Skip to content

ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் - Page: 5

Al-Furqan

(al-Furq̈ān)

௪௧

وَاِذَا رَاَوْكَ اِنْ يَّتَّخِذُوْنَكَ اِلَّا هُزُوًاۗ اَهٰذَا الَّذِيْ بَعَثَ اللّٰهُ رَسُوْلًا ٤١

wa-idhā ra-awka
وَإِذَا رَأَوْكَ
அவர்கள் உம்மைப் பார்த்தால்
in yattakhidhūnaka
إِن يَتَّخِذُونَكَ
உம்மை எடுத்துக் கொள்ளமாட்டார்கள்
illā
إِلَّا
தவிர
huzuwan
هُزُوًا
கேலியாகவே
ahādhā
أَهَٰذَا
இவரையா?
alladhī
ٱلَّذِى
எவர்
baʿatha
بَعَثَ
அனுப்பினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
rasūlan
رَسُولًا
தூதராக
(நபியே!) இவர்கள் உங்களைக் கண்டால் உங்களைப் பற்றி "இவரையா அல்லாஹ் (தன்னுடைய) தூதராக அனுப்பி வைத்தான்?" என்று பரிகாசமாகக் கூறுகின்றனர். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௪௧)
Tafseer
௪௨

اِنْ كَادَ لَيُضِلُّنَا عَنْ اٰلِهَتِنَا لَوْلَآ اَنْ صَبَرْنَا عَلَيْهَاۗ وَسَوْفَ يَعْلَمُوْنَ حِيْنَ يَرَوْنَ الْعَذَابَ مَنْ اَضَلُّ سَبِيْلًا ٤٢

in kāda layuḍillunā
إِن كَادَ لَيُضِلُّنَا
இவர் நம்மை நிச்சயமாக வழி கெடுத்திருப்பார்
ʿan ālihatinā
عَنْ ءَالِهَتِنَا
நமது தெய்வங்களை விட்டு
lawlā an ṣabarnā
لَوْلَآ أَن صَبَرْنَا
நாம் உறுதியாக இருந்திருக்க வில்லையென்றால்
ʿalayhā
عَلَيْهَاۚ
அவற்றின் மீது
wasawfa yaʿlamūna
وَسَوْفَ يَعْلَمُونَ
அவர்கள் அறிந்து கொள்வார்கள்
ḥīna
حِينَ
போது
yarawna
يَرَوْنَ
அவர்கள் பார்க்கும்
l-ʿadhāba
ٱلْعَذَابَ
தண்டனையை
man
مَنْ
யார்
aḍallu
أَضَلُّ
மிக வழிகெட்டவர்
sabīlan
سَبِيلًا
பாதையால்
(அன்றி) "நாம் உறுதியாக இல்லையென்றால், நம்முடைய தெய்வங்களை விட்டும் நம்மை இவர் வழிகெடுத்தே இருப்பார்" (என்றும் கூறுகின்றனர். மறுமையில்) அவர்கள் வேதனையைத் தங்கள் கண்ணால் காணும் நேரத்தில் வழி கெட்டவர்கள் யார் என்பதை நன்கறிந்து கொள்வார்கள். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௪௨)
Tafseer
௪௩

اَرَءَيْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰىهُۗ اَفَاَنْتَ تَكُوْنُ عَلَيْهِ وَكِيْلًا ۙ ٤٣

ara-ayta
أَرَءَيْتَ
நீர் பார்த்தீரா?
mani ittakhadha
مَنِ ٱتَّخَذَ
எடுத்துக் கொண்டவனை
ilāhahu
إِلَٰهَهُۥ
தனது கடவுளாக
hawāhu
هَوَىٰهُ
தனது மன இச்சையை
afa-anta
أَفَأَنتَ
நீர்?
takūnu
تَكُونُ
ஆகுவீரா
ʿalayhi
عَلَيْهِ
அவனுக்கு
wakīlan
وَكِيلًا
பொறுப்பாளராக
(நபியே!) எவன் தன் சரீர இச்சையை(த் தான் பின்பற்றும்) தன்னுடைய தெய்வமாக எடுத்துக்கொண்டானோ அவனை நீங்கள் பார்த்தீர்களா? (அவன் வழி தவறாது) நீங்கள் அவனுக்குப் பாதுகாப்பாளராக இருப்பீர்களா? ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௪௩)
Tafseer
௪௪

