Skip to content

ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் - Page: 2

Al-Furqan

(al-Furq̈ān)

௧௧

بَلْ كَذَّبُوْا بِالسَّاعَةِۙ وَاَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِيْرًا ١١

bal
بَلْ
மாறாக
kadhabū
كَذَّبُوا۟
அவர்கள் பொய்ப்பித்தனர்
bil-sāʿati
بِٱلسَّاعَةِۖ
உலக முடிவை
wa-aʿtadnā
وَأَعْتَدْنَا
இன்னும் தயார்படுத்தியுள்ளோம்
liman kadhaba
لِمَن كَذَّبَ
பொய்ப்பிப்பவருக்கு
bil-sāʿati
بِٱلسَّاعَةِ
உலக முடிவை
saʿīran
سَعِيرًا
கொழுந்து விட்டெரியும் நெருப்பை
உண்மையில் இவர்கள் விசாரணைக் காலத்தையே பொய்யாக்குகின்றனர். எவர்கள் விசாரணைக் காலத்தைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களுக்கு கடுமையாக பற்றி எரியும் நரகத்தைத்தான் நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௧௧)
Tafseer
௧௨

اِذَا رَاَتْهُمْ مِّنْ مَّكَانٍۢ بَعِيْدٍ سَمِعُوْا لَهَا تَغَيُّظًا وَّزَفِيْرًا ١٢

idhā ra-athum
إِذَا رَأَتْهُم
பார்த்தால்/அவர்களை அது
min makānin
مِّن مَّكَانٍۭ
இடத்திலிருந்து
baʿīdin
بَعِيدٍ
தூரமான
samiʿū
سَمِعُوا۟
செவிமடுப்பார்கள்
lahā
لَهَا
அதனுடைய
taghayyuẓan
تَغَيُّظًا
சப்தத்தையும்
wazafīran
وَزَفِيرًا
இரைச்சலையும்
அது இவர்களைக் கண்ட மாத்திரத்தில் சப்தமிட்டு ஆர்ப்பரிப்பதை இவர்கள் வெகு தூரத்திலிருந்தே செவி மடுத்துக் கொள்வார்கள். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௧௨)
Tafseer
௧௩

وَاِذَآ اُلْقُوْا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُّقَرَّنِيْنَ دَعَوْا هُنَالِكَ ثُبُوْرًا ۗ ١٣

wa-idhā ul'qū
وَإِذَآ أُلْقُوا۟
அவர்கள் போடப்பட்டால்
min'hā
مِنْهَا
அதில்
makānan
مَكَانًا
இடத்தில்
ḍayyiqan
ضَيِّقًا
நெருக்கமான
muqarranīna
مُّقَرَّنِينَ
கட்டப்பட்டவர்களாக
daʿaw
دَعَوْا۟
அழைப்பார்கள்
hunālika
هُنَالِكَ
அங்கு
thubūran
ثُبُورًا
கைசேதமே என்று
அவர்க(ளின் கை கால்க)ளைக் கட்டி, அதில் மிக்க நெருக்கடியான ஓரிடத்தில் எறியப்பட்டால் (கஷ்டத்தைத் தாங்க முடியாமல் மரணத்தைத் தரக்கூடிய) அழிவையே அவர்கள் கேட்பார்கள். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௧௩)
Tafseer
௧௪

لَا تَدْعُوا الْيَوْمَ ثُبُوْرًا وَّاحِدًا وَّادْعُوْا ثُبُوْرًا كَثِيْرًا ١٤

lā tadʿū
لَّا تَدْعُوا۟
அழைக்காதீர்கள்
l-yawma
ٱلْيَوْمَ
இன்று
thubūran
ثُبُورًا
கைசேதமே என்று
wāḥidan
وَٰحِدًا
ஒரு முறை
wa-id'ʿū
وَٱدْعُوا۟
அழையுங்கள்
thubūran
ثُبُورًا
கைசேதமே என்று
kathīran
كَثِيرًا
பல முறை
(ஆகவே, அந்நேரத்தில் அவர்களை நோக்கி,) "இன்றைய தினம் நீங்கள் ஓர் அழிவை மாத்திரம் அழைக்காதீர்கள். பல அழிவுகளை அழைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறப்படும். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௧௪)
Tafseer
௧௫

