Skip to content

ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் - Page: 4

Al-Furqan

(al-Furq̈ān)

௩௧

وَكَذٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِّنَ الْمُجْرِمِيْنَۗ وَكَفٰى بِرَبِّكَ هَادِيًا وَّنَصِيْرًا ٣١

wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறுதான்
jaʿalnā
جَعَلْنَا
நாம் ஆக்கினோம்
likulli
لِكُلِّ
ஒவ்வொரு
nabiyyin
نَبِىٍّ
நபிக்கும்
ʿaduwwan
عَدُوًّا
எதிரிகளை
mina l-muj'rimīna
مِّنَ ٱلْمُجْرِمِينَۗ
குற்றவாளிகளில்
wakafā
وَكَفَىٰ
போதுமானவன்
birabbika
بِرَبِّكَ
உமது இறைவன்
hādiyan
هَادِيًا
நேர்வழி காட்டுபவனாக
wanaṣīran
وَنَصِيرًا
இன்னும் உதவுபவனாக
இவ்வாறே ஒவ்வொரு நபிமாருக்கும் குற்றவாளிகளை நாம் எதிரிகளாக ஏற்படுத்தி இருந்தோம். (நபியே!) உங்களுக்கு நேரான வழியை அறிவித்து, உதவி செய்ய உங்கள் இறைவனே போதுமானவன். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௩௧)
Tafseer
௩௨

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَوْلَا نُزِّلَ عَلَيْهِ الْقُرْاٰنُ جُمْلَةً وَّاحِدَةً ۛ كَذٰلِكَ ۛ لِنُثَبِّتَ بِهٖ فُؤَادَكَ وَرَتَّلْنٰهُ تَرْتِيْلًا ٣٢

waqāla
وَقَالَ
கூறினர்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்கள்
lawlā nuzzila
لَوْلَا نُزِّلَ
இறக்கப்பட வேண்டாமா!
ʿalayhi
عَلَيْهِ
இவர் மீது
l-qur'ānu
ٱلْقُرْءَانُ
இந்த குர்ஆன்
jum'latan
جُمْلَةً
ஒட்டு மொத்தமாக
wāḥidatan
وَٰحِدَةًۚ
ஒரே தடவையில்
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
linuthabbita
لِنُثَبِّتَ
உறுதிப்படுத்துவதற்காக
bihi
بِهِۦ
அதன் மூலம்
fuādaka
فُؤَادَكَۖ
உமது உள்ளத்தை
warattalnāhu
وَرَتَّلْنَٰهُ
இன்னும் இதை கற்பித்தோம்.
tartīlan
تَرْتِيلًا
சிறிது சிறிதாக
(நபியே!) எவர்கள் (உங்களை) நிராகரிக்கிறார்களோ அவர்கள் "இந்த வேதம் முழுவதும் ஒரே தடவையில் இறக்கப்பட வேண்டாமா?" என்று கூறுகின்றனர். (இதனை) இவ்வாறு நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி (வரிசை முறைப்படி) ஒழுங்கு படுத்துவதெல்லாம் உங்கள் உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே! ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௩௨)
Tafseer
௩௩

وَلَا يَأْتُوْنَكَ بِمَثَلٍ اِلَّا جِئْنٰكَ بِالْحَقِّ وَاَحْسَنَ تَفْسِيْرًا ۗ ٣٣

walā yatūnaka
وَلَا يَأْتُونَكَ
அவர்கள் உம்மிடம் கூறமாட்டார்கள்
bimathalin
بِمَثَلٍ
எந்த ஒரு தன்மையையும்
illā
إِلَّا
தவிர
ji'nāka
جِئْنَٰكَ
உமக்கு நாம் கூறியே
bil-ḥaqi
بِٱلْحَقِّ
சத்தியத்தையும்
wa-aḥsana
وَأَحْسَنَ
இன்னும் மிக அழகான
tafsīran
تَفْسِيرًا
விளக்கத்தை(யும்)
இந்நிராகரிப்பவர்கள் (எத்தகைய கேள்விகளைக் கேட்டு அதற்காக ஆச்சரியமான) எந்த உதாரணத்தை உங்களிடம் அவர்கள் கொண்டு வந்த போதிலும் (அதைவிட) உண்மையான விஷயத்தையும், அழகான வியாக்கியானத்தையும் (விவரத்தையும்) நாம் உங்களுக்கு கூறாமல் இருக்கவில்லை. ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௩௩)
Tafseer
௩௪

