Skip to content

ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் - Page: 6

Al-Furqan

(al-Furq̈ān)

௫௧

وَلَوْ شِئْنَا لَبَعَثْنَا فِيْ كُلِّ قَرْيَةٍ نَّذِيْرًا ۖ ٥١

walaw shi'nā
وَلَوْ شِئْنَا
நாம் நாடியிருந்தால்
labaʿathnā
لَبَعَثْنَا
அனுப்பியிருப்போம்
fī kulli
فِى كُلِّ
ஒவ்வொரு
qaryatin
قَرْيَةٍ
ஊரிலும்
nadhīran
نَّذِيرًا
ஓர் எச்சரிப்பாளரை
நாம் நாடியிருந்தால் ஒவ்வொரு ஊருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடிய ஒவ்வொரு தூதரை (இன்றைய தினமும்) நாம் அனுப்பியே இருப்போம். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௫௧)
Tafseer
௫௨

فَلَا تُطِعِ الْكٰفِرِيْنَ وَجَاهِدْهُمْ بِهٖ جِهَادًا كَبِيْرًا ٥٢

falā tuṭiʿi
فَلَا تُطِعِ
ஆகவே கீழ்ப்படியாதீர்
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
wajāhid'hum
وَجَٰهِدْهُم
போர் செய்வீராக! அவர்களிடம்
bihi
بِهِۦ
இதன்மூலம்
jihādan
جِهَادًا
போர்
kabīran
كَبِيرًا
பெரும்
ஆகவே, (நபியே!) நீங்கள் இந்த நன்றிகெட்டவர்களுக்கு கட்டுப்படாதீர்கள். இந்தக் குர்ஆனை (ஆதாரமாக) கொண்டு நீங்கள் அவர்களிடத்தில் போராடுவீராக! ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௫௨)
Tafseer
௫௩

۞ وَهُوَ الَّذِيْ مَرَجَ الْبَحْرَيْنِ هٰذَا عَذْبٌ فُرَاتٌ وَّهٰذَا مِلْحٌ اُجَاجٌۚ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَّحِجْرًا مَّحْجُوْرًا ٥٣

wahuwa alladhī
وَهُوَ ٱلَّذِى
அவன்தான்
maraja
مَرَجَ
இணைத்தான்
l-baḥrayni
ٱلْبَحْرَيْنِ
இரு கடல்களை
hādhā
هَٰذَا
இது
ʿadhbun
عَذْبٌ
மிக்க மதுரமானது
furātun
فُرَاتٌ
இனிப்பு நீராகும்
wahādhā
وَهَٰذَا
இதுவோ
mil'ḥun
مِلْحٌ
உப்பு நீராகும்
ujājun
أُجَاجٌ
மிக்க உவர்ப்பானது
wajaʿala
وَجَعَلَ
இன்னும் அவன் ஆக்கினான்
baynahumā
بَيْنَهُمَا
அவ்விரண்டுக்கும் இடையில்
barzakhan
بَرْزَخًا
ஒரு திரையையும்
waḥij'ran
وَحِجْرًا
தடுப்பையும்
maḥjūran
مَّحْجُورًا
முற்றிலும் தடுக்கக்கூடியது
அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்திருக்கின்றான். ஒன்று, மிக்க இன்பமும் மதுரமுமான தண்ணீர். மற்றொன்று, உப்பும் கசப்புமான தண்ணீர். (இவை ஒன்றோடொன்று கலந்து விடாதிருக்கும் பொருட்டு) இவ்விரண்டுக்கும் இடையில் திரையையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தி இருக்கின்றான். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௫௩)
Tafseer
௫௪

وَهُوَ الَّذِيْ خَلَقَ مِنَ الْمَاۤءِ بَشَرًا فَجَعَلَهٗ نَسَبًا وَّصِهْرًاۗ وَكَانَ رَبُّكَ قَدِيْرًا ٥٤

