعْتَهُمْ
- You gave them comforts
- நீ அவர்களுக்கு சுகமளித்தாய்
- waābāahum
- وَءَابَآءَهُمْ
- and their forefathers
- மூதாதைகளுக்கும் அவர்களுடைய
- ḥattā
- حَتَّىٰ
- until
- இறுதியாக
- nasū
- نَسُوا۟
- they forgot
- அவர்கள் மறந்தனர்
- l-dhik'ra
- ٱلذِّكْرَ
- the Message
- அறிவுரையை
- wakānū
- وَكَانُوا۟
- and became
- இன்னும் ஆகிவிட்டனர்
- qawman
- قَوْمًۢا
- a people
- மக்களாக
- būran
- بُورًا
- ruined"
- அழிந்து போகும்
Transliteration:
Qaaloo Subhaanaka maa kaana yambaghee lanaaa an nattakhiza min doonika min awliyaaa'a wa laakim matta'tahum wa aabaaa'ahum hattaa nasuz zikra wa kaanoo qawmam booraa(QS. al-Furq̈ān:18)
English Sahih International:
They will say, "Exalted are You! It was not for us to take besides You any allies [i.e., protectors]. But You provided comforts for them and their fathers until they forgot the message and became a people ruined." (QS. Al-Furqan, Ayah ௧௮)
Abdul Hameed Baqavi:
அதற்கு அவை (இறைவனை நோக்கி) "நீ மிகப் பரிசுத்தமானவன். உன்னை அன்றி (மற்றெவரையும்) நாங்கள் எங்களுக்கு காப்பவனாக எடுத்துக்கொள்வது எங்களுக்குத் தகுதியன்று. எனினும், நீதான் அவர்களுக்கும் அவர்களுடைய மூதாதைகளுக்கும் சுகபோகத்தைக் கொடுத்தாய். அதனால் அவர்கள் (உன்னை) நினைப்பதையே மறந்து (தாங்களாகவே பாவம் செய்து) அழிந்துபோகும் மக்களாகி விட்டார்கள்" என்று கூறும். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௧௮)
Jan Trust Foundation
(அதற்கு) அவர்கள் “இறைவா! நீ தூயவன். உன்னையன்றி நாங்கள் பாது காவலர்களை ஏற்படுத்திக் கொள்ள எங்களுக்குத் தேவையில்லையே! எனினும் நீ இவர்களையும் இவர்களுடைய மூதாதையர்களையும் சுகம் அனுபவிக்கச் செய்தாய்; அவர்களோ உன் நினைப்பை மறந்தார்கள்; மேலும் அழிந்து போகும் கூட்டத்தாரானார்கள்” என்று கூறுவர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் கூறுவர்: நீ மிகப் பரிசுத்தமானவன். உன்னை அன்றி பாதுகாவலர்களை (தெய்வங்களை) எடுத்துக் கொள்வது எங்களுக்கு தகுதியானதாக (சரியானதாக) இல்லை. எனினும், நீ அவர்களுக்கும் அவர்களுடைய மூதாதைகளுக்கும் (வாழ்க்கையில்) சுகமளித்தாய். இறுதியாக, அவர்கள் (உனது) அறிவுரையை மறந்தனர். இன்னும் அழிந்து போகும் மக்களாக ஆகிவிட்டனர்.