اَلَّذِيْنَ يُحْشَرُوْنَ عَلٰى وُجُوْهِهِمْ اِلٰى جَهَنَّمَۙ اُولٰۤىِٕكَ شَرٌّ مَّكَانًا وَّاَضَلُّ سَبِيْلًا ࣖ ٣٤

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yuḥ'sharūna
يُحْشَرُونَ
எழுப்பப்படுகிறார்களோ
ʿalā
عَلَىٰ
மீது
wujūhihim
وُجُوهِهِمْ
தங்கள் முகங்களின்
ilā
إِلَىٰ
பக்கம்
jahannama
جَهَنَّمَ
நரகத்தின்
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
sharrun
شَرٌّ
மிக கெட்டவர்கள்
makānan
مَّكَانًا
தங்குமிடத்தால்
wa-aḍallu
وَأَضَلُّ
இன்னும் மிக வழிதவறியவர்கள்
sabīlan
سَبِيلًا
பாதையால்
இவர்கள்தாம் நரகத்திற்கு முகங்குப்புற இழுத்துச் செல்லப்படுபவர்கள். இவர்கள் தாம் மகாகெட்ட இடத்தில் தங்குபவர்களும் வழி தவறியவர்களும் ஆவார்கள். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௩௪)
Tafseer
௩௫

وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَجَعَلْنَا مَعَهٗٓ اَخَاهُ هٰرُوْنَ وَزِيْرًا ۚ ٣٥

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ātaynā
ءَاتَيْنَا
கொடுத்தோம்
mūsā l-kitāba
مُوسَى ٱلْكِتَٰبَ
மூஸாவுக்கு/வேதத்தை
wajaʿalnā
وَجَعَلْنَا
இன்னும் ஆக்கினோம்
maʿahu
مَعَهُۥٓ
அவருடன்
akhāhu
أَخَاهُ
அவரது சகோதரர்
hārūna
هَٰرُونَ
ஹாரூனை
wazīran
وَزِيرًا
உதவியாளராக
(இதற்கு முன்னர்) நிச்சயமாக நாம் மூஸாவுக்கு(த் "தவ்றாத்" என்னும்) ஒரு வேதத்தைக் கொடுத்திருந்தோம். அவருடைய சகோதரர் ஹாரூனை அவருக்கு மந்திரியாகவும் ஆக்கினோம். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௩௫)
Tafseer
௩௬

فَقُلْنَا اذْهَبَآ اِلَى الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَاۗ فَدَمَّرْنٰهُمْ تَدْمِيْرًا ۗ ٣٦

faqul'nā
فَقُلْنَا
நாம் கூறினோம்
idh'habā
ٱذْهَبَآ
நீங்கள் இருவரும் செல்லுங்கள்
ilā l-qawmi
إِلَى ٱلْقَوْمِ
மக்களிடம்
alladhīna kadhabū
ٱلَّذِينَ كَذَّبُوا۟
பொய்ப்பித்தவர்கள்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நமது அத்தாட்சிகளை
fadammarnāhum
فَدَمَّرْنَٰهُمْ
ஆகவே நாம் அவர்களை அழித்து விட்டோம்
tadmīran
تَدْمِيرًا
முற்றிலும் தரை மட்டமாக
அவ்விருவரையும் நோக்கி, "எவர்கள் நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்யாக்கினார்களோ அவர்களிடம் நீங்கள் இருவரும் செல்லுங்கள்" எனக் கூறினோம். (அவ்வாறு அவர்கள் சென்று அவர்களுக்குக் கூறியதை அந்த மக்கள் நிராகரித்து விட்டதனால்) நாம் அவர்களை அடியோடு அழித்துவிட்டோம். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௩௬)
Tafseer
௩௭

وَقَوْمَ نُوْحٍ لَّمَّا كَذَّبُوا الرُّسُلَ اَغْرَقْنٰهُمْ وَجَعَلْنٰهُمْ لِلنَّاسِ اٰيَةًۗ وَاَعْتَدْنَا لِلظّٰلِمِيْنَ عَذَابًا اَلِيْمًا ۚ ٣٧

