Skip to content

ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் - Page: 8

Al-Furqan

(al-Furq̈ān)

௭௧

وَمَنْ تَابَ وَعَمِلَ صَالِحًا فَاِنَّهٗ يَتُوْبُ اِلَى اللّٰهِ مَتَابًا ٧١

waman
وَمَن
யார்
tāba
تَابَ
திருந்துவார்
waʿamila
وَعَمِلَ
இன்னும் செய்வார்
ṣāliḥan
صَٰلِحًا
நன்மை
fa-innahu
فَإِنَّهُۥ
நிச்சயமாக அவர்
yatūbu
يَتُوبُ
திரும்பி விடுகிறார்
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்
matāban
مَتَابًا
திரும்புதல்-முற்றிலும்
ஆகவே, எவர்கள் கைசேதப்பட்டு (பாவத்திலிருந்து) விலகி மன்னிப்புக் கோருவதுடன், நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள், நிச்சயமாக முற்றிலும் அல்லாஹ்விடமே திரும்பி விடுகின்றனர். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௭௧)
Tafseer
௭௨

وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَاِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا ٧٢

wa-alladhīna lā yashhadūna
وَٱلَّذِينَ لَا يَشْهَدُونَ
இன்னும் அவர்கள் ஆஜராக மாட்டார்கள்
l-zūra
ٱلزُّورَ
பொய்யான செயலுக்கு
wa-idhā marrū
وَإِذَا مَرُّوا۟
இன்னும் இவர்கள் கடந்து சென்றால்
bil-laghwi
بِٱللَّغْوِ
வீணான செயலுக்கு
marrū
مَرُّوا۟
கடந்து சென்று விடுவார்கள்
kirāman
كِرَامًا
கண்ணியவான்களாக
அன்றி, எவர்கள் பொய் சாட்சி சொல்லாமலும் (வீணான காரியம் நடைபெறும் இடத்திற்குச் செல்லாமலும்) ஒருக்கால் (அத்தகைய இடத்திற்குச்) செல்லும்படி ஏற்பட்டு விட்டபோதிலும் (அதில் சம்பந்தப்படாது) கண்ணியமான முறையில் (அதனைக் கடந்து) சென்று விடுகின்றார்களோ அவர்களும், ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௭௨)
Tafseer
௭௩

وَالَّذِيْنَ اِذَا ذُكِّرُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوْا عَلَيْهَا صُمًّا وَّعُمْيَانًا ٧٣

wa-alladhīna idhā dhukkirū
وَٱلَّذِينَ إِذَا ذُكِّرُوا۟
இன்னும் எவர்கள்/அவர்கள் அறிவுறுத்தப்பட்டால்
biāyāti
بِـَٔايَٰتِ
வசனங்களைக் கொண்டு
rabbihim
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
lam yakhirrū
لَمْ يَخِرُّوا۟
விழ மாட்டார்கள்
ʿalayhā
عَلَيْهَا
அவற்றின் மீது
ṣumman
صُمًّا
செவிடர்களாக
waʿum'yānan
وَعُمْيَانًا
இன்னும் குருடர்களாக
இன்னும் எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் குருடர்களைப் போலும் செவிடர்களைப் போலும் அதன் மீது அடித்து விழாமல்; (அதனை முற்றிலும் நன்குணர்ந்து கொள்வதுடன் அதன்படி செயல்படுகிறார்களோ அவர்களும்) ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௭௩)
Tafseer
௭௪

وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا ٧٤

wa-alladhīna yaqūlūna
وَٱلَّذِينَ يَقُولُونَ
அவர்கள் கூறுவார்கள்
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா!
hab
هَبْ
தருவாயாக!
lanā
لَنَا
எங்களுக்கு
min azwājinā
مِنْ أَزْوَٰجِنَا
எங்கள் மனைவிகள் மூலமும்
wadhurriyyātinā
وَذُرِّيَّٰتِنَا
எங்கள் சந்ததிகள் மூலமும்
qurrata
قُرَّةَ
குளிர்ச்சியை
aʿyunin
أَعْيُنٍ
கண்களுக்கு
wa-ij'ʿalnā
وَٱجْعَلْنَا
எங்களை ஆக்குவாயாக!
lil'muttaqīna
لِلْمُتَّقِينَ
இறையச்சமுள்ளவர்களுக்கு
imāman
إِمَامًا
இமாம்களாக
மேலும், எவர்கள் "எங்கள் இறைவனே! எங்கள் மனைவியையும், எங்கள் மக்களையும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! அன்றி, பரிசுத்தவான்களுக்கு வழிகாட்டியாகவும் எங்களை நீ ஆக்குவாயாக!" என்று பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களும்; ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௭௪)
Tafseer
௭௫

اُولٰۤىِٕكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوْا وَيُلَقَّوْنَ فِيْهَا تَحِيَّةً وَّسَلٰمًا ۙ ٧٥

ulāika
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
yuj'zawna
يُجْزَوْنَ
கூலியாக கொடுக்கப்படுவார்கள்
l-ghur'fata
ٱلْغُرْفَةَ
அறையை
bimā ṣabarū
بِمَا صَبَرُوا۟
அவர்கள் பொறுமையாக இருந்ததால்
wayulaqqawna
وَيُلَقَّوْنَ
சந்திக்கப்படுவார்கள்
fīhā
فِيهَا
அதில்
taḥiyyatan
تَحِيَّةً
முகமனைக்கொண்டும்
wasalāman
وَسَلَٰمًا
ஸலாமைக் கொண்டும்
ஆகிய இத்தகையவருக்கு, அவர்கள் (பல நல்ல காரியங்களைச் செய்திருப்பதுடன் அவைகளைச் செய்யும்போது ஏற்பட்ட) கஷ்டங்களைச் சகித்துக்கொண்டதன் காரணமாக உயர்ந்த மாளிகைகள் (மறுமையில்) கொடுக்கப்படும். "ஈடேற்றம் (உண்டாவதாக)" என்று போற்றி அதில் அவர்கள் வரவேற்கப் படுவார்கள். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௭௫)
Tafseer
௭௬

خٰلِدِيْنَ فِيْهَاۗ حَسُنَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا ٧٦

khālidīna
خَٰلِدِينَ
அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்
fīhā
فِيهَاۚ
அதில்
ḥasunat
حَسُنَتْ
அது மிக அழகானது
mus'taqarran
مُسْتَقَرًّا
நிரந்தரமான தங்குமிடத்தாலும்
wamuqāman
وَمُقَامًا
தற்காலிகமான தங்குமிடத்தாலும்
என்றென்றும் அதில் தங்கிவிடுவார்கள். சிறிது நேரம் தங்குவதாயினும் சரி, என்றென்றும் தங்குவதாயினும் சரி, அது மிக்க (நல்ல) அழகான தங்குமிடம். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௭௬)
Tafseer
௭௭

قُلْ مَا يَعْبَؤُا بِكُمْ رَبِّيْ لَوْلَا دُعَاۤؤُكُمْۚ فَقَدْ كَذَّبْتُمْ فَسَوْفَ يَكُوْنُ لِزَامًا ࣖ ٧٧

qul
قُلْ
கூறுவீராக!
mā yaʿba-u
مَا يَعْبَؤُا۟
ஒரு பொருட்டாகவே கருதமாட்டான்
bikum
بِكُمْ
உங்களை
rabbī
رَبِّى
என் இறைவன்
lawlā
لَوْلَا
இல்லாதிருந்தால்
duʿāukum
دُعَآؤُكُمْۖ
பிரார்த்தனை உங்கள்
faqad
فَقَدْ
திட்டமாக
kadhabtum
كَذَّبْتُمْ
நீங்கள் பொய்ப்பித்தீர்கள்
fasawfa yakūnu
فَسَوْفَ يَكُونُ
இது கண்டிப்பாக இருக்கும்
lizāman
لِزَامًۢا
உங்களை தொடரக்கூடியதாக
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் என் இறைவனை(க் கெஞ்சிப்) பிரார்த்தனை செய்யாவிடில் (அதற்காக) அவன் உங்களைப் பொருட்படுத்த மாட்டான். ஏனென்றால், நீங்கள் (அவனுடைய வசனங்களை) நிச்சயமாக பொய்யாக்கிக் கொண்டே இருக்கிறீர்கள். ஆகவே, அதன் வேதனை (உங்களைக்) கண்டிப்பாகப் பிடித்தே தீரும். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௭௭)
Tafseer