Skip to content

ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் - Page: 7

Al-Furqan

(al-Furq̈ān)

௬௧

تَبٰرَكَ الَّذِيْ جَعَلَ فِى السَّمَاۤءِ بُرُوْجًا وَّجَعَلَ فِيْهَا سِرَاجًا وَّقَمَرًا مُّنِيْرًا ٦١

tabāraka
تَبَارَكَ
மிக்க அருள் நிறைந்தவன்
alladhī jaʿala
ٱلَّذِى جَعَلَ
எவன்/அமைத்தான்
fī l-samāi
فِى ٱلسَّمَآءِ
வானங்களில்
burūjan
بُرُوجًا
பெரும் கோட்டைகளை
wajaʿala
وَجَعَلَ
இன்னும் அமைத்தான்
fīhā
فِيهَا
அதில்
sirājan
سِرَٰجًا
சூரியனையும்
waqamaran
وَقَمَرًا
சந்திரனையும்
munīran
مُّنِيرًا
ஒளிரும்
(அந்த ரஹ்மான்) மிக்க பாக்கியமுடையவன். அவன்தான் வானத்தில் நட்சத்திரங்களை அமைத்து, அதில் (சூரியனை) ஒளியாகவும், சந்திரனைப் பிரகாசம் தரக்கூடியதாகவும் அமைத்தான். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௬௧)
Tafseer
௬௨

وَهُوَ الَّذِيْ جَعَلَ الَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِّمَنْ اَرَادَ اَنْ يَّذَّكَّرَ اَوْ اَرَادَ شُكُوْرًا ٦٢

wahuwa alladhī
وَهُوَ ٱلَّذِى
அவன்தான்
jaʿala
جَعَلَ
அமைத்தான்
al-layla
ٱلَّيْلَ
இரவையும்
wal-nahāra
وَٱلنَّهَارَ
பகலையும்
khil'fatan
خِلْفَةً
பகரமாக
liman arāda
لِّمَنْ أَرَادَ
நாடுபவருக்கு
an yadhakkara
أَن يَذَّكَّرَ
நல்லறிவு பெற
aw
أَوْ
அல்லது
arāda
أَرَادَ
நாடினார்
shukūran
شُكُورًا
நன்றிசெய்ய
அவன்தான் இரவையும், பகலையும் மாறி மாறி வரும்படி செய்திருக்கின்றான். (இதனைக் கொண்டு) எவர்கள் நல்லுணர்ச்சி பெற்று, அவனுக்கு நன்றி செலுத்த விரும்புகிறார்களோ அவர்களுக்காக (இதைக் கூறுகின்றான்). ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௬௨)
Tafseer
௬௩

وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِيْنَ يَمْشُوْنَ عَلَى الْاَرْضِ هَوْنًا وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا ٦٣

waʿibādu
وَعِبَادُ
அடியார்கள்
l-raḥmāni
ٱلرَّحْمَٰنِ
பேரருளாளனுடைய
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yamshūna
يَمْشُونَ
நடப்பார்கள்
ʿalā l-arḍi
عَلَى ٱلْأَرْضِ
பூமியில்
hawnan
هَوْنًا
மென்மையாக
wa-idhā khāṭabahumu
وَإِذَا خَاطَبَهُمُ
இன்னும் அவர்களிடம் பேசினால்
l-jāhilūna
ٱلْجَٰهِلُونَ
அறிவீனர்கள்
qālū
قَالُوا۟
கூறி விடுவார்கள்
salāman
سَلَٰمًا
ஸலாம்
இவர்கள்தாம், ரஹ்மானுடைய அடியார்கள்: பூமியில் (அடக்கமாகவும்) பணிவாகவும் நடப்பார்கள். மூடர்கள் அவர்களுடன் தர்க்கிக்க முற்பட்டால் "ஸலாமுன்" என்று கூறி (அவர்களை விட்டு விலகி) விடுவார்கள். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௬௩)
Tafseer
௬௪

وَالَّذِيْنَ يَبِيْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّقِيَامًا ٦٤