wahuwa alladhī
وَهُوَ ٱلَّذِى
அவன்தான்
khalaqa
خَلَقَ
படைத்தான்
mina l-māi
مِنَ ٱلْمَآءِ
நீரிலிருந்து
basharan
بَشَرًا
மனிதனை
fajaʿalahu
فَجَعَلَهُۥ
இன்னும் அவனை ஆக்கினான்
nasaban
نَسَبًا
இரத்த பந்தமுடையவனாக
waṣih'ran
وَصِهْرًاۗ
இன்னும் திருமண பந்தமுடையவனாக
wakāna
وَكَانَ
இருக்கிறான்
rabbuka
رَبُّكَ
உமது இறைவன்
qadīran
قَدِيرًا
பேராற்றலுடையவனாக
அவன்தான் (ஒரு துளி) தண்ணீரிலிருந்து மனிதனை உற்பத்தி செய்கின்றான். பின்னர், அவனுக்குச் சந்ததிகளையும் சம்பந்திகளையும் ஆக்குகின்றான். (நபியே!) உங்கள் இறைவன் (தான் விரும்பியவாறெல்லாம் செய்ய) ஆற்றலுடையவனாகவே இருக்கின்றான். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௫௪)
Tafseer
௫௫

وَيَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُهُمْ وَلَا يَضُرُّهُمْۗ وَكَانَ الْكَافِرُ عَلٰى رَبِّهٖ ظَهِيْرًا ٥٥

wayaʿbudūna
وَيَعْبُدُونَ
அவர்கள் வணங்குகின்றனர்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
mā lā yanfaʿuhum
مَا لَا يَنفَعُهُمْ
அவர்களுக்கு நற்பலனளிக்காதவற்றை
walā
وَلَا
இன்னும் தீங்கிழைக்காதவற்றை
yaḍurruhum
يَضُرُّهُمْۗ
இன்னும் தீங்கிழைக்காதவற்றை அவர்களுக்கு
wakāna
وَكَانَ
இருக்கிறான்
l-kāfiru
ٱلْكَافِرُ
நிராகரிப்பாளன்
ʿalā
عَلَىٰ
எதிராக
rabbihi
رَبِّهِۦ
தன் இறைவனுக்கு
ẓahīran
ظَهِيرًا
உதவக்கூடியவனாக
இவ்வாறிருந்தும் அவர்களோ தங்களுக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாத வைகளை வணங்குகின்றனர். இந்நிராகரிப்பவர்கள் தங்கள் இறைவனுக்கே விரோதமாக இருக்கின்றனர். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௫௫)
Tafseer
௫௬

وَمَآ اَرْسَلْنٰكَ اِلَّا مُبَشِّرًا وَّنَذِيْرًا ٥٦

wamā arsalnāka
وَمَآ أَرْسَلْنَٰكَ
உம்மை நாம் அனுப்பவில்லை
illā
إِلَّا
தவிர
mubashiran
مُبَشِّرًا
நற்செய்தி கூறுபவராக
wanadhīran
وَنَذِيرًا
இன்னும் எச்சரிப்பவராகவே
(நபியே!) நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அன்றி உங்களை நாம் அனுப்பவில்லை. ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௫௬)
Tafseer
௫௭

قُلْ مَآ اَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ اِلَّا مَنْ شَاۤءَ اَنْ يَّتَّخِذَ اِلٰى رَبِّهٖ سَبِيْلًا ٥٧

qul
قُلْ
கூறுவீராக!
mā asalukum
مَآ أَسْـَٔلُكُمْ
நான் உங்களிடம் கேட்கவில்லை
ʿalayhi
عَلَيْهِ
இதற்காக
min ajrin
مِنْ أَجْرٍ
எவ்வித கூலியையும்
illā
إِلَّا
எனினும்
man
مَن
யார்
shāa
شَآءَ
நாடினானோ
an yattakhidha
أَن يَتَّخِذَ
எடுத்துக்கொள்ள
ilā rabbihi
إِلَىٰ رَبِّهِۦ
தன் இறைவனுடைய
sabīlan
سَبِيلًا
வழியில்
(அவர்களை நோக்கி) "இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. ஆயினும், எவன் தன் இறைவனின் வழியில் செல்ல விரும்புகின்றானோ அவன் செல்வதை (நீங்கள் தடை செய்யாமல் இருப்பதை)யே (நான் உங்களிடம்) விரும்புகின்றேன்" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௫௭)
Tafseer
௫௮

