Skip to content

ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் - Page: 3

Al-Furqan

(al-Furq̈ān)

௨௧

۞ وَقَالَ الَّذِيْنَ لَا يَرْجُوْنَ لِقَاۤءَنَا لَوْلَآ اُنْزِلَ عَلَيْنَا الْمَلٰۤىِٕكَةُ اَوْ نَرٰى رَبَّنَا ۗ لَقَدِ اسْتَكْبَرُوْا فِيْٓ اَنْفُسِهِمْ وَعَتَوْ عُتُوًّا كَبِيْرًا ٢١

waqāla
وَقَالَ
கூறினார்(கள்)
alladhīna lā yarjūna
ٱلَّذِينَ لَا يَرْجُونَ
ஆதரவு வைக்காதவர்கள்
liqāanā
لِقَآءَنَا
நம் சந்திப்பை
lawlā unzila
لَوْلَآ أُنزِلَ
இறக்கப்பட வேண்டாமா?
ʿalaynā
عَلَيْنَا
எங்கள் மீது
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
aw
أَوْ
அல்லது
narā
نَرَىٰ
நாங்கள் பார்க்க வேண்டாமா?
rabbanā
رَبَّنَاۗ
எங்கள் இறைவனை
laqadi
لَقَدِ
திட்டவட்டமாக
is'takbarū
ٱسْتَكْبَرُوا۟
அவர்கள் பெருமை அடித்தனர்
fī anfusihim
فِىٓ أَنفُسِهِمْ
தங்களுக்குள்
waʿataw ʿutuwwan
وَعَتَوْ عُتُوًّا
இன்னும் கடுமையாக அழிச்சாட்டியம் செய்தனர்
kabīran
كَبِيرًا
மிகப்பெரிய அளவில்
(மறுமை நாளில்) நம்மைச் சந்திப்பதை எவர்கள் நம்பவில்லையோ அவர்கள் "எங்கள் மீது (நேரடியாகவே) மலக்குகள் இறக்கப்பட வேண்டாமா? அல்லது (எங்களுடைய கண்களால்) எங்கள் இறைவனைப் பார்க்க வேண்டாமா?" என்று கூறுகின்றனர். இவர்கள் தங்களை மிக மிகப் பெரிதாக எண்ணிக்கொண்டு அளவு கடந்து (பெரும் பாவத்தில் சென்று) விட்டனர். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௨௧)
Tafseer
௨௨

يَوْمَ يَرَوْنَ الْمَلٰۤىِٕكَةَ لَا بُشْرٰى يَوْمَىِٕذٍ لِّلْمُجْرِمِيْنَ وَيَقُوْلُوْنَ حِجْرًا مَّحْجُوْرًا ٢٢

yawma
يَوْمَ
நாளில்
yarawna
يَرَوْنَ
அவர்கள் பார்ப்பார்கள்
l-malāikata
ٱلْمَلَٰٓئِكَةَ
வானவர்களை
لَا
அறவே இல்லை
bush'rā
بُشْرَىٰ
நற்செய்தி
yawma-idhin
يَوْمَئِذٍ
இந்நாளில்
lil'muj'rimīna
لِّلْمُجْرِمِينَ
குற்றவாளிகளுக்கு
wayaqūlūna
وَيَقُولُونَ
இன்னும் கூறுவார்கள்
ḥij'ran
حِجْرًا
உங்களுக்கு தடுக்கப்பட்டு விட்டது
maḥjūran
مَّحْجُورًا
முற்றிலும்
(அவர்கள் விரும்பியவாறு) மலக்குகளை அவர்கள் காணும் நாளில், இக்குற்றவாளிகளை நோக்கி "இன்றைய தினம் (உங்களுக்கு அழிவைத் தவிர) யாதொரு நல்ல செய்தியும் இல்லை" என்று (அம்மலக்குகள்) கூறுவார்கள். (அக்குற்றவாளிகளோ தங்களை அழிக்க வரும் அம்மலக்குகளைத்) "தடுத்துக் கொள்ளுங்கள்; தடுத்துக் கொள்ளுங்கள்" என்று சப்தமிடுவார்கள். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௨௨)
Tafseer
௨௩