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
yabītūna
يَبِيتُونَ
இரவு கழிப்பார்கள்
lirabbihim
لِرَبِّهِمْ
தங்கள் இறைவனுக்கு
sujjadan
سُجَّدًا
சிரம் பணிந்தவர்களாக
waqiyāman
وَقِيَٰمًا
நின்றவர்களாக
அன்றி, அவர்கள் தங்கள் இறைவனை, நின்றவர்களாகவும் சிரம் பணிந்தவர்களாகவும் இரவெல்லாம் வணங்கிக் கொண்டு இருப்பார்கள். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௬௪)
Tafseer
௬௫

وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَۖ اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ۖ ٦٥

wa-alladhīna yaqūlūna
وَٱلَّذِينَ يَقُولُونَ
இன்னும் அவர்கள் கூறுவார்கள்
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா!
iṣ'rif
ٱصْرِفْ
திருப்பி விடு
ʿannā
عَنَّا
எங்களை விட்டு
ʿadhāba
عَذَابَ
தண்டனையை
jahannama
جَهَنَّمَۖ
நரகமுடைய
inna
إِنَّ
நிச்சயமாக
ʿadhābahā
عَذَابَهَا
அதனுடைய தண்டனை
kāna
كَانَ
இருக்கிறது
gharāman
غَرَامًا
நீங்காத ஒன்றாக
தவிர, அவர்கள் "எங்கள் இறைவனே! நரகத்தின் வேதனையை எங்களை விட்டு நீ தடுத்துக் கொள்வாயாக! ஏனென்றால், அதன் வேதனையானது நிச்சயமாக நிலையான துன்பமாகும்" என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பார்கள். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௬௫)
Tafseer
௬௬

اِنَّهَا سَاۤءَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا ٦٦

innahā
إِنَّهَا
நிச்சயமாக அது
sāat
سَآءَتْ
மிக கெட்டது
mus'taqarran
مُسْتَقَرًّا
நிரந்தரமானது
wamuqāman
وَمُقَامًا
தற்காலிகமான தங்குமிடத்தாலும்
(அன்றி) "சிறிது நேரமோ அல்லது எப்பொழுதுமோ தங்குவதற்கும் அது மிகக் கெட்ட இடமாகும் (ஆகவே, அதில் இருந்து எங்களை நீ பாதுகாத்துக்கொள்" என்று பிரார்த்திப்பார்கள்). ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௬௬)
Tafseer
௬௭

وَالَّذِيْنَ اِذَآ اَنْفَقُوْا لَمْ يُسْرِفُوْا وَلَمْ يَقْتُرُوْا وَكَانَ بَيْنَ ذٰلِكَ قَوَامًا ٦٧

wa-alladhīna idhā anfaqū
وَٱلَّذِينَ إِذَآ أَنفَقُوا۟
அவர்கள் செலவு செய்தால்
lam yus'rifū
لَمْ يُسْرِفُوا۟
வரம்பு மீறமாட்டார்கள்
walam yaqturū
وَلَمْ يَقْتُرُوا۟
இன்னும் கருமித்தனமும் காட்ட மாட்டார்கள்
wakāna
وَكَانَ
இருக்கும்
bayna
بَيْنَ
மத்தியில்
dhālika
ذَٰلِكَ
அதற்கு
qawāman
قَوَامًا
நடுநிலையாக
அன்றி, அவர்கள் தானம் கொடுத்தால் அளவு கடந்தும் கொடுத்துவிட மாட்டார்கள்; கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். இதற்கு மத்திய தரத்தில் கொடுப்பார்கள். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௬௭)
Tafseer
௬௮