waqawma
وَقَوْمَ
இன்னும் மக்களையும்
nūḥin
نُوحٍ
நூஹூடைய
lammā
لَّمَّا
போது
kadhabū
كَذَّبُوا۟
அவர்கள் பொய்ப்பித்தனர்
l-rusula
ٱلرُّسُلَ
தூதர்களை
aghraqnāhum
أَغْرَقْنَٰهُمْ
அவர்களை மூழ்கடித்தோம்
wajaʿalnāhum
وَجَعَلْنَٰهُمْ
அவர்களை ஆக்கினோம்
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்கு
āyatan
ءَايَةًۖ
ஓர் அத்தாட்சியாக
wa-aʿtadnā
وَأَعْتَدْنَا
இன்னும் நாம் தயார் படுத்தியுள்ளோம்
lilẓẓālimīna
لِلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களுக்கு
ʿadhāban
عَذَابًا
தண்டனையை
alīman
أَلِيمًا
வலி தரும்
நூஹ்வுடைய மக்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய சமயத்தில் அவர்களையும் மூழ்கடித்து, அவர்களை மனிதர்கள் அனைவருக்கும் ஓர் அத்தாட்சியாக ஆக்கினோம். இத்தகைய அநியாயக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௩௭)
Tafseer
௩௮

وَعَادًا وَّثَمُوْدَا۟ وَاَصْحٰبَ الرَّسِّ وَقُرُوْنًاۢ بَيْنَ ذٰلِكَ كَثِيْرًا ٣٨

waʿādan
وَعَادًا
ஆது
wathamūdā
وَثَمُودَا۟
ஸமூது
wa-aṣḥāba l-rasi
وَأَصْحَٰبَ ٱلرَّسِّ
கிணறு வாசிகள்
waqurūnan
وَقُرُونًۢا
இன்னும் பல தலைமுறையினரை
bayna dhālika
بَيْنَ ذَٰلِكَ
இவர்களுக்கிடையில்
kathīran
كَثِيرًا
பல
ஆது, ஸமூது மக்களையும், றஸ் (அகழ்) வாசிகளையும், இவர்களுக்கிடையில் இன்னும் பல வகுப்பினரையும் (நாம் அழித்திருக்கிறோம்.) ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௩௮)
Tafseer
௩௯

وَكُلًّا ضَرَبْنَا لَهُ الْاَمْثَالَۖ وَكُلًّا تَبَّرْنَا تَتْبِيْرًا ٣٩

wakullan
وَكُلًّا
எல்லோருக்கும்
ḍarabnā
ضَرَبْنَا
நாம் விவரித்தோம்
lahu l-amthāla
لَهُ ٱلْأَمْثَٰلَۖ
அவர்களுக்கு/பல உதாரணங்களை
wakullan
وَكُلًّا
எல்லோரையும்
tabbarnā
تَبَّرْنَا
நாம் அழித்துவிட்டோம்
tatbīran
تَتْبِيرًا
அடியோடு
(அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு அழிந்துபோன முன்னிருந்தவர்களின் சரித்திரங்களை) அவர்கள் அனைவருக்கும் நாம் பல உதாரணங்களாகக் கூறினோம். (அவர்கள் அவைகளை நிராகரித்து விடவே,) அவர்கள் அனைவரையும் நாம் அடியோடு அழித்துவிட்டோம். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௩௯)
Tafseer
௪௦

وَلَقَدْ اَتَوْا عَلَى الْقَرْيَةِ الَّتِيْٓ اُمْطِرَتْ مَطَرَ السَّوْءِۗ اَفَلَمْ يَكُوْنُوْا يَرَوْنَهَاۚ بَلْ كَانُوْا لَا يَرْجُوْنَ نُشُوْرًا ٤٠

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ataw
أَتَوْا۟
அவர்கள் வந்திருக்கின்றனர்
ʿalā
عَلَى
அருகில்
l-qaryati
ٱلْقَرْيَةِ
ஊரின்
allatī um'ṭirat
ٱلَّتِىٓ أُمْطِرَتْ
பொழியப்பட்டது
maṭara
مَطَرَ
மழை
l-sawi
ٱلسَّوْءِۚ
மிக மோசமான
afalam yakūnū yarawnahā
أَفَلَمْ يَكُونُوا۟ يَرَوْنَهَاۚ
அதை அவர்கள் பார்த்திருக்கவில்லையா?
bal
بَلْ
மாறாக
kānū
كَانُوا۟
இருந்தனர்
lā yarjūna
لَا يَرْجُونَ
அவர்கள் ஆதரவு வைக்காதவர்களாக
nushūran
نُشُورًا
எழுப்பப்படுவதை
நிச்சயமாக (மக்காவிலுள்ள காஃபிர்கள்) கெட்ட (கல்) மாரி பொழிந்த ஊரின் சமீபமாக (அடிக்கடி)ச் சென்றே இருக்கின்றனர். அதனை இவர்கள் பார்க்கவில்லையா? உண்மையில் இவர்கள் (மறுமையில்) உயிர் கொடுத்து எழுப்பப்படுவதை நம்பவேயில்லை. ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௪௦)
Tafseer