وَقَدِمْنَآ اِلٰى مَا عَمِلُوْا مِنْ عَمَلٍ فَجَعَلْنٰهُ هَبَاۤءً مَّنْثُوْرًا ٢٣

waqadim'nā
وَقَدِمْنَآ
நாம் நாடுவோம்
ilā mā ʿamilū
إِلَىٰ مَا عَمِلُوا۟
அவர்கள் செய்ததை
min ʿamalin
مِنْ عَمَلٍ
செயல்களில்
fajaʿalnāhu
فَجَعَلْنَٰهُ
பிறகு அதை ஆக்கிவிடுவோம்
habāan
هَبَآءً
புழுதியாக
manthūran
مَّنثُورًا
பரத்தப்பட்ட
(இம்மையில்) அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்களை நாம் நோக்கினால் (அதில் யாதொரு நன்மையும் இல்லாததனால்) பறக்கும் தூசிகளைப் போல் அவைகளை நாம் ஆக்கிவிடுவோம். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௨௩)
Tafseer
௨௪

اَصْحٰبُ الْجَنَّةِ يَوْمَىِٕذٍ خَيْرٌ مُّسْتَقَرًّا وَّاَحْسَنُ مَقِيْلًا ٢٤

aṣḥābu l-janati
أَصْحَٰبُ ٱلْجَنَّةِ
சொர்க்கவாசிகள்
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
khayrun
خَيْرٌ
சிறந்தவர்கள்
mus'taqarran
مُّسْتَقَرًّا
தங்குமிடத்தால்
wa-aḥsanu
وَأَحْسَنُ
இன்னும் மிக சிறப்பானவர்கள்
maqīlan
مَقِيلًا
ஓய்வெடுக்கும் இடத்தால்
அந்நாளில் (நம்பிக்கையாளர்களான) சுவனவாசிகளோ, நல்ல தங்குமிடத்திலும் அழகான (இன்பமான) ஓய்வு பெறும் இடத்திலும் இருப்பார்கள். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௨௪)
Tafseer
௨௫

وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاۤءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلٰۤىِٕكَةُ تَنْزِيْلًا ٢٥

wayawma
وَيَوْمَ
நாளில்
tashaqqaqu
تَشَقَّقُ
பிளந்துவிடும்
l-samāu
ٱلسَّمَآءُ
வானம்
bil-ghamāmi
بِٱلْغَمَٰمِ
வெள்ளை மேகத்தைக் கொண்டு
wanuzzila
وَنُزِّلَ
இன்னும் இறக்கப்படும் (நாளில்)
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
tanzīlan
تَنزِيلًا
இறங்குதல்
வானம் மேகங்களால் பிளக்கப்பட்டு அந்நாளில் மலக்குகள் கூட்டம் கூட்டமாக இறங்குவார்கள். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௨௫)
Tafseer
௨௬

اَلْمُلْكُ يَوْمَىِٕذِ ِۨالْحَقُّ لِلرَّحْمٰنِۗ وَكَانَ يَوْمًا عَلَى الْكٰفِرِيْنَ عَسِيْرًا ٢٦

al-mul'ku
ٱلْمُلْكُ
ஆட்சி
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
l-ḥaqu
ٱلْحَقُّ
உண்மையான
lilrraḥmāni
لِلرَّحْمَٰنِۚ
ரஹ்மானிற்கே
wakāna
وَكَانَ
இருக்கும்
yawman
يَوْمًا
நாளாக
ʿalā l-kāfirīna
عَلَى ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
ʿasīran
عَسِيرًا
மிக சிரமமான
அந்நாளில் உண்மையான ஆட்சி ரஹ்மான் ஒருவனுக்கே இருக்கும். நிராகரிப்பவர்களுக்கு அது மிக்க கடினமான நாளாகவும் இருக்கும். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௨௬)
Tafseer
௨௭

وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلٰى يَدَيْهِ يَقُوْلُ يٰلَيْتَنِى اتَّخَذْتُ مَعَ الرَّسُوْلِ سَبِيْلًا ٢٧

wayawma
وَيَوْمَ
அந்நாளில்
yaʿaḍḍu
يَعَضُّ
கடிப்பான்
l-ẓālimu
ٱلظَّالِمُ
அநியாயக்காரன்
ʿalā yadayhi
عَلَىٰ يَدَيْهِ
தனது இரு கரங்களையும்
yaqūlu
يَقُولُ
கூறுவான்
yālaytanī ittakhadhtu
يَٰلَيْتَنِى ٱتَّخَذْتُ
நான் எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமே!
maʿa l-rasūli
مَعَ ٱلرَّسُولِ
தூதருடன்
sabīlan
سَبِيلًا
ஒரு வழியை
அந்நாளில் அநியாயக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக் கொண்டு "நம் தூதருடன் நானும் நேரான வழியைப் பின்பற்றிச் சென்றிருக்க வேண்டாமா?" என்று கூறுவான். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௨௭)
Tafseer
௨௮

يٰوَيْلَتٰى لَيْتَنِيْ لَمْ اَتَّخِذْ فُلَانًا خَلِيْلًا ٢٨

yāwaylatā
يَٰوَيْلَتَىٰ
என் நாசமே!
laytanī lam attakhidh
لَيْتَنِى لَمْ أَتَّخِذْ
நான் எடுத்திருக்கக் கூடாதே!
fulānan
فُلَانًا
இன்னவனை
khalīlan
خَلِيلًا
நண்பனாக
(அன்றி) "என்னுடைய துக்கமே! (பாவம் செய்யும்படித் தூண்டிய) இன்னவனை நான் என்னுடைய நண்பனாக ஆக்கிக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டாமா? ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௨௮)
Tafseer
௨௯

لَقَدْ اَضَلَّنِيْ عَنِ الذِّكْرِ بَعْدَ اِذْ جَاۤءَنِيْۗ وَكَانَ الشَّيْطٰنُ لِلْاِنْسَانِ خَذُوْلًا ٢٩

laqad
لَّقَدْ
திட்டவட்டமாக
aḍallanī
أَضَلَّنِى
என்னை வழிகெடுத்து விட்டான்
ʿani l-dhik'ri
عَنِ ٱلذِّكْرِ
அறிவுரையிலிருந்து
baʿda
بَعْدَ
பின்னர்
idh jāanī
إِذْ جَآءَنِىۗ
அது என்னிடம் வந்த
wakāna
وَكَانَ
இருக்கிறான்
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
lil'insāni
لِلْإِنسَٰنِ
மனிதனை
khadhūlan
خَذُولًا
கைவிடுபவனாக
நல்லுபதேசம் என்னிடம் வந்ததன் பின்னரும் அதிலிருந்து அவன் என்னைத் திருப்பி விட்டானே! அந்த ஷைத்தான் மனிதனுக்குப் பெரும் சதிகாரனாக இருந்தானே!" (என்றும் புலம்புவான்.) ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௨௯)
Tafseer
௩௦

وَقَالَ الرَّسُوْلُ يٰرَبِّ اِنَّ قَوْمِى اتَّخَذُوْا هٰذَا الْقُرْاٰنَ مَهْجُوْرًا ٣٠

waqāla
وَقَالَ
கூறுவார்
l-rasūlu
ٱلرَّسُولُ
தூதர்
yārabbi
يَٰرَبِّ
என் இறைவா!
inna
إِنَّ
நிச்சயமாக
qawmī
قَوْمِى
எனது மக்கள்
ittakhadhū
ٱتَّخَذُوا۟
எடுத்துக் கொண்டனர்
hādhā l-qur'āna
هَٰذَا ٱلْقُرْءَانَ
இந்த குர்ஆனை
mahjūran
مَهْجُورًا
புறக்கணிக்கப் பட்டதாக
(அச்சமயம் நம்முடைய) தூதர் "என் இறைவனே! நிச்சயமாக என்னுடைய இந்த மக்கள் இந்தக் குர்ஆனை முற்றிலும் வெறுத்து(த் தள்ளி) விட்டார்கள்" என்று கூறுவார். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௩௦)
Tafseer