اَمْ تَحْسَبُ اَنَّ اَكْثَرَهُمْ يَسْمَعُوْنَ اَوْ يَعْقِلُوْنَۗ اِنْ هُمْ اِلَّا كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ سَبِيْلًا ࣖ ٤٤

am
أَمْ
அல்லது
taḥsabu
تَحْسَبُ
நீர் எண்ணுகிறீரா?
anna
أَنَّ
என்று
aktharahum
أَكْثَرَهُمْ
அதிகமானவர்கள் அவர்களில்
yasmaʿūna
يَسْمَعُونَ
செவிமடுப்பார்கள்
aw
أَوْ
அல்லது
yaʿqilūna
يَعْقِلُونَۚ
சிந்தித்து புரிவார்கள்
in hum
إِنْ هُمْ
அவர்கள் இல்லை
illā
إِلَّا
தவிர
kal-anʿāmi
كَٱلْأَنْعَٰمِۖ
கால்நடைகளைப் போன்றே
bal
بَلْ
மாறாக
hum
هُمْ
அவர்கள்
aḍallu
أَضَلُّ
வழிகெட்டவர்கள்
sabīlan
سَبِيلًا
பாதையால்
அவர்களில் பெரும்பாலானவர்கள் (உங்களுடைய வார்த்தைகளைக் காதால்) கேட்கிறார்கள் என்றோ அல்லது அதனை(த் தங்கள் மனதால்) உணர்ந்து பார்க்கின்றார்களென்றோ நீங்கள் எண்ணிக் கொண்டீர்களா? அன்று! அவர்கள் மிருகங்களைப் போன்றவர்களே அன்றி வேறில்லை. பின்னும், (மிருகங்களை விட) மிகவும் வழிகெட்டவர்களாகவும் இருக்கின்றனர். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௪௪)
Tafseer
௪௫

اَلَمْ تَرَ اِلٰى رَبِّكَ كَيْفَ مَدَّ الظِّلَّۚ وَلَوْ شَاۤءَ لَجَعَلَهٗ سَاكِنًاۚ ثُمَّ جَعَلْنَا الشَّمْسَ عَلَيْهِ دَلِيْلًا ۙ ٤٥

alam tara
أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
ilā
إِلَىٰ
பக்கம்
rabbika
رَبِّكَ
உமது இறைவன்
kayfa
كَيْفَ
எப்படி
madda
مَدَّ
நீட்டுகிறான்
l-ẓila
ٱلظِّلَّ
நிழலை
walaw shāa
وَلَوْ شَآءَ
அவன் நாடியிருந்தால்
lajaʿalahu
لَجَعَلَهُۥ
அதை ஆக்கியிருப்பான்
sākinan
سَاكِنًا
நிரந்தரமாக
thumma
ثُمَّ
பிறகு
jaʿalnā
جَعَلْنَا
நாம் ஆக்கினோம்
l-shamsa
ٱلشَّمْسَ
சூரியனை
ʿalayhi
عَلَيْهِ
அதன் மீது
dalīlan
دَلِيلًا
ஆதாரமாக
(நபியே!) உங்கள் இறைவன் நிழலை எவ்வாறு (குறைத்து, பின்பு அதை) நீட்டுகின்றான் என்பதை நீங்கள் கவனிக்க வில்லையா? அவன் நாடியிருந்தால், அதனை ஒரே நிலையில் வைத்திருக்க முடியும். சூரியனை நிழலுக்கு வழிகாட்டியாக நாம்தான் ஆக்கினோம். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௪௫)
Tafseer
௪௬

ثُمَّ قَبَضْنٰهُ اِلَيْنَا قَبْضًا يَّسِيْرًا ٤٦

thumma
ثُمَّ
பிறகு
qabaḍnāhu
قَبَضْنَٰهُ
அதை கைப்பற்றி விடுகிறோம்
ilaynā
إِلَيْنَا
நம் பக்கம்
qabḍan
قَبْضًا
கைப்பற்றுதல்
yasīran
يَسِيرًا
மறைவாக
பின்னர் நாம்தான் அதனை சிறுகச் சிறுகக் குறைத்து விடுகின்றோம். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௪௬)
Tafseer
௪௭