وَالَّذِيْنَ لَا يَدْعُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ وَلَا يَقْتُلُوْنَ النَّفْسَ الَّتِيْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُوْنَۚ وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ يَلْقَ اَثَامًا ۙ ٦٨

wa-alladhīna lā yadʿūna
وَٱلَّذِينَ لَا يَدْعُونَ
அவர்கள் அழைக்க மாட்டார்கள்
maʿa l-lahi
مَعَ ٱللَّهِ
அல்லாஹ்வுடன்
ilāhan
إِلَٰهًا
ஒரு கடவுளை
ākhara
ءَاخَرَ
வேறு
walā yaqtulūna
وَلَا يَقْتُلُونَ
இன்னும் கொல்ல மாட்டார்கள்
l-nafsa
ٱلنَّفْسَ
உயிரை
allatī ḥarrama
ٱلَّتِى حَرَّمَ
எது/தடுத்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
illā
إِلَّا
தவிர
bil-ḥaqi
بِٱلْحَقِّ
உரிமையைக் கொண்டே
walā yaznūna
وَلَا يَزْنُونَۚ
இன்னும் விபசாரம் செய்யமாட்டார்கள்
waman yafʿal
وَمَن يَفْعَلْ
யார் செய்வாரோ
dhālika
ذَٰلِكَ
இவற்றை
yalqa
يَلْقَ
அவர் சந்திப்பார்
athāman
أَثَامًا
தண்டனையை
தவிர, அவர்கள் அல்லாஹ்வுடன் வேறொருவரையும் வணக்கத்திற்குரியவனாக அழைக்க மாட்டார்கள். (கொலை செய்யக் கூடாதென்று) அல்லாஹ் தடுத்திருக்கும் எம்மனிதனையும் அவர்கள் நியாயமின்றிக் கொலை செய்ய மாட்டார்கள்; விபசாரமும் செய்ய மாட்டார்கள். ஆகவே, எவனேனும் இத்தகைய தீய காரியங்களைச் செய்ய முற்பட்டால், அவன் (அதற்குரிய) தண்டனையை அடைய வேண்டியதுதான். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௬௮)
Tafseer
௬௯

يُّضٰعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيٰمَةِ وَيَخْلُدْ فِيْهٖ مُهَانًا ۙ ٦٩

yuḍāʿaf
يُضَٰعَفْ
பன்மடங்காக ஆக்கப்படும்
lahu
لَهُ
அவருக்கு
l-ʿadhābu
ٱلْعَذَابُ
அந்த தண்டனை
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
wayakhlud
وَيَخْلُدْ
நிரந்தரமாக தங்கி விடுவார்
fīhi
فِيهِۦ
அதில்
muhānan
مُهَانًا
இழிவுபடுத்தப்பட்டவராக
மறுமை நாளிலோ அவனுடைய வேதனை இரட்டிப்பாக ஆக்கப்பட்டு இழிவுபட்டவனாக வேதனையில் என்றென்றும் தங்கி விடுவான். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௬௯)
Tafseer
௭௦

اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَاُولٰۤىِٕكَ يُبَدِّلُ اللّٰهُ سَيِّاٰتِهِمْ حَسَنٰتٍۗ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا ٧٠

illā
إِلَّا
எனினும்,
man
مَن
யார்
tāba
تَابَ
திருந்தினார்(கள்)
waāmana
وَءَامَنَ
இன்னும் நம்பிக்கை கொண்டார்(கள்)
waʿamila
وَعَمِلَ
இன்னும் செய்தார்
ʿamalan
عَمَلًا
செயலை
ṣāliḥan
صَٰلِحًا
நன்மையான
fa-ulāika
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
yubaddilu
يُبَدِّلُ
மாற்றி விடுவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
sayyiātihim
سَيِّـَٔاتِهِمْ
அவர்களுடைய தீய செயல்களை
ḥasanātin
حَسَنَٰتٍۗ
நல்ல செயல்களாக
wakāna
وَكَانَ
இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ghafūran
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
raḥīman
رَّحِيمًا
பெரும் கருணையாளனாக
ஆயினும், (அவர்களில்) எவர்கள் பாவத்திலிருந்து விலகி (மன்னிப்பு கோரி) நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ, அத்தகையவர்கள் (முன்னர் செய்துவிட்ட) பாவங்களை அல்லாஹ் (மன்னிப்பது மட்டுமல்ல; அதனை) நன்மையாகவும் மாற்றி விடுகிறான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௭௦)
Tafseer