قُلْ اَذٰلِكَ خَيْرٌ اَمْ جَنَّةُ الْخُلْدِ الَّتِيْ وُعِدَ الْمُتَّقُوْنَۗ كَانَتْ لَهُمْ جَزَاۤءً وَّمَصِيْرًا ١٥

qul
قُلْ
நீர் கேட்பீராக!
adhālika
أَذَٰلِكَ
அது?
khayrun
خَيْرٌ
சிறந்ததா
am
أَمْ
அல்லது
jannatu l-khul'di
جَنَّةُ ٱلْخُلْدِ
ஜன்னதுல் குல்து
allatī
ٱلَّتِى
எது
wuʿida
وُعِدَ
வாக்களிக்கப்பட்டனர்
l-mutaqūna
ٱلْمُتَّقُونَۚ
இறையச்சமுள்ளவர்கள்
kānat
كَانَتْ
அது இருக்கும்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
jazāan
جَزَآءً
கூலியாகவும்
wamaṣīran
وَمَصِيرًا
மீளுமிடமாகவும்
(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கேளுங்கள்: "அந்த நரகம் மேலா? அல்லது பரிசுத்தவான்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலையான சுவனபதி மேலா? அது அவர்களுக்கு (நற்) கூலியாகவும், அவர்கள் சேருமிடமாகவும் இருக்கின்றது. ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௧௫)
Tafseer
௧௬

لَهُمْ فِيْهَا مَا يَشَاۤءُوْنَ خٰلِدِيْنَۗ كَانَ عَلٰى رَبِّكَ وَعْدًا مَّسْـُٔوْلًا ١٦

lahum
لَّهُمْ
அவர்களுக்கு
fīhā
فِيهَا
அதில்
mā yashāūna
مَا يَشَآءُونَ
அவர்கள் நாடுவார்கள்/எது
khālidīna
خَٰلِدِينَۚ
நிரந்தரமாக இருப்பார்கள்
kāna
كَانَ
இருக்கிறது
ʿalā
عَلَىٰ
மீது
rabbika
رَبِّكَ
உமது இறைவன்
waʿdan
وَعْدًا
வாக்காக
masūlan
مَّسْـُٔولًا
வேண்டப்பட்ட
"அதில் அவர்கள் விரும்பியதெல்லாம் அவர்களுக்குக் கிடைக்கும். (அதில்) அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்." (நபியே!) இது உங்களது இறைவன் மீது (அவனால்) வாக்களிக் கப்பட்ட கடமையாக இருக்கிறது. ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௧௬)
Tafseer
௧௭

وَيَوْمَ يَحْشُرُهُمْ وَمَا يَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَيَقُوْلُ ءَاَنْتُمْ اَضْلَلْتُمْ عِبَادِيْ هٰٓؤُلَاۤءِ اَمْ هُمْ ضَلُّوا السَّبِيْلَ ۗ ١٧

