Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௧

Qur'an Surah Al-Furqan Verse 1

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تَبٰرَكَ الَّذِيْ نَزَّلَ الْفُرْقَانَ عَلٰى عَبْدِهٖ لِيَكُوْنَ لِلْعٰلَمِيْنَ نَذِيْرًا ۙ (الفرقان : ٢٥)

tabāraka
تَبَارَكَ
Blessed is He
மிக்க அருள் நிறைந்தவன்
alladhī nazzala
ٱلَّذِى نَزَّلَ
Who sent down
எவன்/இறக்கினான்
l-fur'qāna
ٱلْفُرْقَانَ
the Criterion
பகுத்தறிவிக்கும் வேதத்தை
ʿalā ʿabdihi
عَلَىٰ عَبْدِهِۦ
upon His slave
தனது அடியார் மீது
liyakūna
لِيَكُونَ
that he may be
அவர் இருப்பதற்காக
lil'ʿālamīna
لِلْعَٰلَمِينَ
to the worlds
அகிலத்தார்களை
nadhīran
نَذِيرًا
a warner -
எச்சரிப்பவராக

Transliteration:

Tabaarakal lazee nazzalal Furqaana 'alaa 'abdihee li yakoona lil'aalameena nazeera (QS. al-Furq̈ān:1)

English Sahih International:

Blessed is He who sent down the Criterion upon His Servant that he may be to the worlds a warner – (QS. Al-Furqan, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

(நன்மை தீமைகளைத் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தை தன் அடியார் (முஹம்மது) மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். இது உலகத்தார் அனைவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாக இருக்கின்றது. (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௧)

Jan Trust Foundation

உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தனது அடியார் மீது -அவர் அகிலத்தார்களை எச்சரிப்பவராக இருப்பதற்காக - பகுத்தறிவிக்கும் வேதத்தை இறக்கியவன் மிக்க அருள் நிறைந்தவன்,