وَهُوَ الَّذِيْ جَعَلَ لَكُمُ الَّيْلَ لِبَاسًا وَّالنَّوْمَ سُبَاتًا وَّجَعَلَ النَّهَارَ نُشُوْرًا ٤٧

wahuwa alladhī
وَهُوَ ٱلَّذِى
அவன்தான்
jaʿala
جَعَلَ
ஆக்கினான்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
al-layla
ٱلَّيْلَ
இரவை
libāsan
لِبَاسًا
ஓர் ஆடையாகவும்
wal-nawma
وَٱلنَّوْمَ
இன்னும் தூக்கத்தை
subātan
سُبَاتًا
ஓய்வாகவும்
wajaʿala
وَجَعَلَ
இன்னும் ஆக்கினான்
l-nahāra
ٱلنَّهَارَ
பகலை
nushūran
نُشُورًا
விழிப்பதற்கும்
அவன்தான் உங்களுக்கு இரவைப் போர்வையாகவும், ஓய்வளிக்கக் கூடியதாகவும், பகலை (உங்கள்) நடமாட்டத்திற்காக (பிரகாசமாக)வும் ஆக்கினான். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௪௭)
Tafseer
௪௮

وَهُوَ الَّذِيْٓ اَرْسَلَ الرِّيٰحَ بُشْرًاۢ بَيْنَ يَدَيْ رَحْمَتِهٖۚ وَاَنْزَلْنَا مِنَ السَّمَاۤءِ مَاۤءً طَهُوْرًا ۙ ٤٨

wahuwa alladhī
وَهُوَ ٱلَّذِىٓ
அவன்தான்
arsala
أَرْسَلَ
அனுப்புகிறான்
l-riyāḥa
ٱلرِّيَٰحَ
காற்றுகளை
bush'ran
بُشْرًۢا
நற்செய்தி கூறக்கூடியதாக
bayna yaday
بَيْنَ يَدَىْ
முன்பாக
raḥmatihi
رَحْمَتِهِۦۚ
தன் அருளுக்கு
wa-anzalnā
وَأَنزَلْنَا
இன்னும் நாம் இறக்குகிறோம்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
māan
مَآءً
மழை நீரை
ṭahūran
طَهُورًا
பரிசுத்தமான
அவன்தான் மழைக்கு முன்னதாக (குளிர்ந்த) காற்றை நற்செய்தியாக அனுப்பி வைக்கின்றான். (மனிதர்களே!) நாம்தான் மேகத்திலிருந்து பரிசுத்தமான நீரை பொழியச் செய்கின்றோம். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௪௮)
Tafseer
௪௯

لِّنُحْيِ َۧ بِهٖ بَلْدَةً مَّيْتًا وَّنُسْقِيَهٗ مِمَّا خَلَقْنَآ اَنْعَامًا وَّاَنَاسِيَّ كَثِيْرًا ٤٩

linuḥ'yiya
لِّنُحْۦِىَ
நாம் உயிர்ப்பிப்பதற்காகவும்
bihi
بِهِۦ
அதன்மூலம்
baldatan
بَلْدَةً
பூமியை
maytan
مَّيْتًا
இறந்த
wanus'qiyahu
وَنُسْقِيَهُۥ
இன்னும் நாம் அதை புகட்டுவதற்காகவும்
mimmā khalaqnā
مِمَّا خَلَقْنَآ
நாம் படைத்தவற்றில்
anʿāman
أَنْعَٰمًا
பல கால்நடைகளுக்கும்
wa-anāsiyya
وَأَنَاسِىَّ
இன்னும் மனிதர்களுக்கும்
kathīran
كَثِيرًا
அதிகமான
அதனைக்கொண்டு இறந்த பூமிக்கு நாம் உயிர் கொடுத்து நம்முடைய படைப்புகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற உயிரினங்களுக்கும் பல மனிதர்களுக்கும் அதனைப் புகட்டுகின்றோம். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௪௯)
Tafseer
௫௦

وَلَقَدْ صَرَّفْنٰهُ بَيْنَهُمْ لِيَذَّكَّرُوْاۖ فَاَبٰىٓ اَكْثَرُ النَّاسِ اِلَّا كُفُوْرًا ٥٠

walaqad ṣarrafnāhu
وَلَقَدْ صَرَّفْنَٰهُ
அதை நாம் பிரித்துக் கொடுத்தோம்
baynahum
بَيْنَهُمْ
அவர்களுக்கு மத்தியில்
liyadhakkarū
لِيَذَّكَّرُوا۟
அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக
fa-abā
فَأَبَىٰٓ
மறுத்து விட்டனர்
aktharu
أَكْثَرُ
மிகஅதிகமானவர்கள்
l-nāsi
ٱلنَّاسِ
மனிதர்களில்
illā
إِلَّا
தவிர
kufūran
كُفُورًا
நிராகரிப்பதை
அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இவ்விஷயத்தைப் பலவாறாக அவர்களுக்கு எடுத்துரைத்தோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் மிக்க நன்றி கெட்டவர்களாகவே இருக்கின்றனர். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௫௦)
Tafseer