wayawma
وَيَوْمَ
நாளின்போது
yaḥshuruhum
يَحْشُرُهُمْ
அவன் எழுப்புவான் அவர்களையும்
wamā yaʿbudūna
وَمَا يَعْبُدُونَ
அவர்கள் வணங்கியவர்களையும்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
fayaqūlu
فَيَقُولُ
கேட்பான்
a-antum aḍlaltum
ءَأَنتُمْ أَضْلَلْتُمْ
நீங்கள் வழிகெடுத்தீர்களா?
ʿibādī
عِبَادِى
எனது அடியார்களை
hāulāi
هَٰٓؤُلَآءِ
நீங்கள்தான்
am
أَمْ
அல்லது
hum
هُمْ
அவர்கள்
ḍallū
ضَلُّوا۟
தாமாகதவறவிட்டனரா
l-sabīla
ٱلسَّبِيلَ
பாதையை
(இணைவைத்து வணங்கிய) அவர்களையும், அல்லாஹ்வை யன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் (விசாரணைக்காக) ஒன்று சேர்க்கும் நாளில் (இறைவன்) "என்னுடைய இவ்வடியார்களை நீங்கள் வழி கெடுத்தீர்களா? அல்லது அவர்கள் தாமாகவே இத்தவறான வழியில் சென்று விட்டனரா" என்று கேட்பான். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௧௭)
Tafseer
௧௮

قَالُوْا سُبْحٰنَكَ مَا كَانَ يَنْۢبَغِيْ لَنَآ اَنْ نَّتَّخِذَ مِنْ دُوْنِكَ مِنْ اَوْلِيَاۤءَ وَلٰكِنْ مَّتَّعْتَهُمْ وَاٰبَاۤءَهُمْ حَتّٰى نَسُوا الذِّكْرَۚ وَكَانُوْا قَوْمًاۢ بُوْرًا ١٨

qālū
قَالُوا۟
அவர்கள் கூறுவர்
sub'ḥānaka
سُبْحَٰنَكَ
நீ மிகப் பரிசுத்தமானவன்
mā kāna
مَا كَانَ
இல்லை
yanbaghī
يَنۢبَغِى
தகுதியானதாக
lanā
لَنَآ
எங்களுக்கு
an nattakhidha
أَن نَّتَّخِذَ
எடுத்துக் கொள்வது
min dūnika
مِن دُونِكَ
உன்னை அன்றி
min awliyāa
مِنْ أَوْلِيَآءَ
பாதுகாவலர்களை
walākin
وَلَٰكِن
எனினும்
mattaʿtahum
مَّتَّعْتَهُمْ
நீ அவர்களுக்கு சுகமளித்தாய்
waābāahum
وَءَابَآءَهُمْ
மூதாதைகளுக்கும் அவர்களுடைய
ḥattā
حَتَّىٰ
இறுதியாக
nasū
نَسُوا۟
அவர்கள் மறந்தனர்
l-dhik'ra
ٱلذِّكْرَ
அறிவுரையை
wakānū
وَكَانُوا۟
இன்னும் ஆகிவிட்டனர்
qawman
قَوْمًۢا
மக்களாக
būran
بُورًا
அழிந்து போகும்
அதற்கு அவை (இறைவனை நோக்கி) "நீ மிகப் பரிசுத்தமானவன். உன்னை அன்றி (மற்றெவரையும்) நாங்கள் எங்களுக்கு காப்பவனாக எடுத்துக்கொள்வது எங்களுக்குத் தகுதியன்று. எனினும், நீதான் அவர்களுக்கும் அவர்களுடைய மூதாதைகளுக்கும் சுகபோகத்தைக் கொடுத்தாய். அதனால் அவர்கள் (உன்னை) நினைப்பதையே மறந்து (தாங்களாகவே பாவம் செய்து) அழிந்துபோகும் மக்களாகி விட்டார்கள்" என்று கூறும். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௧௮)
Tafseer
௧௯

فَقَدْ كَذَّبُوْكُمْ بِمَا تَقُوْلُوْنَۙ فَمَا تَسْتَطِيْعُوْنَ صَرْفًا وَّلَا نَصْرًاۚ وَمَنْ يَّظْلِمْ مِّنْكُمْ نُذِقْهُ عَذَابًا كَبِيْرًا ١٩

