குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௧௦
Qur'an Surah Al-Furqan Verse 10
ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تَبٰرَكَ الَّذِيْٓ اِنْ شَاۤءَ جَعَلَ لَكَ خَيْرًا مِّنْ ذٰلِكَ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُۙ وَيَجْعَلْ لَّكَ قُصُوْرًا (الفرقان : ٢٥)
- tabāraka
- تَبَارَكَ
- Blessed is He
- அருள் நிறைந்தவன்
- alladhī in shāa
- ٱلَّذِىٓ إِن شَآءَ
- Who if He willed
- எவன்/அவன் நாடினால்
- jaʿala
- جَعَلَ
- (could have) made
- ஏற்படுத்துவான்
- laka
- لَكَ
- for you
- உமக்கு
- khayran
- خَيْرًا
- better
- சிறந்ததை
- min dhālika
- مِّن ذَٰلِكَ
- than that -
- இவற்றை விட
- jannātin
- جَنَّٰتٍ
- gardens -
- சொர்க்கங்களை
- tajrī
- تَجْرِى
- flow
- ஓடும்
- min taḥtihā
- مِن تَحْتِهَا
- from underneath it
- அவற்றை சுற்றி
- l-anhāru
- ٱلْأَنْهَٰرُ
- the rivers
- நதிகள்
- wayajʿal
- وَيَجْعَل
- and He (could) make
- இன்னும் ஏற்படுத்துவான்
- laka
- لَّكَ
- for you
- உமக்கு
- quṣūran
- قُصُورًۢا
- palaces
- மாளிகைகளை
Transliteration:
Tabaarakal lazeee in shaaa'a ja'ala laka khairam min zaalika jannaatin tajree min tahtihal anhaaru wa yaj'al laka qusooraa(QS. al-Furq̈ān:10)
English Sahih International:
Blessed is He who, if He willed, could have made for you [something] better than that – gardens beneath which rivers flow – and could make for you palaces. (QS. Al-Furqan, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
(நபியே! உங்களது இறைவனாகிய) அவன் மிக்க பாக்கியமுடையவன். அவன் நாடினால் (இந்நிராகரிப்பவர்கள் கோரும்) இவைகளைச் சொந்தமாக்கி மிக்க மேலான சுவனபதியை உங்களுக்குத் தரக்கூடியவன். அவைகளில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதில் உங்களுக்குப் பல மாட மாளிகை களையும் அமைத்து விடுவான். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௧௦)
Jan Trust Foundation
(நபியே! இந்நிராகரிப்போர் சொல்வதைவிட) மேலான சுவன(த் தோட்ட)ங்களை அவன் நாடினால் உமக்காக உண்டாக்குவானே (அந்த நாயன்) பாக்கியம் மிக்கவன்; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும் - இன்னும் உமக்காக (அங்கு) மாளிகைகளையும் அவன் உண்டாக்குவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் (-அல்லாஹ்) அருள் நிறைந்தவன். அவன் நாடினால் உமக்கு இவற்றைவிட சிறந்ததை - அவற்றை சுற்றி நதிகள் ஓடும் சொர்க்கங்களை- ஏற்படுத்துவான். இன்னும் உமக்கு (அங்கு) மாளிகைகளை ஏற்படுத்துவான்.