وَتَوَكَّلْ عَلَى الْحَيِّ الَّذِيْ لَا يَمُوْتُ وَسَبِّحْ بِحَمْدِهٖۗ وَكَفٰى بِهٖ بِذُنُوْبِ عِبَادِهٖ خَبِيْرًا ۚ ٥٨

watawakkal
وَتَوَكَّلْ
நம்பிக்கை வைப்பீராக
ʿalā
عَلَى
மீது
l-ḥayi
ٱلْحَىِّ
உயிருள்ளவன்
alladhī
ٱلَّذِى
எவன்
lā yamūtu
لَا يَمُوتُ
மரணிக்கமாட்டான்
wasabbiḥ
وَسَبِّحْ
இன்னும் துதிப்பீராக!
biḥamdihi
بِحَمْدِهِۦۚ
அவனைப் புகழ்ந்து
wakafā
وَكَفَىٰ
போதுமானவன்
bihi
بِهِۦ
அவனே
bidhunūbi
بِذُنُوبِ
பாவங்களை
ʿibādihi
عِبَادِهِۦ
தன் அடியார்களின்
khabīran
خَبِيرًا
ஆழ்ந்தறிபவனாக
(அன்றி) மரணமற்ற என்றும் நிரந்தரமான அல்லாஹ்வையே நீங்கள் நம்புங்கள். அவனுடைய புகழைக் கூறி அவனைத் துதி செய்து கொண்டிருங்கள். அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்திருப்பதே போதுமானது. (அதற்குரிய தண்டனையை அவன் கொடுப்பான்.) ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௫௮)
Tafseer
௫௯

اَلَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا فِيْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِۚ اَلرَّحْمٰنُ فَسْـَٔلْ بِهٖ خَبِيْرًا ٥٩

alladhī
ٱلَّذِى
அவன்தான்
khalaqa
خَلَقَ
படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
wal-arḍa
وَٱلْأَرْضَ
பூமியையும்
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَا
அவற்றுக்கு இடையில் உள்ளவற்றையும்
fī sittati ayyāmin
فِى سِتَّةِ أَيَّامٍ
ஆறு நாட்களில்
thumma
ثُمَّ
பிறகு
is'tawā
ٱسْتَوَىٰ
உயர்ந்து விட்டான்
ʿalā
عَلَى
மீது
l-ʿarshi
ٱلْعَرْشِۚ
அர்ஷின்
l-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
அவன் பேரருளாளன்
fasal
فَسْـَٔلْ
கேட்பீராக!
bihi
بِهِۦ
அவனை
khabīran
خَبِيرًا
அறிந்தவனிடம்
அவன் எத்தகையவனென்றால் வானங்களையும், பூமியையும், இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளையும் ஆறு நாள்களில் படைத்தான். பின்னர், அவன் "அர்ஷின்" மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்து விட்டான். அவன்தான் ரஹ்மான். (ரஹ்மான் எனப்படுபவனும் அல்லாஹ் எனப்படுபவனும் ஒருவனே.) இதைப் பற்றித் தெரிந்தவர்களைக் கேட்டறிந்து கொள்ளுங்கள். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௫௯)
Tafseer
௬௦

وَاِذَا قِيْلَ لَهُمُ اسْجُدُوْا لِلرَّحْمٰنِ قَالُوْا وَمَا الرَّحْمٰنُ اَنَسْجُدُ لِمَا تَأْمُرُنَا وَزَادَهُمْ نُفُوْرًا ۩ ࣖ ٦٠

wa-idhā qīla
وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
lahumu
لَهُمُ
அவர்களுக்கு
us'judū
ٱسْجُدُوا۟
சிரம் பணியுங்கள்
lilrraḥmāni
لِلرَّحْمَٰنِ
ரஹ்மானுக்கு
qālū
قَالُوا۟
கூறுகின்றனர்
wamā
وَمَا
யார்?
l-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
anasjudu
أَنَسْجُدُ
நாங்கள் சிரம் பணிய வேண்டுமா?
limā tamurunā
لِمَا تَأْمُرُنَا
நீர்ஏவக்கூடியவனுக்கு
wazādahum
وَزَادَهُمْ
அதிகப்படுத்தியது அவர்களுக்கு
nufūran
نُفُورًا۩
வெறுப்பை
(ஆகவே,) அந்த ரஹ்மானைச் சிரம் பணிந்து வணங்குங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால், அவர்களுக்கு வெறுப்பு அதிகரித்து "ரஹ்மான் யார்? நீங்கள் கூறியவைகளுக்கெல்லாம் நாம் சிரம் பணிந்து வணங்குவதா?" என்று கேட்கின்றனர். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௬௦)
Tafseer