faqad
فَقَدْ
ஆகவே, திட்டமாக
kadhabūkum
كَذَّبُوكُم
பொய்ப்பித்துவிட்டனர் உங்களை
bimā taqūlūna
بِمَا تَقُولُونَ
நீங்கள் கூறியதில்
famā tastaṭīʿūna
فَمَا تَسْتَطِيعُونَ
ஆகவே, நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்
ṣarfan
صَرْفًا
திருப்பி விடுவதற்கோ
walā naṣran
وَلَا نَصْرًاۚ
உதவுவதற்கோ
waman
وَمَن
யார்
yaẓlim
يَظْلِم
அநீதி இழைத்துக் கொண்டாரோ
minkum
مِّنكُمْ
உங்களில்
nudhiq'hu
نُذِقْهُ
அவருக்கு சுவைக்க வைப்போம்
ʿadhāban
عَذَابًا
தண்டனையை
kabīran
كَبِيرًا
பெரிய
(ஆகவே, அந்த நிராகரிப்பவர்களை நோக்கி "உங்களை வழி கெடுத்தவை இவைதான் என்று) நீங்கள் கூறியதை இவைகளே பொய்யாக்கி விட்டன. ஆதலால், (நம்முடைய வேதனையைத்) தட்டிக் கழிக்கவும் உங்களால் முடியாது. (இவைகளின்) உதவியைப் பெற்றுக் கொள்ளவும் உங்களால் முடியாது.. ஆகவே, உங்களில் எவன் அநியாயம் செய்து கொண்டிருந்தானோ அவன் பெரும் வேதனையைச் சுவைக்கும்படி நிச்சயமாக நாம் செய்வோம்" (என்று கூறுவோம்). ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௧௯)
Tafseer
௨௦

وَمَآ اَرْسَلْنَا قَبْلَكَ مِنَ الْمُرْسَلِيْنَ اِلَّآ اِنَّهُمْ لَيَأْكُلُوْنَ الطَّعَامَ وَيَمْشُوْنَ فِى الْاَسْوَاقِۗ وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً ۗ اَتَصْبِرُوْنَۚ وَكَانَ رَبُّكَ بَصِيْرًا ࣖ ۔ ٢٠

wamā arsalnā
وَمَآ أَرْسَلْنَا
நாம் அனுப்பவில்லை
qablaka
قَبْلَكَ
உமக்கு முன்னர்
mina l-mur'salīna
مِنَ ٱلْمُرْسَلِينَ
தூதர்களில் எவரையும்
illā
إِلَّآ
தவிர
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
layakulūna
لَيَأْكُلُونَ
உண்பவர்களாக
l-ṭaʿāma
ٱلطَّعَامَ
உணவு
wayamshūna
وَيَمْشُونَ
இன்னும் நடந்து செல்பவர்களாக
fī l-aswāqi
فِى ٱلْأَسْوَاقِۗ
கடைத் தெருக்களில்
wajaʿalnā
وَجَعَلْنَا
ஆக்கினோம்
baʿḍakum
بَعْضَكُمْ
உங்களில் சிலரை
libaʿḍin
لِبَعْضٍ
சிலருக்கு
fit'natan
فِتْنَةً
சோதனையாக
ataṣbirūna
أَتَصْبِرُونَۗ
நீங்கள் பொறுப்பீர்களா?
wakāna
وَكَانَ
இருக்கிறான்
rabbuka
رَبُّكَ
உமது இறைவன்
baṣīran
بَصِيرًا
உற்று நோக்குபவனாக
(நபியே!) உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த நம்முடைய தூதர்களெல்லாம் நிச்சயமாக (உங்களைப் போல்) உணவு உண்பவர்களாகவும், கடைகளுக்குச் செல்பவர்களாகவும் இருந்தார்கள். எனினும், உங்களில் சிலரை சிலருக்குச் சோதனையாக ஆக்கி வைத்தோம். ஆகவே, (நம்பிக்கையாளர்களே! இந்நிராகரிப்பவர்கள் துன்புறுத்துவதை) நீங்களும் சகித்துக் கொண்டிருங்கள். (நபியே!) உங்களது இறைவன் (அனைத்தையும்) உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௨௦)
Tafseer