Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௧௫

Qur'an Surah Al-Furqan Verse 15

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اَذٰلِكَ خَيْرٌ اَمْ جَنَّةُ الْخُلْدِ الَّتِيْ وُعِدَ الْمُتَّقُوْنَۗ كَانَتْ لَهُمْ جَزَاۤءً وَّمَصِيْرًا (الفرقان : ٢٥)

qul
قُلْ
Say
நீர் கேட்பீராக!
adhālika
أَذَٰلِكَ
"Is that
அது?
khayrun
خَيْرٌ
better
சிறந்ததா
am
أَمْ
or
அல்லது
jannatu l-khul'di
جَنَّةُ ٱلْخُلْدِ
Garden (of) Eternity
ஜன்னதுல் குல்து
allatī
ٱلَّتِى
which
எது
wuʿida
وُعِدَ
is promised
வாக்களிக்கப்பட்டனர்
l-mutaqūna
ٱلْمُتَّقُونَۚ
(to) the righteous?
இறையச்சமுள்ளவர்கள்
kānat
كَانَتْ
It will be
அது இருக்கும்
lahum
لَهُمْ
for them
அவர்களுக்கு
jazāan
جَزَآءً
a reward
கூலியாகவும்
wamaṣīran
وَمَصِيرًا
and destination
மீளுமிடமாகவும்

Transliteration:

Qul azaalika khairun am Jannatul khuldil latee wu'idal muttaqoon; kaanat lahum jazaaa'anw wa maseeraa (QS. al-Furq̈ān:15)

English Sahih International:

Say, "Is that better or the Garden of Eternity which is promised to the righteous? It will be for them a reward and destination. (QS. Al-Furqan, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கேளுங்கள்: "அந்த நரகம் மேலா? அல்லது பரிசுத்தவான்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலையான சுவனபதி மேலா? அது அவர்களுக்கு (நற்) கூலியாகவும், அவர்கள் சேருமிடமாகவும் இருக்கின்றது. (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௧௫)

Jan Trust Foundation

அ(த்தகைய நரகமான)து நல்லதா? அல்லது பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நித்திய சுவர்க்கம் நல்லதா? அது அவர்களுக்கு நற்கூலியாகவும், அவர்கள் போய்ச் சேருமிடமாகவும் இருக்கும்” என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) நீர் கேட்பீராக! அது (-நரகம்) சிறந்ததா? அல்லது இறை அச்சமுள்ளவர்கள் வாக்களிக்கப்பட்ட ஜன்னதுல் குல்து (நிரந்தர சொர்க்கம்) சிறந்ததா? அது அவர்களுக்கு கூலியாகவும் மீளுமிடமாகவும் இருக்கும்.